பாலையில் தொலைந்த நிழல்
உதயபூரின் அந்த பிச்சோலா ஏரியைச் சுற்றி
அமைந்திருந்த குறுகிய அனுமந் சாலையில் எல்லா
வீடுகளும் விடுதிகளோ என எண்ணச் செய்தன. சற்றேக்குறைய எல்லா வீடுகளும் குறைந்த பட்ச
விடுதிகளாக மாற்றம் பெற்றிருந்தன.முக்கு முக்குக்கு இருந்த கடைகளில் சோப் பவுடர் பேஸ்ட் போல ஆணுறைகளும் அதிக அளவில் விற்றுத்
தீர்ந்து கொண்டிருந்தது கடைகளில் இருந்த குழந்தைகளிடம் அவற்றை கேட்பதற்கும் அவர்கள் எடுத்துத்
தருவதற்கும் ஒரு தயக்கமும் இரு சாராரிடமிருந்தும் வரவேஇல்லை பொதுவாக வெளிநாட்டவர்கள் அதிகம் வந்து தங்குமிடங்களில்
இந்த வகையான குழந்தைகளும் முதிர்ந்த்வர்கள் ஆகி விடுவது தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.
போர் மண்ணிலும் சுற்றுலாவை நம்பி இருக்கும் இடங்களிலும் குழந்தைமையை இழந்து விடும்
பிள்ளைகள் யதார்த்தம்
தெருவுக்குள் என்னை அழைத்து வந்த கார்
ஊர்ந்து ஊர்ந்து செல்ல விமான நிலையத்தில் ராக்கி தந்த ஆச்சரியம் இன்னமும் ஆறாமல் சிரிப்பை
வரவழைத்துக் கொண்டிருந்தது
நான் இன்னார் .என்று சொல்லாமலே எனை அழைத்துச் செல்ல வந்தவன் அடையாளம் கண்டு என்னருகில் வந்து பெட்டியை கையிலிருந்து வாங்கிக்
கொண்டான். நானும் அவ்வளவு ஆச்சரியப் பட்டிருக்க வேண்டியதில்லை . அத்தனை சிறிய விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களுள் நான் மட்டுமே
பெண்ணாக இருந்ததும் அவனுக்கு இலகுவாகவே இருந்திருக்க வேண்டும்
ஆச்சரியத்தில் என் கேள்வியை தூக்கிப் போட்டேன்
கூகுளில் தேடினேன் படங்கள் பார்க்க
முடிந்தது. ஆனால் உங்களைப் பற்றி என்ன எழுதியிருக்கு என வாசிக்க முடியவில்லை. வேற மொழியில்
இருந்தது
தொலைபேசியில் இங்கு வருவதற்கு முன்பு பயண ஏற்பாட்டிற்காக அவனோடு பேசிய போது
தனியாக நான் வருகின்றேன் என்றதும்
நீங்கள் விரும்பினால் உடன் வரலாம் நான்
ஆனால் அதற்கு தனி சார்ஜ் என்றான்.
நான் தனியாகப் பயணிப்பேன் என்னால் அதிகம் செலவழிக்க முடியாது தேவைப்பட்டால்
பேருந்தில் கூட செல்லல்லாம்
இல்லை , இல்லை உங்களுக்கு குறைந்த
விலையில் கார் ஏற்பாடு செய்து தருகின்றேன் கவலைப் பட வேண்டாம் என்றான்
பிரிவின் அடையாளமாக சொல்லப்படுகின்ற பாலை நிலம் இதுவரை பார்த்திராதது. கற்பனையிலிருந்த
அந்த நிலப் பகுதியை பார்க்கின்ற ஆவலோடு காரிலேற தயாராக இருந்தேன்
நான் முன்சீட்டில் ஏறுவதைத் தவிர்த்து
எனைப் பின்தள்ளி முன்னால் அமர்ந்தான் ராக்கி.
