ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday, 7 January 2014

போட்டிச் சிறுகதை 82

                    மங்காயி பெரியவளாயிட்டா !

தென்னந்தோப்பு, ஆத்துப்பாலம், மாரிமுத்து டீக்கடை என எங்கெல்லாம் சனங்க கூடுமோ அங்கெல்லாம் ஒரே பேச்சு...மங்காயி பெரியவளாயிட்டா...

ஒரு பொம்பளைப்பிள்ள பெரியவளாகுறது அம்புட்டு விசேசமான்னு தோணும் நமக்கு...ஆமா விசேசம் தான்...ஒன்னு காலாகாலத்துல நடக்குறது விட காலந்தள்ளி நடந்தா கூடுதல் விசேசந்தானே....

தையா..., அதான் மங்காயி ஆத்தா, இதுக்காகவேட்டு குலதெய்வத்துக்கு நேந்துக்கிட்ட கெடா மட்டுமே பத்துப்பதினஞ்சு இருக்கும். ஆனா மங்காயி என்கிற மங்கையர்கரசிக்குத் தான் ஒரே கிலியா இருந்துச்சு. காரணம்...வேற யாரு...அந்த தொரபாண்டி தான். அவன நெனைக்கும் போது கூடவே மீனாத்தா நெனப்பும் வந்து பயமுறுத்துச்சு மங்காயிக்கு. அவ சோட்டுப் பிள்ளைகள் எல்லாம் பெரியமனுசத்தனமா பேசிக்கிட்டு திரியும் போது இவ மட்டும் தான் இன்னும் “சின்னப்புள்ளயாஇருக்கறத பெரிய சாதனையா நெனச்சுக்குவா. வாராவாரம் வார மீனாத்தா “உனக்காக தாண்டி காத்துகிட்டு இருக்கான் எந்தொர...நீ குத்தவச்ச மறுமாசம் பரிசம் போட்டுற வேண்டியது தான்”னு விடாம சொல்றதே அந்த சாதனைச் சிந்தனைக்கு காரணம்.

பனிக்காலத்துல அந்தி மயங்குன அந்த நேரத்துல குச்சு வக்க தொரபாண்டி வரணும்னு, அவள நடுங்குற குளிருல உக்கார வச்சிருந்தாக...அதெல்லாம் அவளுக்கு பெரிசா தெரியல. பரிசம் போட்டுருவாகளேன்னு அதே நெனப்பா அழுவக்கூட முடியாம உக்காந்திருந்தா மங்காயி.  

அவளுக்கு அஞ்சு வயசு ஆகுற வரை வாராவாரம் அவுக அய்யா சினிமாவுக்கு கூட்டி போவாகளாம். தையா அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பா. புருசன் போனதில் இருந்து அவளும் ஒரு காட்சிக்கும் போறதில்ல. அந்தப்புள்ள மங்கயர்கரசிக்கும் அதே கதி தான். ஆனா, பள்ளிக்கோடத்துல அவ வயசு புள்ளைக, பாக்குற சினிமாவ எல்லாம் கதை கதையா சொல்லுவாளுக. போகுற, வார வழியில அவ பாக்குற அஜித், விஜய் மொகங்கள அந்தக் கதைகள்ல சேர்த்துப்பாக்குற கனவு தான் அவளுக்கு நெதமும். அப்படிப்பட்ட புள்ளைக்கு எப்புடி புடிக்கும் பாண்டியை? பாண்டி ஆட்டம் கூட ஆட மாட்டா மங்காயி.

கெச்சலாய் இருப்பான் தொரபாண்டி. கருத்த தேகம். எப்பவும் வெள்ளை வேட்டி, சட்டை தான். சிரிச்சா ரெண்டுவரிசைப்பல்லும் பெரிசாய் தெரியும். அவனை அவள் இதுவரை பார்த்திருந்த நான்கைந்து முறைகளில் கவனித்தது இது தான். ஆனா, இருக்கவே இருக்காளே மீனாத்தா! அய்யா, ஆத்தா, அக்காக்காரிகனு பெரிய குடும்பமா பொறந்தவன்னாலும் பாண்டிய வளத்தது இந்த குடும்பத்தொடிசு இல்லாத மீனாத்தா தான். வார போதெல்லாம் பாண்டியப்பத்தி அவ பேச ஆரம்பிச்சா ஓடி ஒளிய முடியாம புத்தகத்துக்கு பின்னாடி மொகத்த மறைச்சுக்குவா மங்கையர்கரசி. ஆனா, காத என்ன செய்யறது? கண்ணுக்கு இமைய கொடுத்த ஆண்டவன் காதுக்கு எதுவும் கொடுக்கலியே....

ஒருத்தர ஏதோ ஒரு காரணத்துக்காக நமக்கு பிடிக்கலன்னா மத்த எல்லா விதத்துலயும் அவுகள பிடிக்காம போறதுக்கான காரணத்த நம்ப மனசே உருவாக்கிக்குது. அதே ஒருத்தர ஒரே ஒரு காரணத்துக்காக நமக்கு பிடிச்சிருந்தா கூட அவுக செய்யிற பெரிய பெரிய பிழை கூட சிறிய தவறா நெனச்சு மன்னிச்சுடுது நம்ப மனசு....

