ஆன்லைனில் புத்தகம் வாங்க

Sunday, 24 November 2013

வெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி.

அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும், நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…!

ஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள், அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள், சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.
  
பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 5000

இரண்டாம் பரிசு ரூ 2500

மூன்றாம் பரிசு ரூ 1500

சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு

விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் இலக்கியம்க்ரைம்சஸ்பென்ஸ்நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.


கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்
----------------------------------------------------------------------------------------------

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர்வலைத்தள முகவரிஉங்கள்தொடர்பு எண்  குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும். 
  • கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 
  • நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
  • போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.
  • கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்


நடுவர்கள்
முதல் சுற்று நடுவர்கள்

கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி(சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்

இரண்டாம் சுற்று நடுவர்கள்

பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)

மூன்றாம் சுற்று நடுவர்கள்

வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)

ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com  என்ற முகவரிக்கு மடல் வரைக.