அது நான் எதிர்பாராதது
சமவெளிகள் தாண்டி மலை மேடுகள் தாண்டி இருவராக பயணமாகின்றோம். ஜோத்பூர் ஒரு இரவு ஜெசல்மீர் ஒரு இரவு என திட்டமிடலில் வழியில் பார்க்க வேண்டிய இடங்களை
ஒரு கனிவான அன்புடன் நெருங்கியும் நெருங்காமலும் விளக்கிய படியும், என் அடிப்படை தேவைகளை நான் சொல்லும் முன்பே உணர்ந்து நிறைவேற்றியபடியும்
வருகின்றான்.
தேவைகளைப் புரிந்து கொண்டு செயலாற்றுகிற
போது அன்பும் தொடர் புரிதலும் சாத்தியமாக மெல்ல
மெல்ல என்னோடு ஐக்கியமாகினான்
காபிக்காக நிறுத்தப் பட்ட அந்த விடுதி
ஒரு கோட்டைக்குள் எங்களை அழைத்துச் செல்வதாக இருந்தது. மனதளவில் காலம் இருவருக்கும் பின்னோக்கி நகன்று கொண்டிருந்தது.
நான் மௌனமாக அதை ரசிக்க அவன் தன்னை வெளிப்படுத்த தொடங்கினான். ஆண் என வேறுபாடு காண்பிக்காத
என் நடவடிக்கைகள் அவனுள் ஏதோ நிகழ்த்திக் கொண்டிருந்தது அது சிக்கலா சந்தோசமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க
வேண்டும்.
எனக்கு குடும்பம் இல்லை குடும்பத்தோடு போய்ச் சேர நான் நிறைய சம்பாதிக்க வேண்டும்.மேடம்.
குடும்பம் உன்னில் காசு எதிர்பார்க்காது. உன் சந்தோசமான வாழ்க்கையையும் அதற்கான
உழைப்பையும்தான்
அந்த உழைப்பின் அடையாளமாக காசு முன்னிறுத்தப் பட்டிருக்கலாம்..
உங்களுக்கு புரியாது மேடம்
சொல் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன்
நான் ப்ளஸ்டூ முடித்திருந்த நேரம். நான் எப்படிப் படிப்பேன் என்று நினைக்கிறீங்க..
ஏன் கெட்டிக்காரனாதான் இருக்கனும் . நினைத்தால் சாதிக்கிறவன் தான்.
பரீட்சை முடிந்ததும் அப்பா என்னை அவரது நண்பர் வீட்டுக்கு அனுப்பினார்
எதுக்கு?
விடுமுறைக்கு அனுப்பப் பட்டதாகத் தான் சொல்லப் பட்டேன் ஆனால் அங்கு போன பிறகுதான்
தெரிந்தது
வேலை செய்து பழக அனுப்பப் பட்டிருந்தேன் என்பதும் காசோட அருமை அப்பதான் தெரியுமாம்
ஓ
அப்பாவின் நண்பர் தனியாக அறை தந்தார்.
பரவாயில்லையே..
சந்தோசப் படாதீங்க மேடம்
நானே சமைத்துக் கொள்ளனும்.வரப் போகின்ற நாட்களிலே
ம்ம்….அதுங்கூட தப்பில்லையேப்பா
காலையில் எழுந்து வேலை செய்யுற இடத்துக்கு 2 கிலோ மீட்டர் நடந்து போயி இரவு
9 மணி வரை வேலை பார்த்து விட்டு வந்து பசியில
சமைக்க தெம்பில்லாம வெறும் அரிசியை தின்னுட்டு பல நாள் படுத்திருக்கேன்
பசியின் வலி இன்னமும் அவன் கண்களில் இருந்து மறையவில்லை . கைகளை எடுத்து அழுத்திக்
கொண்டேன்.ஏழ்மையினால் பசி என்றால் தலையெழுத்து என்று எதிர்பார்ப்பு இல்லாது பழகியிருக்க
முடியும் இதுவோ வலிய உருவாக்கப் பட்ட பசியின்
வலி . காரணகர்த்தா மேல் கோபம் வருவது நியாயம் தானே?
இதெல்லாம் பரவாயில்லை
நிமிர்ந்து பார்த்தேன் . என்னிடமிருந்து விரல்களை உருவிக் கொண்டான்
எனக்கு என் தோள் தாண்டி வளர்ந்து விட்ட என் குழந்தையின் நினைப்பு வந்து போனது.