எந்த வேலைய எடுத்து செஞ்சாலும் செறப்பா செய்வான் எந்தொர இப்படித்தான் ஆரம்பிப்பா மீனாத்தா. அப்படி ஆரம்பிக்கற ஒவ்வொரு தடவையும் அவ விடாம சொல்லுகிற ஒரு விசயம் பாண்டியோட புத்திசாலித்தனத்தப்பத்தியது. பாண்டி ஆறாப்பு படிச்சிட்டிருந்த போது...அவனோட வாத்தியார் கேட்டாராம்....ஒரு பொம்பளைப்பிள்ள அவ அம்மா வந்து கண்ண பொத்தும் போது அவ தோழிகளோட பேரெல்லாம் சொல்லி, கடைசியாத் தான் அம்மான்னு கண்டுபிடிச்சாளாம். அதே அவ அப்பா கண்ண பொத்தின மறுநொடி அப்பான்னு சொல்லிட்டாளாம். இது ஏன்னு கேட்டாராம். அதுக்கு அவன் வகுப்பு பிள்ளைகளெல்லாம் ஒன்னுக்கொன்னு பார்த்துகிச்சாம். பாண்டி மட்டும் யோசிக்காம பளிச்சுன்னு கல்யாணம் ஆகாத பொம்பளைப்பிள்ளைகளுக்கு ஒரு ஆம்பளங்கிற வகையில அப்பா தொடுறது மட்டும் தான் தெரியும்அப்டின்னானாம். இதக்கேட்டு அசந்து போன வாத்தியார் அவன பாராட்டி அவரோட வெலையுசந்த பேனாவ பரிசா கொடுத்தாராம். இந்த விசயத்த ஏத்த இறக்கத்தோட, என்னமோ அவளே நேரா பாத்தாப்புல சொல்கிற போதெல்லாம் ரசிக்கவே முடியாது மங்கயர்கரசிக்கு. பாண்டி தான் அஜித், விஜய் போல இல்லையே....!

ஆனா, மங்காயி ஆத்தா தையா இருக்காளே அவளுக்கு பாண்டின்னாலே தேனொழுகும். அவ்வளவு ப்ரியம் அண்ணன் மவன் மேல. தையல்நாயகிங்கற அவளோட அம்சமான பேர ஊரு ஒலகமே “தையா, தையானு ஜதி போடும் போது அவ மருமகன் பாண்டி மாத்திரம் “தைலா அத்த, தைலா அத்தஎன்பானாம். அதுவும் மங்காயி அய்யா செத்த அன்னிக்கு அழுது புரண்டுக்கிட்டிருந்த தையாவோட அருகில போயி மெதுவா “அத்த, எதுக்கும் கவலப்படாத, நானிருக்கேன்ன்னானாம் பாண்டி. அத்தோட அவ அழுகைய நிறுத்திட்டாளாம்...அரும்பு மீச மொளச்சபய சாதி சனத்துக்கு முன்னாடி அப்புடி சொன்னதும் யானை பலம் வந்தது போல இருந்ததாம் தையாவுக்கு. கொண்டைய இழுத்து முடிஞ்சுக்கிட்டு ஒன்னும் புரியாம முழிச்சுக்கிட்டிருந்த மங்கையர்கரசிக்கு அவ சோறு ஊட்டி விட்டத ஊரே இன்னிக்கும் நடக்கற எல்லா கெட்டகாரியத்தன்னிக்கும் நெனச்சு நெனச்சு பேசிக்குமாம். இதுவும் அந்த மீனாத்தா சொல்லித்தான் தெரியும் மங்காயிக்கு. கூடவே இன்னொன்னும் மறக்காம சேத்துக்குவா மீனாத்தா. அன்னிலேர்ந்து சொன்ன சொல்லு மாறாம வாராவாரம் அத்தைய பார்த்து நலம் விசாரிச்சு தேவையானத வாங்கி கொடுத்துட்டுத்தான் இருக்கானாம் பாண்டி. ஒரு வயசு வரை பாண்டி மாமா, மாமான்னு அவங்கூட வெளையாடிட்டிருந்த மங்காயி அப்புறம் எப்புடித்தான் மாறிப்போனாளோன்னு அவ மோட்டுவளைய பாத்து அதிசயப்படும் ஒவ்வொரு தடவையும் தையா தான் சொல்வா…”அட என்ன மீனாத்தா நீ....இந்தப் புள்ளைக்கு என்ன வயசாகுது இப்ப....அரசி, அரசின்னு எவ்வளவு ஆசையா இருக்கான் அவன்...காலம் வரும் போது எல்லாம் மாறிடும்”. எந்த காலம்...என் கெட்ட காலமா என்றே தோன்றும் மங்காயிக்கு !

