ஆன்லைனில் புத்தகம் வாங்க

Thursday 19 December 2013

போட்டிச் சிறுகதை-29

சிறுகதை- 16GB

அனிதா வீட்டை நோக்கி  என்னோட சைக்கிள் பறந்தது

கண்களை துளாவ விட்டு அனிதா வீட்டை அடையும் முன்னே வாசலிலே அனிதா காத்துக் கொண்டு இருந்தவள் என்னை பார்த்ததும்,

"ஹே கலை, சீக்கிரம் வாடி ஸ்கூல்க்கு லேட் ஆகுது பாரு"

"ஹே குண்டுஸ் அனி தானா இது.. ஒண்டரை மாசம் லீவ் ல உனக்கு படிப்ஸ் மேல லவ்ஸ் வந்துருச்சாடி? "

"ஹே பேசமா வாடி கலை, சீக்கிரமா போனாத்தான்  கிளாஸ்ல லாஸ்ட் பெஞ்ச்ல இடம் புடிக்க முடியும் "

"சாரிடி அனி, ஒரு செகண்ட் உன்னை தப்பா புரிஞ்சிட்டேன். மன்னிச்சிருடி. அனி ,இன்னும் ரெண்டு வருஷம் தான்டி ஸ்கூல் அப்புறம் நாமளும் காலேஜ் போக ஆரம்பிச்சிடுவோம் .நினைச்சாலே சந்தோசமா இருக்குடி" .

"ஹே நிறுத்துடி, பிளஸ் டூ பாஸ் பண்ணினாதான் காலேஜ் போக முடியும் கலைமா .நாம பத்தாவது பாஸ் பண்ணினதே தெய்வ குத்தம் ...இதுல பன்னிரெண்டும் பாஸ் பண்ணினா தப்பு செல்லம் "

"அடிங் கொய்யாலே  வாய மூடுடி..பாஸ் பண்ணல,என்னை எங்க வீட்டுல டின்னு கட்டிடுவாங்க "

"ஸ்கூல் வந்துருச்சி கண்ணமா வாங்க கிளாஸ் தேடி போவோம்" 

கிளாஸ் கண்டு புடிச்சி உள்ள போனா வடை போச்சே..நம்ம சிவசங்கரி செட் கடைசி பெஞ்ச்ல இடம் புடிச்சிட்டாங்களே..

"சிவா நாங்க தான் பத்தாவதுல கடைசி பெஞ்ச்ல இருந்தோம். எங்களுத்தான் இந்த பெஞ்ச் சொந்தம்.உங்க செட்ட முன்னாடி பெஞ்ச்ல உட்கார சொல்லு", அனிதா ..

"ங்கே ங்கே ங்கே ங்கே கடைசி பெஞ்ச் வேணும்னா அதுக்கு முன்னாடியே வந்து இடம் புடிச்சி இருக்கணும் ..அதான் முன்னாடி  பெஞ்ச் ல place இருக்குல போய் உட்காருங்க", சிவ சங்கரி .

"பாருடி அனி, நம்ம gang பக்கிஸ் ஒண்ணு கூட வந்து இடம் புடிக்கல..சரி லாஸ்ட் பெஞ்ச்க்கு முன்னாடி தான்  நம்ம தலை எழுத்து ஹே அங்க பாருடி அனி  நம்ம friends வர்றாளுக " 

(நான், அனிதா ,புவனேஸ்வரி, ஹேமலதா அப்புறம் அருள் ஜோதி இந்த பஞ்ச பாண்டவிகள் சேர்ந்தது தான் எங்க gang.)

"வாங்கடி  மேனா மினுக்கிகளா ..ஸ்கூல்க்கு சீக்கிரமா வந்து கடைசி பெஞ்ச் புடிக்கணும்னு  ஒரு அக்கறையே இல்லை உங்களுக்குலாம்”,அனிதா.


"விடுடி பர்ஸ்ட் நாளே ஆரம்பிச்சிடாதிங்க" னு ஹேமா சொல்ல அந்த நேரம் கீதா மிஸ்சும் வர்றாங்க ...