திடீரென எனக்கு சாப்பாட்டுக்கான அரிசி கூட கொடுக்காம அப்பாவோட நண்பர் ஒரு வாரம்
ஊருக்குப் போயிட்டார். எப்போ திரும்பி வருவாருண்ணே தெரியாது. சொல்லவும் இல்லை.
குளிர்காலம் வேற
யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை
பசியில் கொஞ்சம் கொஞ்சமாக வெட்கம் பறி
போனது
வெளியில் வந்து பிச்சை எடுத்தேன். கிடைத்த காசில்
வாங்கிய அரிசியை வேக வைக்க பொறுமையில்லாது ஊற வைத்து சீனியைப் போட்டு சாப்பிட்டு முடித்தேன்
பழங்கள் வாங்கியிருக்கலாமே
பசியிலும் கோபத்திலும் தோணலையே
திரும்பி வந்த அப்பா நண்பரிடம் சொல்லி அழுதேன். அவர் போன் வாங்கி அப்பாவுக்கு
போன் போட்டு அழுதேன்..
வீட்டுக்கு வருவதற்காக கதை கட்டுவதாக சொன்னார். நிர்தாட்சண்யமாக போனை வைத்து விட்டார்
தவிர்க்க முடியாது தினப் படி வாழ்க்கைக்கு பழக்கிக் கொண்டேன்.
ஒர் நாள் அப்பாவே போன் செய்தார்.நான் 96% வாங்கியிருப்பதாகவும் Er சீட் கிடைத்து விடும் என்றும் சொன்னார்.
நீ எனக்கு அப்பாவே இல்லை என்று போனை வைத்து விட்டேன்.
இஞ்சினீயரிங் காலேஜ் சீட்டை எல்லாம் விட்டு ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்தேன்.அப்பாவை
பழிவாங்கிய திருப்தியில் அவரிடமிருந்து எதுவும் எதிர்பார்க்காது என்னை வைத்துக் கொண்டேன்.
படிக்கும் போதே டூரிஸ்ட் வேலைக்குள் சேர்ந்தேன். தினம் தினம் புதிய மனிதர்கள்
. ஆர்வம் தொற்றிக்கொள்ள சம்பாதிக்கத் தொடங்கினேன். நேரம் கிடைக்கும் போது கம்பூயூட்டர்
வகுப்புகளுக்கு போனேன். வீட்டொடு தொடர்புகளை அறுத்துக் கொண்டேன்.
நல்ல விசயம் தானே உன்காலில் தானே நிற்கப் பழகிக் கொண்டாய் பிறகென்ன? வீட்டோடு கோபம் மாற வேண்டியது தானே
இப்ப இந்த ஹோட்டல்ல நான் ரூம் பாய் ஆனால் இதுக்கு முன்னாடி ஜெசல்மீரில் நான் ஒரு ஹோட்டல் மானேஜர். ஹோட்டலே
எனது பொறுப்பில் இருந்தது
ஓ இது எப்ப
ஒரு வருசம் முன்னாடி. நான் நடத்தி கொடுப்பதாய் , ஒரு வருடம் முடிவில் காசு கொடுப்பதாய்
சொல்லி தொடங்கினேன் அது நல்ல பிசினெஸ். அழகா
செய்தேன். நல்லா வந்தவுடன் அதிக காசு கேட்டுட்டாங்க. கூடுதலா இரண்டு லட்சம் கொடுத்து
வெளியேற வேண்டியதாகப் போயிடுச்சு.
எழுதி ஒப்பந்தம் போடலையா ராக்கி?
ஆட்களை நம்பினேன் . எழுத்தில் எதுவும் செய்யலை
வீட்டுல கேட்டேன்
துரத்தி விட்டுட்டாங்க
அம்மா தான் நகையை கொடுத்து மீண்டு வான்னு சொன்னாங்க
அடமானம் வைச்சு அதை விட்டு வெளியே வந்தேன்
அம்மா நகை கொடுத்தது அப்பாவுக்கு லேட்டாதான் தெரியும் தெரிஞ்ச போது அப்பா இன்னமும்
கோபமா துரத்தி விட்டுட்டார்.
