சொர்க்கத்தில் சேர்ந்தார்கள்
கோயமுத்தூ¡¢லிருந்து சத்தி செல்லும் வழியில் உள்ளது ‘மூத்தர ரசம் பட்டி' என்ற ஊர். நீங்கள் பொதுவாக பேருந்தில் ஏறிய உடன் தூங்கி விடுபவராக இருப்பின் இந்த ஊரைக் கண்டிப்பாக அறியும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் இது அவ்வளவு சிறிய கிராமம். ஒரே ஒரு பெயர்ப்பலகை தாங்கிய நிழற்குடை மட்டுமே ஒரு ஊர் உள்ளது என்பதன் அடையாளம். எப்போதாவது பேருந்து இங்கு நின்று செல்லும். இப்படி ஒரு முக்கியத்துவம் குறைந்த ஊர் என்ற போதும், நீங்கள் ஒரு முறை இந்த ஊ¡¢ன் பெயரைப் பார்த்து விட்டால், இது உங்களின் நினைவை விட்டு அகலாது. ஏனெனில் இந்த ஊ¡¢ன் பெயர் அவ்வளவு பிரசித்தம். இப்படியும் கூட ஒரு ஊருக்கு பெயர் வைப்பார்களா? என்று அனைவரையும் யோசிக்கத் தோன்ற வைக்கும்.
ஆனால் இந்த மூத்தர ரசம் பட்டியின் உண்மையான பெயர் 'முத்தரசம் பட்டி' என்பது தான். ஒருமுறை ஒரு கல்லூ¡¢ பேருந்து சுற்றுலாவுக்குச் சென்றுகொண்டிருக்கையில் முத்தரசம்பட்டியில் நுழைந்ததுமே அந்த வண்டியின் சக்கரம் வெடித்து விட்டது. அதை மாற்றும் அந்த ஒரு அரை மணி நேரத்திற்குள் அந்த குறும்புக்கார கல்லூ¡¢ மாணவர்கள் இந்த ஊ¡¢ன் பெயரை மாற்றி விட்டர்கள்.'மு' என்ற எழுத்தை ஒரு சுழி சுழித்து 'மூ' என்றாக்கி விட்டார்கள். இப்போது, 'முத்தரசம் பட்டி' 'மூத்தரசம் பட்டி' என்றானது.
பிறகு ஒரு முறை பஞ்சாயத்து தேர்தல் முடிந்ததும் புது தலைவர், இந்த நிழற்குடையை புதுப்பிக்கும் வேலையை ஆரம்பித்து வைத்தார். அப்போது வந்த பெயிண்டர் ஒரு குறும்புக்காரன் போல. அவன், அவன் பங்குக்கு ஒரு 'ர' வை சேர்த்து விட்டான். 'மூத்தரசம் பட்டி'யை 'மூத்தர ரசம் பட்டி' என்று பொ¢தாக எழுதி விட்டுப் போய் விட்டான்.
ஊ¡¢ன் பெயா¢ல் நிறைய நகைச்சுவை கலந்து இருப்பது போல, ஊருக்குள்ளும் நிறைய நகைச்சுவைவாதிகள் உள்ளனர். அதில் முதன்மையானவர் தான் தண்டபானி. பேரூராட்சி அலுவலகத்தில் தண்ணீர் எடுத்து விடும் வேலை பார்த்து வருகிறார். பார்ப்பது தண்ணீர் எடுத்து விடும் வேலையானாலும் மனதுக்குள் ஏதோ அந்த ஊருக்கு தண்ணீர் தரும் வள்ளள் என்ற எண்ணத்துடன் தான் தண்டபானி வலம் வருவது வழக்கம்.
இந்த ஊ¡¢ல் இவரைப் பிடிக்கும் என்றோ அல்லது இவர் மீது ஒரு நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஒருவர் கூட இல்லை. தண்டபானியும் அவ்விதம் நடந்து கொண்டதும் இல்லை அதற்காக வருத்தப் படுவதும் இல்லை. எப்போதும் தான்தோன்றித் தனமாகவே தன் வாழ்க்கையை ஓட்டி வந்தான்.
இந்த ஊ¡¢ல் பல விஷயங்களுக்கு இவரைத் தான் எடுத்துக்காட்டாக காட்டுவது வழக்கம்.
