தெளிந்த ஓடை
பாலு மிகவும் பொறுமையானவன்,அதிகமாக பேசக்கூட மாட்டான். அலுவலகம் முடித்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான். முகத்தை கழுவிவிட்டு துண்டால் துடைத்துக்கொண்டே கைலிக்கு மாறுவதற்காக அறைக்குள் நுழைந்தான். அதற்குள் சட்டைப்பையிலிருந்து
பாலு மிகவும் பொறுமையானவன்,அதி
சத்தமிட்டது கைபேசி.
“ஹலோ” என்றான்.
“அத்த பேசுறேன் மாப்ள”
“சொல்லுங்கத்த”
“நான் பஸ்டான்டுக்கு வந்துட்டேன் , கொஞ்சம் வண்டில வந்து
அழைச்சுட்டு போறீங்களா”
அவன் அத்தை வரும் விஷயம் முன்கூட்டியே தெரியாததால் சட்டென்று
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கௌரி வர சொல்லிருப்பாளோ,
என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலயே , என்ன திடுதிப்புனு
வந்துருக்காங்க.. இவ்வளவையும் “இதோ
வரேன்த்த” என்று பதில் சொல்வதற்குள் யோசித்து முடித்துவிட்டான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் பைக்கில் அத்தை முன் நின்றான்.
“என்னத்த திடீர்னு, வரன்னு ஒரு போன் கூட பன்னல”
“கெளரிதான் மாப்ள திடீர்னு சாய்ங்காலம் நாலு மணிக்கிட்ட போன்
பன்னி உடனே கிளம்பி வர சொன்னா. என்னனு கேட்டேன் நேர்ல
பேசிக்கலாம் வான்னு சொல்லிட்டா”
இருவருக்கும் விஷயம் ஒன்றும் பிடிபடவில்லை .
அப்பா இல்லாத பொண்ணுங்ரதால அதிகமாவே கண்டிச்சுதான வளத்தேன், என்ன பண்ணாலோ தெரியலையே என்று அவளும்; கல்யாணம் ஆகி இந்த ரெண்டு வருஷத்துல குழந்தை இல்லைங்கரத தவிர அவ மனசு நோகுற மாதிரி ஒரு வார்த்தை கூட சொன்னதில்லையே, இப்ப அத்தைய எதுக்கு வர சொல்லிருக்களோ தெரியலையே என்று அவனும், அவரவர் கோணத்தில் ஏதேதோ யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.
கெளரி பக்கத்தில் இருந்த ஸ்கூலில் டெம்பரரி டீச்சராக ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தாள். அவர்கள் வீடு
வந்து சேர்வதற்கும் கெளரி ஸ்கூல் முடித்து வருவதற்கும் சரியாக இருந்தது.
வீட்டிற்குள் நுழைந்ததுமே “எதுக்குடி உடனே புறப்புட்டு வர
சொன்ன, அப்புடி என்னடி தலை போற காரி யம்” அம்மா ஆரம்பித்தாள்.
“தலை போற காரியம்லாம் இல்ல உடனே ஊருக்கு போக வேண்டிய காரியம், அதான் வர சொன்னேன்”
“யாருடி ஊருக்கு போறா? புரியுற மாதிரி தான் பேசேன்”
“நான் நாளைலேர்ந்து திருப்பூர்ல ஒரு ஆபிஸ்ல வேலைக்கு சேர
போறேன், போன வாரமே அப்பாயின்ட்மென் ஆர்டர் இமெயில்ல வந்துடுச்சு .