இப்ப ரூபாய் சேர்த்திட்டு தான் நான் வீட்டுக்கு போகனும்ன்னு முடிவோட இருக்கின்றேன்
பேச்சு ஜோத்பூரில் காப்பி கடையில் தொடங்கி ஜெசல்மீர் பாலைவன மணல்மேடுகள்வரை தனிமை கிடைக்கின்ற போதெல்லாம்
நீண்டது. தொடர்ந்து வந்தது.
ராக்கி தன்னை சுற்றி கதைகளால் ஆன வெளியொன்றை எழுப்பிக் கொண்டே வந்தான்.ஒட்டகங்கள்
பாலைவன மணல் மேடுகளில் மனிதர்களை சுமந்து கொண்டு நடந்து வந்தது. நானோ மணலில் கால் புதைய
நடக்க விரும்பி இடைவெளியில் ஒட்டக முதுகில் இருந்து இறங்கி நடக்க தொடங்கினேன். ஆட்களற்ற
வெளிக்கு வந்திருந்தோம்.
ராக்கியின் வாழ்வின் இருளில் ஏற்கனவே
மூடி இருந்ததால் இந்த வெளிச்ச விலகல் பெரியதாகத் தோன்றவில்லை.
சூரியன் மறையப் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கள் காலடித் தடங்களை பதிய விடாது
மணல் வழிந்து ஓடி அழித்துக் கொண்டே இருந்தது புதிய அனுபவம்.
எங்கள் காலடிகள் பூமியில் அழுந்தப் பதிந்தன. திரும்பி காலை எடுக்கும் போது தடயங்களற்று இருந்தது.அதிக அழுத்தத்தில் குடும்பம்
அவனுள் சரியான சுவடுகளை பதிய விடாது விட்டதைப் போல
குளிரும் மெல்ல இறங்கத் தொடங்க வானத்தில்
பொத்தல்களாய் நட்சத்திர வெளிச்சங்கள். சாப்பிட்டு
முடித்து விட்டு வேலைகள் ஏதுமற்ற வெளியில்
நீண்ட இரவோடு உரையாடத் துவங்கினேன். அருகில் இருந்த தற்காலிக குடிலில் பூச்சிகள் விழுந்து
ஓசையெழுப்பிக் கொண்டிருந்தன.
இடைவெட்டினான் ராக்கி . கொஞ்சம் சிகரெட் பிடித்துக் கொள்ளட்டுமா. நேற்றெல்லாம்
தனியறையில் தங்கிக் கொண்டவன் இன்று என் அறைக்கு
வெளியில் நான் அமர்ந்திருந்த இடத்தோடு இருந்தான்.
ஏன் டென்சனா இருக்கியா?
தொடர்ந்த 2 நாள் பயணிப்பில் என் முன்னால் சிகரெட் பிடிக்காதவன் பிடிக்கவா என்று கேட்கின்றான்.
ஏதோ பதட்டத்தில் இருக்கின்றான்.
நான் இன்று உங்கள் அறையில் தான் தங்க வேண்டும் . வேறு ஏற்பாடுகள் இல்லை.
தாராளமாக தங்கிக் கொள்ளலாமே ராக்கி
எல்லாரும் கேட்டார்கள் நீங்கள் என் girl friendaa என.
இப்ப என்ன ஆம் என்று சொல்லி விடேன்.
சொல்லலாமா….. கேள்வியில் இழுத்தான்
பொருள் வேறெங்கோ போனது
நானாக எதுவும் முடிவு கட்டி விடக் கூடாது
என்றிருந்தேன்.
என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க
நினைப்பதை சொல்லி விட முடியுமா என்ன?
அடுத்த தலைமுறைக்கே உரிய வேகமும் குழப்பமும் சேர்ந்தே இருக்கின்றது உன்னிடம். அனுபவங்கள் வர
வர புரிதல் உன்னை வழி நடத்தும்
பதறினான். அடுத்த தலைமுறை என்று என்னை ஏன் தள்ளி வைக்கின்றீர்கள். உங்களை என் வயதுக் காரியாகவே பார்க்க முடிகின்றது ஆனால்
நீங்களோ தூரத்தில் என்னை வைத்தே பேசுகின்றீர்கள்.