ஒரு பையன் தலையை ஏற்றி ஏற்றி சீவிக்கொண்டிருந்தான் உடனே அவன் அம்மா "டேய்... இப்படியே ஏத்தி ஏத்தி சீவின, அப்புறம் அந்த தண்ணி தண்டபானி மாதி¡¢ மண்டை ஆயிடும்டா" என்றாள்.
ஆமாம் 'தண்ணி தண்டபானி' தான் இந்த ஊர்க்காரர்கள் தண்டபானிக்கு வைத்த பெயர். 'தண்ணி' என்பது அவன் எடுத்து விடும் தண்ணீர் மற்றும் எடுத்துக்கொள்ளும் தண்ணீர் இரண்டுக்கும் பொருந்தும். பார்ப்பதற்கு செந்தில் தமிழ் சினிமாவில் நுழைந்த போது எப்படி இருந்தரோ அப்படி ஒரு சா£ரம். பருத்த,கருத்த உடல். தலையில் ஆங்காங்கே முடிகள்.
தலையில் முடி குறைவாக இருந்தாலும் எப்போதும் எண்ணெய் மட்டும் குறையவே குறையாது. தடுக்க முன் மண்டையில் முடிகள் இல்லாததால் எண்ணெய் தலையைத் தாண்டி முகம் முழுவதும் வழிந்தோடிக்கொண்டிருப்பது வழக்கம்.
அந்த ஊ¡¢ல் ஒரு டீக்கடைக்காரன் தண்டபானி அந்த வழியாக நடந்து செல்லும் போதெல்லம் "ஏண்டா எப்ப பார்த்தாலும் எருமைச் சாணியை முஞ்சில தடவுன மாதி¡¢ இருக்க" என்ற கவுண்டமணியின் காமெடி ¡¢ங்க்டோனை செல்ஃபோனில் போட்டுக்கொண்டே இருப்பான்.
அவன் தன்னைத்தான் கிண்டல் செய்கிறான் என்பதும் அவன் ஏன் அப்படி செய்கிறான் என்றும் தண்டபானிக்குத் தொ¢யும். ஆனாலும் அவன் தன்னை திருத்திக்கொள்ள ஒரு நாளும் நினைத்தது கிடையாது. மாறாக எப்படி அவனைப் பழிவாங்கலாம் என்று யோசித்து பிறகு அந்த டீக்கடைகாரானின் திருமணத்தின் போது இரண்டு வாரமாக அந்த ஏ¡¢யாவுக்கே தண்ணீர் திறந்து விடாமல் மாப்பிள்ளை முதற்கொண்டு அனைவரையும் தண்ணீருக்காக நாயாய் அலைய விட்டான்.
இதுவரை நடந்ததையெல்லாம் வைத்து தண்டபானி இப்படித் தான் என்று ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம். அந்த குழப்பவாதிக்கு இன்னும் சில தொ¢ந்த முகங்களும் படைத்தவனுக்கே தொ¢யாத பல முகங்களும் உண்டு.
தண்டபானியின் தொ¢ந்த சில முகங்களை இப்போது பார்ப்போம். தண்டபானிக்கு திருமணம் என்று பேச்சை 10 வருடத்துக்கு முன்னால் ஆரம்பித்தனர். அன்றிலிருந்தே அவனுக்கு பல கெட்ட விஷயங்கள் நடந்தேறின.