போறேன், போன வாரமே அப்பாயின்ட்
சம்பளம் மாசம் ஆறாயிரம், இன்னைக்கு நைட்டே கிளம்புறேன். அதான்
சொல்றதுக்காக கூப்பிட்டேன்”
அம்மாக்காரி ஆடிப்போனாள். அவனுக்கோ இதயத்தில் இடி வந்து
இறங்கியது போல் இருந்தது, பின்ன இருக்காதா? அவனுக்கு உறவு என்று
சொல்லிக்கொள்ள அவள் ஒருத்திதான். வேறு யாருமே கிடையாது. இவள்
இப்படி ஒரு முடிவுக்கு வந்ததற்கு இருவருக்குமே காரணம் புரியவில்லை . அவனுக்குப் பேச்சே வரவில்லை . தன் மனைவியைப் பார்த்தவாறே
அப்படியே உறைந்துபோய் நின்று விட்டான் .
“என்னடி சொல்ற? படிச்ச பொண்ணுதானடி நீ? ஏதாவது யோசிச்சுதான்
பேசுறியா?”
“படிச்சதுனாலதாம்மா பேசுறேன்,
“படிச்சதுனாலதாம்மா பேசுறேன்,
படிச்ச படிப்பெல்லாம் வீணாபோயிடக் கூடாதேன்னுதாம்மா பேசுறேன், எம்.ஏ வரைக்கும் படிச்சுட்டு குடும்பத்தைகவனிச்சுக்குறதுலயே வாழ்க்கைய ஓட்டனுமா , நானும் சுதந்திரமா வாழனும்னு ஆசைப்படுறேன், அதுக்கு நான் சம்பாரி ச்சு சொந்த கால்ல நின்னாதான் முடியும், அதான் இந்த முடிவு”
“இப்ப உனக்கு என்னடி சுதந்திரம் கெட்டுப்போச்சு?”
“எனக்கு ஆசையா ஏதாவது வாங்கிக்கனும்னா கூட இவரோட சம்பளத்தை
எதிர்பாத்து நிக்க வேண்டியிருக்கு . கேட்டா தராரு, இல்லைனு சொல்லல . இருந்தாலும் போதுமான அளவுக்கு நானே சம்பாரிக்க
ஆரம்பிச்சுட்டா கண்டவங்ககிட்ட பிச்சை கேட்டு கையேந்த வேண்டியதில்ல பாரு”
“அடி செருப்பால, கணவன கண்டவன்னு சொல்றதுக்குதான் உன் படிப்பு
உனக்கு கத்துக் கொடுத்துச்சா?” அம்மாக்காரி ஆத்திரமாக கத்திவிட்டாள் .
உறைந்து போனவன் அப்படியே உடைந்தும் போய்விட்டான், ஆனாலும்
மனைவியை எதிர்த்து ஒன்றும் பேசவில்லை .
“மாப்ள நீங்க கொஞ்சம் ரூம்ல உட்காருங்க , இந்த சனியன என்னனு
கேட்டுட்டு வரேன்” அவன் உள்ளே போய்விட்டான் .
“பசியில குழந்தை அம்மானு கூப்பிட்டுச்சுன்னா அது பிச்சை
கேட்குதுன்னு அர்த்தமா, அது அந்த உயிரோட உரிமைடி, புருஷன்கிட்ட
கைநீட்டி காசு வாங்குறதும் பொண்டாட்டிக்கு அப்படிப்பட்ட
உரிமைதான்டி. அத மொதல்ல புரிஞ்சுக்கோ .