''பதினோராம் வகுப்பு முதல் நாள் வகுப்புக்கு வந்து இருக்கும் எல்லாருக்கும் வாழ்த்துக்கள். .பதினோராம் வகுப்பு பாடங்கள் எல்லாம் முதல் மூணு மாசத்துல முடிச்சிடுவோம் ..அப்புறம் பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் செப்டம்பர் துவங்கி ஜனவரி ல முடிச்சிடுவோம் ..ஜனவரி ல இருந்து revision  தான் ....பத்தாவதுபோல  எளிமையாக பாடங்கள் இருக்காது.நீங்க படிப்புல ஆர்வமும் கடின உழைப்பும் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் ...உங்க எதிர்காலத்தை நிர்ணயிக்க போறதே இந்த இரண்டு வருட காலம் தான்..நான் மற்ற டீச்சர்'ஸ் மாதிரி  இருக்க மாட்டேன். ...என் பாடத்துல 'ஸ்ட்ரிக்ட்' ஆ இருப்பேன் ..சண்டே ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும்.ஜூரம்.பாட்டி தாத்தா செத்துட்டாங்க ன்னு excuse  கேக்க கூடாது ...மீறி லீவ் போட்டா எக்ஸாம் எழுத ஹால் டிக்கெட் கொடுக்க மாட்டோம்..ஓகே girls பாடத்தை ஆரம்பிப்போமா?".....(கீதா டீச்சர் பேசியதும் ஒண்ணு  மட்டும் புரிஞ்சது.செத்துப் போனாலும் ஸ்கூல் குள்ள தான் சாகணுமாம்!...)

"என்னாடி அனி,முத நாளே இப்படி மொக்கை போடுது இந்த பொம்பள? "

"யாரந்த பிரகஸ்பதிகள்  பேசுறது. ..ஒழுங்கினங்கள்" என் கிளாஸ் ல இனிமே பேசுறதா இருந்தா எந்திரிச்சி வெளியே போய்டுங்கோ ..."

(உஸ்.....அப்போ இந்த குண்டோதிரி  கிளாஸ் நம்மளால அட்டெண்ட் பண்ணவே முடியாதே .)

அப்புறம் வேதியல்,விலங்கியல், தாவரவியல் ன்னு எல்லா மிஸ் ம்  அவங்கவங்க subject  பற்றி ஏதோதோ மந்திரம் ஓதினாங்க..ஒண்ணு மட்டும் புரிஞ்சது. படிச்சி கிழிச்சி எல்லாருமே நல்ல மார்க் வாங்கணுமாம்...(டீச்சர் முதல்ல நீங்க எங்க உயிரை வாங்காதீங்கோ,ப்ளீஸ்!)முதல் மூணு மாசம் நல்லா  தான் போனது.வேதியியல் டீச்சர் ல இருந்து எல்லா டீச்சர் களும் நல்லா தாலாட்டு பாடினாங்க...பாடத்தை புரிய வைக்க யாருமே முயற்சி செய்யாமல் யாரு பாடங்களை முதலிலே முடிப்பது எண்டு டீச்சர்ஸ்குள்ளவே போட்டா போட்டி..

காலைல நாலு மணிக்கு எந்திரிக்கணும்..5மணி இருந்து 7 மணி வரை maths டியூஷன் கிளாஸ். ...7 .30 ல இருந்து 9 மணி வரை ஸ்பெஷல் கிளாஸ்.. 9 மணி இருந்து 5 மணி வரை, ரெகுலர் கிளாஸ் ...5.30 ல இருந்து 8 வரை,ஸ்பெஷல் கிளாஸ். 8.30 ல இருந்து 11.30 வரைக்கும் study  hours பிளஸ்  writinghours  ...12 மணிக்கு தூக்கம் அந்த நாலு மணி நேரம் தூக்கத்திளையும் கீதா டீச்சர் மாலினி டீச்சர் அசைன்மெண்ட் எழுதமா அடி வாங்குற மாறி கனவு வரும் .