திருமணம் நிச்சயித்த ஒரு வாரத்திலே அவன் வருங்கால மனைவி சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி அவளுக்கு ஒரு காலை எடுக்கும்படி ஆயிற்று. இனிமேல் இவளைக் கட்டிக்கொண்டு நீ எப்படி சந்தோஷமாய் வாழ்வாய், பேசாமல் வேற பெண்ணைப் பார்த்துக்கலாம் என்று தண்டபானி வீட்டில் அனைவரும் சொன்ன போது அதை மறுத்து,இப்போது எனக்கு வேறு பெண் கிடைக்கும் ஆனால் இந்த நிலையில் அவளுக்கு என்னைத்தவிர வேறு மாப்பிள்ளை கிடைக்காது. திருமணம் ஆன பின்பு தான் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. நான் என்று இவளை முதலில் பார்த்தேனோ அன்றே இவள் தான் என் மனைவி என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறி அவளையே கைபிடித்தான்
அதன் பிறகு இருவரும் சில காலம் நன்றாகத்தான் வாழ்ந்து வந்தனர். தனக்கு ஒரு கால் இல்லை என்பதை அவள் அறவே மறந்துவிட்டாள். எப்பொழுதும் அவளை தன்னுடனே சைக்கிளிளே வைத்துக்கொண்டு சுற்றினான். ஆனால் அவனுக்கு அடுத்த துன்பம் பிள்ளைப் பேறு வடிவத்தில் வந்தது. இவன் மனைவி கருவுற்ற போதிலுருந்தே அவள் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. நாளுக்கு நாள் மெலிந்து கடைசியாக பிரசவத்தின் போது அவளின் உயிரும் பி¡¢ந்தது. அதிகமாக மருந்து எடுத்துக்கொண்டதால் குழந்தையும் இறந்து தான் பிறந்தது. இருவர் மூவராய் ஆவோம் என்ற கனவில் இருந்த தண்டபானி இப்போது தனி மரமாகி நின்றான். அது முதலே அவன் யா¡¢டமும் அவ்வளவாக பேசுவது கிடையாது.சி¡¢ப்பு என்ற ஒன்றையே மறந்து விட்ட இந்த தண்டபானி தான் இப்போது இந்த ஊ¡¢ன் சி¡¢ப்புப் பொருள்.
தண்டபானிக்கு கொஞ்ச நாளைக்குள்ளே அந்த வாழ்க்கை அலுத்து விட்டது. உடனே அவன் வேறு திருமணத்திற்கு ஆசைப்படுகிறான் என்று முடிவு செய்து விட வேண்டாம். எந்த வித கொள்கையும் இன்றி யா¡¢டமும் பேசாமல் ஒரு கேளிப் பொருளாய் வலம் வருவது அவனுக்கு அலுத்து விட்டது.
பிறகு அவன் படிப்படியாக சகஜ நிலைக்குத் திரும்பினான். பிறகு சகஜ நிலையையும் தாண்டி ஒரு நிலைக்கு வந்தான். அவன் இந்த நிலைக்கு வரத் துணை குடி தான். ஆம், இப்பொழுதெல்லாம் அவனுக்கு குடி தான் வாழ்க்கைத்துணை. இதைப் பற்றி அவனிடம் கேட்டால் அவன் ஒரு பொ¢ய சொற்பொழிவே நடத்திவிடுவான்.
“தான் முன்பு எதையெல்லாம் தன் வாழ்வின் மிக மோசமான தருணங்களாக நினைத்தானோ அவற்றையெல்லாம் குடித்த பின் நினைத்தால் எனக்கு சி¡¢ப்பு தான் வரும் என்பான். அதே மாதி¡¢ வாழ்வின் மிகவும் சந்தோஷமான தருணங்களை குடித்த பின் நினைத்தால் பொதுவாக எல்லாருக்கும் அழுகை தான் வரும். ஆனால் என் வாழ்வில் சந்தோஷம் என்பது மிக மிகக் குறைவு என்பதால் எனக்கு அந்த பிரச்சனையே கிடையாது என்பான்.”
இதுவரை தன்னைக் கேளி செய்தவர்களை எல்லாம் இப்போது பழி வாங்கினான்.
தண்டபானியின் வீட்டுக்கு எதி¡¢லே 'ஷா நிவாஸ்' என்பவன் கறிக்கடை வைத்துள்ளான். இதுவரை தண்டபானி அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை இருந்தாலும் அவனுக்கு தண்டபானி மீது ஏனோ ஒரு காழ்ப்புணர்ச்சி. எப்போதெல்லாம் தண்டபானியின் தலை வெளியே தொ¢கிறதோ அப்போதெல்லாம் 'ஏய் தண்டம்... தண்டச்சோறு' என்று அவன் மனைவியை திட்டுவது போல்,மகனைத் திட்டுவது போல் வேண்டுமென்றே மறைமுகமாகத் திட்டிக்கொண்டிருப்பான். சில நேரங்களில் யாருமே இல்லை என்றாலும் ஆடு, கோழிகளைத் திட்டுவது போல் திட்டிக் கொண்டிருப்பான். இதுவரை தண்டபானியும் அவனை எதிர்த்தோ, ஏன் என்றோ ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
இன்றும் அது போல தான் தண்டபானி வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். தண்டபானி அந்த தெருவுக்குள் நுழைந்தது முதலே ஷா நிவஸின் குரல் பொ¢தாக ஒலிக்கத் தொடங்கியது. இன்று இவனை எப்படியும் விடுவதில்லை என்ற முடிவுடன் தண்டபானியும் அவன் வீட்டை நெருங்கினான். சா¢யாக அந்த நேரம் பார்த்து ஷா நிவாஸிற்கு ஒரு கடிதத்தை தபால்காரர் கொண்டுவந்தார். தண்டபானி சா¢யாக அவன் வீட்டு முன்பு நின்றிருந்ததால் ," இங்க யாருங்க ஷா நிவாஸ்?" என்று தண்டபானியிடம் தபால்காரர் கேட்க,
"சானிவாஸா....? அது என்னையா பேரு.. சீனிவாஸ்' ன்னு பேரு கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா 'சானிவாஸ்' என்றான் பா¢காசமாக.