ஏண்டி, கொஞ்சம் கூட யோசிக்காம
இப்படி வார்த்தையை விட்டுட்டியே அவரு மனசு எவளோ
கஷ்டப்பட்டுருக்கும், இதுவே வேற எவனாவது
இருந்துருந்தான்னா அந்த வார்த்தையைக்
கேட்டதுக்கு உன்ன கண்ட துண்டமா வெட்டிருப்பான்”
“வெட்டுவான் வெட்டுவான் ஏன் வெட்டமாட்டான் , சாப்பாட்டுக்கே
புருஷன நம்பி குடும்பம் நடத்துற பொண்டாட்டியா இருந்தா அப்படிதான் வெட்டுவான், அப்படி வெட்டுபட்டு சாக கூடாதுன்னுதான் நானும்
முழிச்சுக்கப்பாக்குறேன், சொந்தக்கால்ல நிக்கனும்னு
நினைக்குறது தப்பா? இனிமே நானும் கை
நிறையா சம்பாரிக்க போறேன், வாரம் வாரம் வீட்டுக்கு வந்துடுவேன்
ரெண்டு பேரு சம்பளத்திலயும் குடும்பத்த நடத்துலாம்னு சொல்றேன், அப்ப எனக்கும் கொஞ்சம் பிடிப்பு இருக்கும்ல ”
”குடும்பத்த விட்டுட்டு போய் அப்புடி என்னத்தடி அள்ளிக்கட்டிட போற ”
“வெளியுலகம் தெரியாம வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கெடக்கச் சொல்றியா ”
“வீட்ட விட்டுட்டு வெளியிலயே முழுசாக் கெடந்துடாதன்னு சொல்றேன்”
பாலு வந்தான்.
“அத்த அவ போகட்டும் விடுங்க” என்றுசொல்லிவிட்டான்.
“பாரு, அவருக்கு பெண் முன்னேற்றத்தோட முக்கியத்துவம்
தெரிஞ்சுருக்கு, நீ இன்னும் அந்தக் காலத்துலயே இருக்க” பாலுவின் மனதை புரிந்து கொள்ளாமல் சொன்னாள் கெளரி. புயல் அடித்து ஓய்ந்தது . அத்தையை முதலில் பஸ் ஸ்டாப்பில் விட்டுவிட்டு வந்தான்.
அதற்குள் கெளரி கிளம்பியிருந்தாள் . அவளையும் அழைத்துக்கொண்டு
சென்று பஸ் ஏத்தி விட்டான். மறுநாள் காலையில், பாலு ஒரு
வாரத்திற்கு அலுவலகத்திற்கு லீவு சொல்லிவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்து கவலையோடு படுத்து
விட்டான்.
கெளரி புது வேலையில் சேர்ந்து விட்டாள் . வரவு செலவுக் கணக்கு
பார்க்கும் அக்கெளண்ட்டிங் வேலைதான் . ஏற்கனவே இருந்த
அக்கெளண்டன்ட் பிரபாவிற்கு
அஸிஸ்டென்டாக வேலைசெய்தாள். இடையிடையே தன்
சொந்த கதையையும், வந்த
காரணத்தையும் சொன்னாள். மதிய உணவு
இடைவேளை நேரம் வந்தது. மேனேஜர்
சாப்பிட ஹோட்டலுக்குக் கிளம்பி விட்டார் . அதன் பிறகு பிரபா, கெளரி , டைப்பிஸ்ட் மாலா மூவரும் சாப்பிட அமர்ந்தனர்.
“கெளரி, சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காத . நீ எடுத்த முடிவு எனக்கென்னமோ தப்புனு படுது” பிரபா மனதிலிருந்து பேசினாள்.
“என்ன மேடம், வெளியுலகம் தெரிஞ்சுக்க வேணாமா? இதுமாதிரி
ஆபிஸ்க்கு வந்து போற பொண்ணுங்களுக்குத்தான எல்லாம் தெரியும்”
“ஆபிஸ் வந்து போற பொண்ணுங்களுக்கு என்ன பெருசா வெளி உலகம்
தெரிஞ்சுடும்னு நினைக்கிற? வீட்லயே இருக்குறவங்க காய்கறி
வாங்குறதுக்கும், மளிகை ஜாமான்
வாங்குறதுக்கும் டெய்லி வெளியில வருவாங்க. வேலைக்கு வந்து போறவங்க , டெய்லி பஸ்ல வரதுக்கு அரைமணி
நேரமும், போறதுக்கு அரைமணி நேரமும்
அதிகபட்சமா ஒருமணிநேரம் வெளி உலகத்தை பார்க்கப் போறாங்க,
மத்தபடி ஆபிஸ்குள்ள வந்துட்டா பொழுதனைக்கும் ஒரே