சிந்திக்க கற்றுக் கொடுக்க வேண்டியவங்க மனப் பாடம் பண்ண கற்றுக்கொடுத்தாங்க.. யாரோ ஒருவரின் கண்டுபிடிப்பின் காலத்தையும் பெயரையும் அதன் நன்மைகள் தீமைகளையும் மனப் பாடம் பண்ண கற்றுக் கொடுக்கார்களே தவிர அதை  ஆராய்ந்து புது கண்டுபிடிப்புக்கு விதை தூவ மறந்துட்டாங்க..காலக் கோட்டில் பெயர் களை மனப் பாடம் பண்ணினா 15 மார்க் எண்டு சொல்லி தர்றவங்க  காலக் கோட்டில் பெயர் பதிக்க சொல்லி தர்றதில்லை ...

 நாட்கள் நகர்ந்து,நாங்களும் அரசுத் தேர்வை நோக்கி அடியெடுத்தொம் ..

கலை : "ஹேமா நீ எப்படி படிச்சி இருக்க "

ஹேமா :"என்னோட மண்டை குள்ள 8 gb  physics யும்,7 gb  chemistry,பிளஸ் 7.2 gb  maths,6.8 gb  biology  யும், 1 gb  ல தமிழும்,1.5 இங்கிலீஷ் யும் ஸ்டோர் பண்ணி வைச்சி இருக்கேன் டி "

ஹேமா :"நீ டி கலை?"

கலை :"நானும் உன்னை மாறி தான் physics க்கு  மட்டும்,10 gb போட்டு வைச்சி இருக்கேன் டி ". 

புவி :"ஜோ வோட தமிழ் மெமரி ல எதோ வைரஸ் அட்டாக் ஆகிடுச்சாம்..ஆன்ட்டி வைரஸ் போட்டு சரி ஆனா ஓகே இல்லைனா பெரிய problem ".

ஹேமா :"புவி உன் மண்டை குள்ள எவ்ளோ ஸ்டோர்  பண்ணி இருக்க ?

புவி :"நான் 5 gb  chemistry ,4 gb  physics ,2 gb english ,9 gb தமிழ் ".

அனி :"என்னடி சொல்ற  புவி,9 gb  தமிழ் க்கா?... subject  மிஸ் யாராவது பார்த்தா உன்னை திட்டப் போறாங்க பாரு ...மெயின் subjects  தான் நிறைய space கொடுக்கணும்  கீதா!  மிஸ் சொன்னது   உன் மெமரி ல save  ஆகலையா?"

பேசிட்டு இருக்கும் போதே திடீர்னு  ஜோ கீழ விழுந்திட்டா .

கலை :"புவி அனி  யாராவது தண்ணி எடுத்துட்டு வாங்க சீக்கிரம்".

ஹேமா :"ஜோ....ஜோ....ஹே...ஜோ என்னாச்சி? "

ஜோ :"தெரில மண்டைக்குள்ள என்னவோ ஆச்சி"!

கலை :"நாளைக்கு எக்ஸாம் நினைச்சி பயந்துருப்ப ஜோ ஒண்ணுமில்லை சரி ஆகிடும்".

ஜோ :"ஹே என்னோட தமிழ் மெமரி வைரஸ் ல லாஸ் ஆன மாறி இருக்குடி".

ஹேமா :"என்னடி சொல்ற??இரு study மண்டை meter வைச்சி உன்னோட மண்டை மெமரி ய செக் பண்ணிடலாம்..புவி,உன்கிட்ட தானே study மண்டை மீட்டர் இருக்கு அவ மண்டைல வைச்சி பாரு ".

புவி  :"டி ,ஜோ வோட மண்டைக்குள்ள தமிழ் மெமரி எல்லாம் லாஸ்ட் ஆகிருச்சி ..இப்போ இருக்குறது basic தமிழ் மெமரி தான் ...பரீட்சை ல அவளால எதுமே  எழுத முடியாது நாளைக்கு எக்ஸாம்  இப்போ நம்ம கிட்ட டைம் இல்லை என்ன செய்ய சொல்லுங்க?யாராவது ".