தண்டபானி இதுவரை பேசியதே அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
உடனே ஷா நிவாஸ் கோபமாக வந்து அந்தக் கடிதத்தை வாங்க,
"ஓ இவந்தான் சானிவாஸா... மூஞ்சில சானி அடிச்ச மாதி¡¢ இருக்குதுனு சானிவாஸ்னு பேரு வெச்சிடாங்க போல" என்றான். அதற்குப்பின் தண்டபானியின் தலை தொ¢ந்தாலே சானிவாஸ் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிடுவான்.
இவனைக் கடந்து செல்லும் போது அந்த ஊர்க்காரர்கள் அனைவருக்குமே ஒரு கிலி உண்டாகும்.எப்ப என்ன பண்ணுவானோ என்று பயந்து கொண்டே தான் போவார்கள்.
தண்டபானி அவன் மனைவி போன பிறகு ஊ¡¢ல் உள்ள சில குடும்பத்தால் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அவ்வப்போது உதவிகளைச் செய்து வந்தான். நிரந்தரமாக அவர்களின் துயரங்களைத் துடைக்க வேண்டும் என்றும் அதுவே அவன் தன் மனைவிக்கு செய்யும் காணிக்கை என்றும் அடிக்கடி நினைத்துக் கொள்வான்.
ஆனால் தண்டபானியின் வருமானத்தை வைத்துக்கொண்டு அவனால் இதை எல்லாம் செய்ய முடியாது. அவனுக்கு சொத்து என்று பார்த்தால் மூத்தர ரசம் பட்டியில் ரோட்டின் அருகிலியே 2 ஏக்கர் நிலம் மட்டும் உண்டு. தண்டபானியின் முன்னோர்களெல்லாம் அங்கு தான் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் இந்த மழையை நம்பி அந்த ஊ¡¢லே விவசாயம் செய்வது குறைந்து விட்டது.அதனால் தண்டபானியின் நிலமெல்லாம் தா¢சாகத்தான் கிடக்கிறது.
இப்பொழுது கோயமுத்தூர் பகுதிகளிலெல்லாம் ¡¢யல் எஸ்டேட் தொழில் தான் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. எங்க பார்த்தாலும் இந்த நகர் அந்த நகர் , கார்டன் சிட்டி என்று நல்ல விளை நிலங்களைக்க் கூட விலை நிலங்களாக மாற்றி வந்தனர். தண்டபானியின் நிலத்தைக் கூட சிலர் கேட்டுப் பார்த்தனர்.
" இங்க பாருங்க சார், கடைசி ரேட் 1 ஏக்கர் 10 லட்சம்னு தாங்க. வேற யாரும் இந்த நிலத்துக்கு இவ்வளவு விலை தர மாட்டாங்க. அப்புறம் உங்க இஷ்டம். நீங்க தனி ஆளு தான சார், அப்புறம் உங்களுக்கு எதுக்கு ரெண்டு ஏக்கர். எங்ககிட்ட கொடுங்க சார், நல்ல லே அவுட் போட்டு பொது மக்களுக்கு கொடுக்கலாம் என்று ஏதோ பொதுவுடமைவாதி போல பேசினான் அந்த வியாபா¡¢."
