ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday 25 November 2013

போட்டிச்சிறுகதை- 1

சிறுகதை - ஒரு உயிர் ஒரு உறவு
............................................................

ஆறு மாதங்களுக்குப் பின் அன்று தான் அவளை பார்த்தேன். ஜன்னல் கம்பி வழியாக என்னை கண்ட அவள் உடனே உடைந்து அழ ஆரம்பித்திவிட்டாள், அவள் அருகில் சென்றேன், கனிவும் வெறுப்பும் சேர்ந்த கலவையில் சொன்னாள், நீ இங்கே வராதே என்றும் நீ வாழ வேண்டியவன் என்றும், எனக்கு மனம் திடுக்கென்றது, அவள் அழுது தீர்த்தாள்.

என்னால் தாங்க முடியவில்லை ஆணாக பிறந்ததால் அழுகையை அடக்க கற்பிக்கப்பட்டிருந்தேன், ஆனால் மனம் மட்டும்  வெடித்து குமிறிய நிமிடங்கள் அது, என் வீட்டில் தேவதை போல வாழ்ந்த அவள் இன்று குப்பைத்தொட்டி போல சுருண்டு கிடக்கிறாள், சதைகள் தொலைத்த உடல்கள் அழுக்கேறிய மயிர்கள், கண்ணீர் வடித்தேகரந்து போன கன்னங்கள், அவள் சுவைத்த அதே தாயின் மார்பில் எச்சிப்பாலை சுவைத்தவன் நான், இன்று எச்சிலை போல சுருண்டு கிடக்கிறாள் என் கண் முன்னால்.

அப்போது தான் அவளை விடுத்து அருகில் கண்டேன் தொழுநோயாளர் பகுதி என்னும் சட்டகம் ஒன்று தொங்கியது  என்னை எப்போதும் அணைத்து கிடப்பவள் இன்று ஆறுதலுக்கும் யாருமின்றி  கிடந்த அந்த நிமிடங்களை எண்ணிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

வன்னி போரில் அப்பா இறந்த பின், அவள், நான் எங்கள் இருவரையும் சுமந்த தாயென மொத்தம் மூன்று பேர் இருந்த அந்த அறையில் இன்று நானும் தாயும் மட்டும் இப்போது என் நினைவலைகள் அவளை விடுத்து வேறு சிந்தையில் அலைபாயவில்லை தூக்கமும் தூரே கிடந்தது மனதெங்கும் அவள் பரவிகிடந்ததால், அப்படியே கண் தூக்கத்தின் வாசல் சென்றுகொண்டிருந்த போது கைபேசி கதறியது. 

எடுத்து பேசினேன் பரிச்சயம் இல்லா புதிய குரல் நீங்க கீதாவின் தம்பியா என்றதும், என் தூக்கம் தெறித்து ஓடியது பெரு மூச்சுடன் ஆம் என்றேன், சாரி என்ற ஆங்கில வார்த்தையுடன் அந்த குரல் சொன்னது உங்கள் அக்கா இறந்து விட்டாரென்று அழுகவும் முடியவில்லை, அடக்கவும் முடியவில்லை,  அருகில் கிடந்த அம்மாவை எழுப்பி செய்தியை சொன்னேன். 

அதுவரை அவருள் தூங்கிக் கொண்டிருந்த, துக்கம் வெடித்து கிளம்பியது என்ன செய்வதென்றறியாமல் வீட்டையே சுத்தி சுத்தி வந்தார், என் கைகள் நடுக்கம் கொண்டது அது குளிருக்கான நடுக்கம் இல்லை என்பதை என் ஆழ் மனம் அறிந்திருந்தது, என் சிறு பிள்ளை ஸ்தானமும் அக்காவின் அரவணைப்பும் ஒரே நேரத்தில் அற்று போக வீட்டின் ஆண்மகன் என்ற புதிய பொறுப்பு ஒட்டிக் கொண்டது, ஈம சடங்கு செய்ய பணம் வேணும், அக்காவை எப்படி வீட்டுக்கு கூட்டி வருவது என்ற எண்ணம் மட்டுமே எனக்கு, யாரிடம் சொல்வது மீசை கூட முளைத்திராத நான் குடும்ப தலைவர் ஆனேன், அம்மாவுக்கு அறுதல் சொல்ல என்னால் முடியவில்லை, வேகமாக சென்றேன் பக்கத்து வீட்டின் கதவை தட்டினேன் குகன் அண்ணன் வெளிப்பட்டார், கையை பிடித்து அழுதேன் அவரின் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்றோம்,