நான் உங்களுக்கு அருகில் இருக்க விரும்புகின்றேன்
என் குழந்தைகளிடம் கூட நல்ல தோழியாகத்தான் இருக்கவே பார்ப்பேன்
அப்படியே இருக்கலாம் தானே ராக்கி?
அம்மாவோ மகனோ, அப்பாவோ மகளோ எப்பவும்
எதிர்பால் ஈர்ப்பில் , எதிர்பார்ப்பு இல்லாத பகிர்தலில் சுகமே தனிதான்
ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமோ பெண்ணுக்கு ஆணிடமோ பகிர்ந்து கொள்வது சுகமான அனுபவமே.
அதே நேரத்தில் உடல் பொருள் என எந்த எதிர்பார்ப்பும் இல்லாது கிடைக்கக் கூடிய பகிர்தல்
, பகிர்தலின் வெளிப்பாடாய் ஸ்பரிசம் எல்லாமே மிக முக்கிய மான தருணங்கள் ஒவ்வொரு மனிதனின்
குணங்களையும் தீர்மானிக்கக் கூடியவை. அதை குழந்தைகளுக்கு முறையான பகிர்தலாய் அதிர்வில்லாது சரியாக புரிய வைத்தல் பெற்றோர்களின் கடமை.
பிள்ளைகள் காதலென்று சுகம் தேடிப் போகின்றார்கள்
என்று குற்றம் சொல்வதை விட பெற்றோர்கள் அதிர்வில்லாத ஸ்பரிசத்தை தந்து விடுதல் பரவச நிலையிலிருந்து காப்பாற்றும். பெரும்பாலும்
பிள்ளைகளை தொட்டு பேசும் பெற்றோர்கள் குறைவு அவர்கள் தவறு செய்கின்றார்கள்.
அது உன் விசயத்தில் நடந்திருக்காது. தென்படுகின்ற பெண் ஸ்பரிசமெல்லாம் அனுபவிப்பதற்காக
என குறுகுறுப்பில் மனம் துள்ளும். திருட்டு மாங்காய் கடிக்கின்ற போது வருகின்ற குறுகுறுப்பு
போல் தான் அது அதில் எந்த புனிதமும் இல்லை, தவறுகளும் இல்லை. ஆனால் தொடரவும் முடியாது.
ராக்கி இரண்டாவது சிகரெட்டுக்கு மாறியிருந்தான்
இப்படியெல்லாம் யோசிக்க முடியாது மேடம்
உங்களோட இருப்பது சந்தோசமாக இருக்கின்றது. சோத்பூரில் போல தனியே தங்கப் போவதில்லை
உங்களோடுதான் தங்குவேன் அனுமதியுங்கள்
அவன் கேட்பது எதை என்பது மெல்லப் புரிதலாகிய போது அதை நிராகரிக்காது கடந்து
செல்ல துணிந்திருந்தேன். நிராகரிப்பு அவனை இன்னும் தடம் மாறச் செய்து விடும்.அல்லது
எப்பவுமே அவன் கோரிக்கையற்ற உறவுகளின் அறிமுகமே இல்லாது போய் விடுவான்.
ராக்கி , உன் அம்மா அதிகம் உன்னிடம் பேச மாட்டாங்களா?
கேள்வியோடு இப்பொழுது என் அருகாமையை அவனுக்கு இணக்கம்மாக மாத்தியிருந்தேன்..
இல்லையே அப்பாவிடம் அம்மாவுக்கு ரொம்ப பயம். அப்பா மேலிருக்கின்ற வெறுப்பில் நானும் வீட்டைப் புறக்கணித்ததில் அம்மாவையும்
புறக்கணித்திருக்கின்றேன்
உனக்கு காதல் ஏதுமில்லையா ராக்கி.
சம்பாதிக்கனும் மேடம். அதுவரை எதுவும் யோசனையில்லை. உங்கள் மேல் வருகின்ற விருப்பம்
போல யாரிடமும் வரவில்லை.