கலை :புவி,சீக்கிரமா,ஜோ தமிழ் மெமரி ய format  பண்ணணும்.கொஞ்சம் delay பண்ணினாலும்,அவளோட மற்ற  subjects யும்  delete பண்ணிடும் அந்த "வைரஸ்"!

புவி :"முடியாது கலை suppose format  பண்ணும்போது மற்ற  சப்ஜெக்ட்  மெமரி யும் லாஸ் ஆகிடும்!"

ஹேமா :"புரிஞ்சிக்கோ புவி format  பண்ணலண்ணாலும் அவளுக்கு எல்லா subject  மெமரி யையும் அந்த வைரஸ் affect  பண்ண தான் போது..delay  பண்ணாத ப்ளீஸ்!"

அனி :"ஜோ நீ என்ன சொல்லுற உன்னோட மண்டை மெமரி பற்றி தான பேசுறோம்..நீ சொல்லு ஜோ  "

ஜோ :"format  பண்ணிடுங்கடி".

புவி :"ஜோ என்னப்  பேசுற ...நாளைக்கு எக்ஸாம்.ஒரு நாளைக்கு நம்மளால 300 kb -400 kb மண்டைக்குள்ள store  பண்ணுறதே கஷ்டம் ..அட்லீஸ்ட் உன் மண்டைக்குள்ள 1 gb  ஒரு subject  கு இருந்தா தான் பாஸ் பண்ண முடியும்."

கலை :"புவி  நீ பயமுறுத்தாத ...ஏதாவது  பண்ணுவோம் பா  .. ஹேமா,புவி நீங்க ரெண்டு பெரும் ஜோ வுக்கு format  பண்ணுங்க ..நானும் அனிதாவும் யோசிக்கிறோம் என்ன செய்யலாம்னு".
......
அனி   :"ஜோ வோட மண்டைக்குள்ள ஒரு external  ஹர்ட் டிரைவ் போட்டுட்டா அவள் எக்ஸாம் எழுதலாம் தானே "

கலை :"எழுதலாம்அனி .ஆனா எக்ஸாம் க்கு  முன்னாடி நம்மள Low energy X  ray scanning பண்ணுவாங்கள்ள  அதுல தெரிஞ்சிடும் "
...................
கலை :" எனக்கொரு ஐடியா அனி ,இப்போ நம்ம பிளான் என்னன்னா ஜோ வோட மண்டைக்குள்ள நெட்வொர்க் ஷேரிங்  போடுறோம் ..ஜோ வோட முன்னாடி உட்கார்றது அனிதா நீ தான்  உன்ட்ட  இருந்து ஷேரிங் போட்டுடலாம்..

“ஹே girls எல்லாரும் கேளுங்க நம்ம பிளான் என்ன ன்னா எக்ஸாம் ஹால் குள்ள போறதுக்கு முன்னாடி  அதாவது scanning   ஜோ மண்டையும் அனி  மண்டையும் நெட் வொர்க் ல connect  ஆகி இருக்க கூடாது.. ஹால் குள்ள போனதும் நம்ம ஜோ மண்டை  அனிதா  மண்டை க்கு ஷேரிங் request  அனுப்பும் .அனிதா  மண்டை அச்செப்ட் பண்ணினா ரெண்டு மண்டையும் ஷேர் பண்ணும் மெமரி ய "

ஹேமா: "குட் ..ஆனாலும் நெட்வொர்க் ஷேரிங் பண்ணிட்டு இருக்கும்போது நடுவுல examiner scanning  பண்ண வந்தா மாட்டிக்க சான்ஸ் இருக்கே 

கலை :" நல்லக் கேள்வி ஹேமா நாம use பண்ண போறது IR Technology..அதாவது infra red rays  மூலமா .. தெளிவா சொல்லணுமுன்னா  ஜோ க்கு ஸ்பெஷல் கம்மல் கொடுக்கப் போறோம் அது தான் infra red produce  பண்ணும்..அணியோட மண்டைக்குள்ள infra rred rays detector இன்ஸ்டால் பண்ணிட்டா easy ஜாப் .ரெண்டு மண்டைகளும் infra red rays மூலம் informationய ஷேர் பண்ணிக்கும் ...