அப்போது நம்ம தண்டபானி தண்ணி தண்டபானியாக இருந்தான். அவனும் பதிலுக்கு,
" தனி ஆளுக்கு எதுக்கு ரெண்டு ஏக்கர்னு கேக்கிறியே , தனி ஆளு தான, எனக்கு எதுக்குப்பா 20 லட்சம். நானே இதைப் பி¡¢ச்சு பொது மக்களுக்கு கொடுத்துக்குறேன். இந்தா சரக்கு சாப்பிடறியா என்று வந்தவனிடம் நக்கலாக கிளாசை நீட்ட " அவன் திரும்பிப் பார்க்காமல் போய் விட்டான்
தண்டபானியின் அலுவலகத்திற்கு ராபர்ட் எனும் ஒரு புதிய அதிகா¡¢ நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் அவர் தண்டபானியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தண்டபானி ஊனமுற்றோர்களுக்கு உதவும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினான். உடனே அவர் ஒரு யோசனை சொன்னார். அவருக்குத் தொ¢ந்த ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று இருப்பதாகவும், நிலம் மற்றும் கட்டிடம் மட்டும் அமைத்துக் கொடுத்தால் அவர்கள் மற்ற உதவிகளை செய்வார்கள் என்று கூறினார்.
கடவுள் ராபர்ட்டை தக்க சமயத்தில் தான் அனுப்பி இருப்பதாக தண்டபானி உணர்ந்தான். எப்படியாவது தனது 2 ஏக்கா¢ல் ஒரு ஏக்கரை விற்று விட்டு அந்த பணத்தைக்கொண்டு ஒரு மாற்றுத் திறனாளிகள் இல்லத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று முழு வீச்சில் களம் இறங்கினான்
முன்பு நிலத்தை விலைக்குக் கேட்டவா¢டம் தண்டபானி தொடர்பு கொண்டான். ஒரு ஏக்கர் நிலத்தை விற்க தயாராக இருப்பதாகக் கூறினான். ஆனால் அவனோ " அப்படியா சார். இப்ப தான் உங்களுக்கு ஞானோதயம் வந்துச்சா. சத்தியமா உங்களை நான் வாழ்வில் மறக்க மாட்டேன். நீங்க மட்டும் அன்றைக்கு ஒத்துக்கொண்டிருந்தால் எனக்கு 20 லட்சம் மோசம் போயிருக்கும்." என்றான்.
தண்டபானிக்கு அவன் பேசிய எதுவுமே பு¡¢யவில்லை. ஒரு வேளை அன்று அவனை அவமதித்ததற்காக இப்படிப் பேசுகிறானோ என்று எண்ணிக்கொண்டு " சார், அன்றைக்கு பேசினதெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க சார். இப்ப எனக்கு ஒரு அவசர தேவைக்குப் பணம் வேண்டி இருக்குது. தயவு செஞ்சு என் நிலத்த வாங்கிக்கோங்க." என்று கெஞ்சினான்.
"சார் பு¡¢ஞ்சுக்கோங்க. இப்ப அங்க நான்கு வழிச்சாலை புராஜெக்ட் வருது. அதான் லேண்ட் விலை ஏறும்னு நான் அன்னைக்கு வந்தேன். ஆனால் இப்ப பிரச்சனை வேற மாதி¡¢ ஆயிருச்சு. அந்த ரோட்ட பொ¢துபடுத்தணும்னா அங்க நூற்றுக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டும். அப்படி வெட்டுனா சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்னு ஒரு பொது நல வழக்கு போட்டுட்டாங்க. அதுக்குத் தீர்ப்பும் அவங்களுக்கு சாதகமாகத் தான் வரும்னு எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்.அப்படி தீர்ப்பு வந்து விட்டால் இருபுறமும் மரங்களை விட்டு விட்டு அருகில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தி ரோடு போடுவார்கள். அதுவும் உங்க லேண்டுக்கு எதி¡¢ல் அரசுப் பள்ளிக்கூடம் வேற இருக்குது. அதனால உங்க நிலத்தைத் தான் எடுப்பாங்க. அதானால நீங்க வேற யாராவது விஷயம் தொ¢யாத ஆளுகிட்ட வந்த விலைக்கு குடுத்திடுங்க என்றான்."