இன்னமும் உன் மன அருகாமைக்கான பெண்ணை நீ சந்திக்கவில்லை. கண்டிப்பாக சந்திப்பாய்
அப்படிச் சந்திக்கிற போதுஇந்த பரவசம் வெறும் குறுகுறுப்புதானே ஒழிய உனக்கானது
அல்ல எனப் புரியும்.
என்ன சொல்ல வரீங்க? என்னோட இருப்பதற்கு சம்மதமில்லைன்னா?
இல்லையே உன்னோடு அன்பாக இருப்பதற்கு எப்பவும் சம்மதம்.
ஆனால் உன் விருப்பமும் என் விருப்பமும் ஒன்றல்ல.
குழம்பினான் மீண்டும்.
அவன் தோளில் கை போட்டு மெல்ல அணைத்த படி
விரல்களில் அழுத்தினேன்.
என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தழும்புதல் இல்லாமல் நிலை கொண்டிருந்தது
அவன் நினைத்த தொடுகைக்கும் என் தொடுகைக்கும் இடையிலிருந்த இடைவெளி புரியத் தொடங்கியிருக்க
வேண்டும்.
என் மேல் கால் போட்டுக் கொண்டு கையை கிள்ளிக் கொண்டு தூங்க விரும்பும் என் மகன் நினைவுக்கு வந்தான்
சரி வா . பேசி முடிவதில்லை. போய் படுப்போம். காலைல கிளம்பனும்ல அறையில் இரட்டைப்
படுக்கையில் ஒரு பக்கமாக எனக்கும் இன்னொரு பக்கத்தில் ராக்கியும் படுக்க நானே ஒதுக்கி
கொடுத்தேன்
. படுத்தவனை தலைகோதி நெற்றியில் முத்த மிட்டு விளக்கணைத்தேன்
என் ஸ்பரிசங்கள் பாதுகாப்பு தன்மையைத் தந்திருக்க வேண்டும் அவனது
விருப்பத்தை என் மேல் திணிக்கும் எண்ணம் காணாமல் போய் . இருந்தது
கைகளைப் பற்றிக் கொண்டு படுத்திருந்தவனிடமிருந்து ஆழ்ந்த மூச்சு வரத் தொடங்கியது.
காலையில் அவனுக்கு முன்னால் எழுந்து விடி வெள்ளியைப் பார்க்கும் ஆவலோடும், பறவைகளின் கூச்சலையையும் கேட்க வெளியில்
வர விளக்கைப் போட்டேன்.
அவன் கழட்டிப் போட்ட பேண்டிலிருந்து
பிரிக்கப் படாத ஆணுறைகள் சிதறி கிடந்திருந்தது.
வெளியே வந்து மீண்டும் மணற்குன்றுகளை நோக்கி நடந்தேன்.
இரவில் மணலில் அலைந்த பூச்சிகளின் தடங்களை காற்று மெல்ல அழித்துக் கொண்டிருந்தது.
காலம் இதுபோல் இரவு உரையாடல்களின் அர்த்தங்களை அழித்துப் போகலாம்.
திரும்பி உதயபூர் வந்திருந்தோம்.
பிச்சோலா ஏரியைச் சுற்றிய குப்பைகள்
அகற்றப் பட்டுக் கொண்டிருந்தன
மீண்டும் போடாமல் இருப்பார்களா ராக்கி , படகில் காதலியோடு மிதப்பதாய் கனவு கண்டு
பயணம் தொடங்கினேன். விமான நிலையத்தில் கட்டி
அணைத்து கை குலுக்கி காதலியோடு தமிழகம் வா.
அழைப்பு அனுப்புவேன் சொல்லி மீண்டேன்
பாலை புள்ளியாகி தமிழ் நாட்டிற்குள் காலடி வைத்து நான் அவனிடமிருந்து தொலைந்து போனேன்.ஆம் அவன் அன்பு
மறக்க முடியாததாகினும் என்னை அவன் மறக்கின்ற
போதுதான் அவனுக்கான காதல்கள் உடலின் ஈர்ப்பிலிருந்து விடுபடும். சரியான இடத்தில் உடலின்
ஈர்ப்போடு பொருந்தியும் கொள்ளும்.
பாலையில் தொலைந்த நிழல்
திலகபாமா