ஹேமா :"வாவ்வ்வ்வவ்வ்வவ்  சூப்பர் ஐடியா ...அனி  உனக்கு ஒன்னும் problem  இல்லை ல .

அனி :" நோ பப்ரோப்ளம்டி.."


புவி : ஜோ மண்டையும் அணி மண்டையும் சரியா வேலை செய்து ஜோ பாஸ் பண்ணுவாளா மாட்டாளா ன்னு ரொம்ப பயமா இருக்கு ...

ஹேமா :ஏண்டி IR டெக்னாலஜி மேல நம்பிக்கை இல்லையா

புவி :IR டெக்னாலஜி மேல ரொம்ப நம்பிக்கை இருக்குடி ஆனா அனி மண்டைக்குள்ள மேட்டர் இல்லை ன்னா ஜோ fail தான...

ஹேமா : ஹே அப்படிலாம் இல்லை அனி பாஸ் ஆகிடுவா ..சரி ஜோ உனக்கு கம்மல் ரெடி இதுதான் நீ எக்ஸாம் க்கு போட்டுட்டு வரணும் ..அனி க்கும் சாப்ட்வேர் லோட் பண்ணியாச்சி
........................
அரசுத் தேர்வுகென்று  எங்களது கணினி மூளையில  ஸ்டோர்  செய்து வைத்ததை விடைத் தாளில் லோட் பண்ணி விட்டு தேர்வு முடிந்த அன்றே எல்லாருடைய மண்டையை யும் format பண்ணினோம்..

........................

இரண்டு வருட ஜெயில் வாழ்க்கையின் தீர்ப்பு வரும் நாள் இன்று ... 

மனதில் பயமும் நடுக்கமும் கொண்டு பிரவுசிங் சென்டர் ல எக்ஸாம் ரிசல்ட்க் காக  

முதல்ல அருள்ஜோதி ,"ஜோ உன் நம்பர் சொல்லு? 

ஜோ :" இல்லடி, எனக்கு பயமா இருக்கு நா கடைசியா பார்க்குறேன்".

ஹேமா :"அடிங்............ஒழுங்கா சொல்லுடி.....ஜோ ஓஓஓஓஓஓஓஓ நீ பாஸ் congrats டி பிட் அடிச்சி பாஸ் பண்ணி இருக்க so உன்னோட ட்ரீட் தான்

அனி  யோட ரிசல்ட்  பார்த்ததும்  அனி '' ன்னு அழ ஆரம்பிச்சிட்டா. 

ஹேமா : "அனி,அழாத ப்ளீஸ் அழாத  டி.  சொன்னாக் கேளு,எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்க".

கலை :"அடிங் அழாதடி ஒவ்வொருத்திக்கும் ஆறுதல் மன்றம் நடத்திட்டு இருக்க முடியாது இந்த வருஷம் fail ஆனா அடுத்த வருஷம் பாஸ் பண்ணிக்கிலாம் " ...

புவி :"அவ்வ்வ்வ்வ் ஜோ மட்டும் எப்படி பாஸ் பண்ணினா???அனி மண்டைய தானே ஷேர் பண்ணினா??

ஜோ  : ஹே நம்பர் கொடு அனி நான் செக் பண்ணுறேன்..அனி நீ பாஸ் ..எதுக்கு அழுகுற ??நிறைய மார்க் எதிர்பார்த்தீயா அனி???   


அனி :"இல்ல டி!! எனக்கு அசிங்கமா இருக்குடி..
ரொம்ப  நம்பிக்கையா இருந்தேன் fail ஆவேன் ன்னு ..
ஆனா பாஸ் ஆகி எல்லாமே வீணாப் போச்சு...

நா fail ஆகி இருந்தா ரெண்டு வருஷம் வீட்டுல தெண்ட சோறு  சாப்பிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்க ...இப்போ பாஸ் னு தெரிஞ்சா திருப்பியும் படிக்க சொல்லுவாங்கல்ல, அதான்.................!?