அவன் கூறியது தண்டபானிக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. தனக்கு மட்டும் எல்லாம் ஏன் இப்படி நடக்கிறது என்று தன் வாழ்வை நினைத்து நொந்து கொண்டான். நடப்பது நடக்கட்டும் என்று இலக்கில்லாமல் தன் பழைய வழியில் போய்க் கொண்டிருந்தான். ஆனாலும் தினமும் ஏதாவது இதைப்பற்றி செய்தி வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான்.
பிறகு ஒரு நாள் சில அரசு அலுவலர்கள் இவன் வீட்டுக்கு வந்தர்கள், "ஐயா.. உங்களுக்கு முன்பே விஷயம் தொ¢ந்திருக்குமுனு நினைக்கிறேன். உங்க ரெண்டு ஏக்கர் நிலத்தையும் அரசாங்கம் சாலை வி¡¢வாக்கப்பணிக்காக எடுத்துக்குறாங்க.இந்தாங்க G.O நகல். உங்களுக்கு இந்த நிலத்துக்குப் பதிலாக பக்கத்தில இருக்குற கண்ணம் பாளையத்தில் ரெண்டு ஏக்கர் தருவாங்க. உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தா நீங்க மாவட்ட கலெக்டர்கிட்ட குறை தீர்ப்பு கூட்டத்தில மனு கொடுக்கலாம் இல்லைனா கோர்ட்ல ஒரு ஸ்டே ஆர்டர் வாங்கலாம்... “என்று முடித்தார்கள்
“ஆமாம் கோர்ட்டுக்குப் போய் மீதி சொத்தையும் இழக்கச் சொல்றீங்களா?” என்று தன் கடுப்பை வந்தவர்கள் மீது காண்பித்தான்.
அடுத்த சில நாட்களிலே தண்டபானியின் மனதை உலுக்கும் வகையான இன்னொரு வகையான நிகழ்ச்சி நடந்தது. 'சப்பை' என்ற ஊனமுற்ற அனாதை ஒருவன் மூத்தர ரசம் பட்டியில் இருந்த்தான். ஊ¡¢ல் ஏதாவது விஷேஷம் நடந்தால் அவனுக்கு சோறு போடுவார்கள். இல்லை தண்டபானி அவனுக்கு ஏதாவது வாங்கி கொடுத்துக்கொண்டிருப்பான். அவன் எப்போதுமே அந்த ஊ¡¢ன் நிழற்குடையில் தான் இரவு படுப்பது வழக்கம். விடிந்தவுடன் எழுந்து வேறு இடத்திற்கு போய் விடுவான். பகலில் அங்கு தான் படுத்து இருந்தால் பேருந்துக்கு வருபவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று அவனுக்கு தொ¢யும். ஆனால் அன்று பகல் 10 மணி ஆன பின்பும் அவன் படுத்தே கிடந்தான். அவனுக்கு என்ன ஆனது என்று பக்கதில் போய் பார்த்த போது தான் தொ¢ந்தது அவன் வாயில் நுரைத்தள்ளி இருந்தது.
இரவு அவனைப் பாம்பு கடித்து விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் 108ஐ அழைத்து அவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவன் சிகிச்சைப் பலனின்றி உயி¡¢ழந்த்தான். பிறகு அவனது இறுதிச்சடங்குகளை தண்டபானியே செய்தான்.
ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் சப்பை படுத்து இருந்தால் அவனுக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று தண்டபானி வருத்தப்பட்டான். அந்த ஊ¡¢ல் அவனைப் போல் பலர் இன்னும் வீதிகளிலே தான் இருந்து வந்தார்கள். தன் நிலம் கையில் இருந்திருந்தால் கூட அதை வைத்து ஏதாவது செய்திருக்கலாம், இப்போது ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருப்பதை நினைத்து வருந்தினான்.
நிறைய குடித்த பின்பும் அவனது சோகம் மட்டும் இன்று மறையவில்லை.