யாரும் அற்ற சாலைகள், மழைபெய்து ஓய்ந்திருந்த மின்மினி பூச்சி வெளிச்சத்தில் மின்னும் தார் சாலைகளை கடந்து மருத்துவமனை உள்ளே சென்றோம், நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் எங்களை கண்டதும் ஒரு அறைக்கு அழைத்து சென்றார்,எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஓ இதுதான் பிணவறையா, அங்கங்கே பிணங்கள் அறுபட்டு கிடந்தன, எரிந்த சடலம் ஒன்றை கடந்து உள்ளே சென்றேன், பயம் சூழ்ந்தது ஆனால் என் கண்கள் அவளை மட்டும் சுற்றிலும் தேடியது.

ஒரு மூலையில், ஒரு பொங்கல் தினம் நானும் அவளும் சென்று தேர்வு செய்த இரவு உடை தென்பட்டது, வேகமாய் நடந்தேன் பெருத்த உருவம், என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆமாம், உடல் வீங்கிய அந்த உருவம் என் அக்கா, இப்போது என்னால் அழுக முடியாது, அவளை என் வீட்டுக்கு கூட்டிச்செல்ல வேண்டும் அப்போது ஒரு சத்தம், எங்களை அழைத்து வந்த அவர்தான் பிணத்த சீக்கிரம் தூக்குங்கப்பா என்றார்,

என் அக்கா பிணமா ...!!!

குகன் அண்ணா ஆம்புலன்ஸ் அழைத்து வந்தார், அங்கு அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அக்காவை ஆம்புலன்சில் ஏற்றினார் நானும் அண்ணாவும்  அக்காவின் பக்கத்தில் இருந்தோம் இப்போது அக்காவை பார்க்க எனக்கு பயமாக இருந்தது,  ஆம்புலன்ஸ் குலுங்கி குலுங்கி சென்றது, அக்காவின் உடல் ஆடியது, ட்ரைவர் சொன்னார் பிணம் விழுந்துட போகுது 

என் அக்கா பிணமா?!!

ஆம்புலன்ஸ் அமைதியான சாலையை கிழித்துக்கொண்டு சென்றது, இவ்வளவு நாள் எனக்காகத்தான் காத்திருந்ததா, இந்த உடல் பிணமாக மாற,

இறுதி ஊர்வலத்திற்கான அனைத்தையும் குகன் அண்ணாவுடன் சேர்ந்து செய்துவிட்டேன் என் அக்காவின் இறப்பு எனக்கு புது தகுதியையும் தேடி கொடுத்துள்ளது இன்று நான் பெரிய பையன் எல்லாரும் சொல்கிறார்கள் அம்மாவை நீதான் பாத்துக்கணும், எனக்கு யாரு பாடம் சொல்லி கொடுப்பா, நான் ஹாஸ்டல் போகனுமா......அம்மாவை யார் பார்த்துப்பா, லீவுல வீட்டுக்கு வந்ததும் இனி யாரு என்னோட சண்ட போடுவா ? அக்க வேலைக்கு போயி வாங்கி தந்த சட்டைய இப்ப நான் போட்டு இருக்கேன் அப்படியே சரிந்து அமர்ந்த போது ஒரு குரல் தம்பி வாடானு

ஆ......

கைகளெல்லாம் வலிக்குது, என்னால இந்த கலவை சட்டிய தூக்கமுடியல குகன் அண்ணனுக்கு காசு கொடுக்கணும், அம்மாவை பாத்துக்கணும் ஸ்கூல் புத்தகத்த எடைக்கு போட்டு அதுல 10 ரூபா வச்சு இருக்கேன் அதையும் சேர்த்து குகன் அண்ணனுக்கு கடன கட்டிடலாம் ஆனா அக்கா ... அது தான் பிணமா போச்சே

டே ஆம்பள வாடா இந்த கல்ல தூக்கு .......
இந்த வரேன் அக்கா .....