குளிரு கொஞ்சம் கூட ஆரம்பிச்சதும் வெடவெடத்தது மங்கயர்கரசிக்கு...வீட்டுக்குள்ளே ஏதோ சலசலப்பு கெட்டது...மாமன் வந்துட்டான்னு ஒரக்க கேட்டுச்சு ஒரு கொரல்....இப்போதைக்கு இந்தக் குளிருல இருந்து தப்பிச்சா போதும்னு இவளும் “மாமனஎதிர்பார்க்க ஆரம்பிச்சா.

அப்போ தான் உள்ள பேசுற பேச்சு சத்தத்த கவனிச்சா...

அரசி நல்லாருக்கா...எங்க அது?இது பாண்டி கொரல் தான்.

“நல்லாருக்கு ராசா...பின்னால உக்காந்திருக்கு.... இது தையா.

யாரோ உள்ளிருந்து எட்டிப்பார்ப்பது போல தெரிஞ்சுது மங்கயர்கரசிக்கு.

“என்ன அத்த இது? இப்புடி அந்தப் புள்ளைய குளிருல உக்கார வச்சிருக்கீக...?

அவன் கொரல் ஒசந்தது தெரிஞ்சுது. இப்படி இது வரை அவன் காட்டமாக பேசி அவள் கேட்டதில்லை...அதுவும் அவ ஆத்தாவிடம்...

உள்ள ரொம்ப அமைதியா இருந்துச்சு. சின்ன வயசுலயே வெவசாயத்துல பெரிய தொழில் செய்யற அவன் மேல எல்லாருக்குமே ஒரு மட்டு மரியாதை இருந்துச்சு. அதனாலயே யாரும் பேசல....

“போங்கத்த, போய் மொதல்ல ஒரு போர்வைய அந்தப் புள்ளகிட்ட குடுத்துட்டு வாங்க

விரட்டாத குறையா அவன் சொல்லவும்...

“இல்லப்பா...இன்னும் செத்த நேரம் தானே...தண்ணி ஊத்திட்டு உள்ள கூப்டரலாம்....

கொஞ்சம் மெதுவாகவே சொன்னா அவ ஆத்தா....

சடார்னு அவனே ராக்கையில இருந்த போர்வை ஒன்ன உருவி கொல்லப்பக்கம் வந்ததும்.....

சுத்தமா இத எதிர்பார்க்காத மங்கையர்கரசி படார்னு எழுந்துட்டா....அவ பக்கத்துல அந்தத் துணிய வச்சுட்டு “போத்திக்க புள்ள...இந்தக் குளிருலயா இவ்வளவு நேரம் உக்காந்திருந்த...நல்ல ஆளுக இவுகள்ளாம்கூறிவிட்டு உள்ளே போனவன்,

“சரி, எல்லாரும் மலைச்சு நிக்காம, ஆக வேண்டியத பாருங்க....அய்யா ஆத்தா வர இன்னும் காமணிநேரமாவுது ஆகும்”...என்று சத்தமாக சொல்லிவிட்டு நகர்வது தெரிந்தது....

பாண்டிக்கு மங்காயி மேல உள்ள பாசம் அவளுக்கு பல விதத்திலும் சொல்லப்பட்டாலும் முதல் முறையாக அந்த அன்பை நேரடியாக, அதுவும் அவ்வளவு இதமாக சந்தித்ததும் கொஞ்சம் தாங்க முடியாமல் வந்தது மங்கையர்கரசிக்கு.

எட்டிப்பாத்த மீனாத்தா பக்கத்துல வந்து “ஆயி, போத்திக்க ஆயி, இப்பவாவது ஆண்டவன் மனசு வச்சானே...அந்தப்புள்ள தொர இருக்கானே...ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவன் சின்னக்கா உக்காந்தப்ப இப்படித்தான் சாயந்தர நேரம்...அவுக மாமன் வீடு வர ராப்போது பன்னண்டு ஆச்சு. அது வரை அந்தப் புள்ளைய வெளில குளிருலயே உக்கார வச்சுட்டாக...அத பாத்ததிலேந்து...எங்கிட்ட சொல்லிகிட்டே இருக்கும்...என் அரசி பெரியவளாகும் போது இந்த வேளையா இருந்தா இப்புடி எல்லாம் குளிருல உக்கார வக்க கூடாதுத்தா...அப்படின்னு...

இன்னிக்கு என்னவோ இத்தோட முடிச்சுக்கிட்ட மீனாத்தா, இன்னும் இன்னும் பாண்டியப்பத்தி ஏதாவது சொல்ல மாட்டாளான்னு ஏக்கம் வந்தது மங்கயர்கரசிக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. அவளுடைய சாதனை சிந்தனை எல்லாம் பொலபொலன்னு சரிஞ்சுச்சு. அது எல்லாத்துக்கும் மேல ஒசரமான எடத்துல ஏறி நின்னு சிரிச்சான் பாண்டி. அப்போ அவனோட ரெண்டு பல்வரிசையும் பிரகாசமா தெரிஞ்சுச்சு. நெசமாவே மங்காயி...இல்ல, இல்ல, தொரபாண்டியோட அரசி பெரியவளாயிட்டா !