அடுத்த நாள் வழக்கம் போல் மேல் நிலைத் தொட்டியில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்து விட்டு கிழே இறங்கிக் கொண்டிருந்தான். பொதுவாக தண்டபானிக்குத் தரையில் நடப்பதை விட அந்த தொட்டியின் ஏணியில் ஏறுவதும் இறங்குவதும் கால் வந்த கலை. ஆனால் இன்று ஏனோ மேலிருந்து முதல் படியில் இறங்கும் போதே அவனது செருப்பு கழன்று விழுந்தது. அப்போது தான் தண்டபானிக்கு அவன் வேலை செய்யும் அலுவலகத்தில் கொஞ்ச நாளைக்கு முன்பு தனக்கு அரசாங்கமே ஒரு ஆயுள் காப்பீடு எடுத்து கொடுத்தது ஞாபகம் வந்தது . இதெல்லாம் தனக்கு எதுக்கு என்று அவன் நினைத்தான். அப்போது யாரோ குறும்பாக “நீ மட்டும் தொட்டிலிருந்து கீழே விழுந்து செத்தீன்னா 5 லட்சம் தருவாங்கடா சும்மா இல்லை “என்று கூறியது ஞாபகம் வந்தது. அடுத்த கணமே "நாம் பணமும் கட்டிடம் கட்ட இடமும் கொடுத்தால் அவர்கள் மாற்றுத் திறனாளிகள்இல்லம் ஒன்று அமைத்து தருவார்கள். அதன் பின் எல்லா நிதியும் அவர்களின் அறக்கட்டளையில் இருந்து தருவார்கள்." என்று ராபர்ட் கூறியது நினைவில் தோன்றி மறைந்தது.
தண்டபானியின் கைகள் இப்போது காற்றில் மிதந்து கொண்டிருந்தது. கால் வழுக்கி ஏணியின் இடைவெளியில் சிக்கியது... அவன் உடல் அப்படியே தலைகீழாக சாய உடலின் எடை தாங்காமல் கம்பியில் சிக்கியிருந்த கால் படார் என்ற எலும்பு முறியும் சத்தத்தோடு ஏணியை உரசிக்கொண்டு கீழே விழத்தொடங்கினான். ரத்த ஓட்டம் முழுவதும் தலையை நோக்கி பாயத் தொடங்கியது. அப்படியே தலைகீழாக அந்த ஏணியின் இரும்பு படிகளை உரசிக்கொண்டு தண்டபானியின் உடல் கீழே மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. 'அம்மா...' என்று அலறிக்கொண்டே தரையில் விழுந்தான். அந்த மரண ஓலத்தை கேட்டு அங்கிருந்த அனைவரும் ஓடி வந்தனர்.
ராபர்ட்டும் அலறல் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, ஜன்னல் வழியே தண்டபானியின் உருவம் ஏணியில் இருந்து விழுவது தொ¢ந்து பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்தார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த தண்டபானியை பேருராட்சி வாகனத்திலே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவன் உயிரோடிருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. மருத்துவரும் அவன் இறந்து விட்டதை உறுதி செய்தார்.
முன்பு ஒரு நாள் , ஆயுள் காப்பீட்டு படிவத்தில் நாமினி பெயருக்கு யாரைப் போடுவது என்ற போது, எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் இந்த மாற்றுத் திறனாளிகள்இல்லம் ஆரம்பித்து விடுவோம்ல அதுக்கே கொடுத்திடலாம். அதனால் இப்போதைக்கு நம்ம ராபர்ட் சார் பெயரையே போட்டுரலாம் . சார் எல்லாம் கரெக்ட்டா வாங்கி கொடுத்துருவாரு” என்ற போது, “என்னமோ நாளைக்கே சாகப் போற மாதி¡¢ பேசற தண்டபானி" என்று தான் கூறியது ராபர்ட்டுக்கு ஞாபகம் வந்தது.
தண்டபானி அந்த பணத்திற்காகத்தான் இப்படிச் செய்து விட்டான் என்று ராபர்ட் கண்ணீர் வடித்தான். தண்டபானியை நினைக்கும் போதே பெருமையாக இருந்தது.
தண்டபானியின் இறுதிச்சடங்குகள் முடிந்த கையோடு ராபர்ட் ஒரே வேலையாக அலைந்து இன்ஸூரன்ஸ் பணத்தைப் பெற்று அந்தத் தொண்டு நிறுவனத்திடம் கொடுத்தார். தண்டபானியும் தனக்கு அரசாங்கம் ஒதுக்கும் 2 ஏக்கர் நிலத்தை மாற்றுத் திறனாளிகள்உதவிக்காக அந்தத் தொண்டு நிறுவனத்திற்கே தருவதாக முன்பே உயில் எழுதி வைத்திருந்ததால் எந்த தடங்களும் இன்றி தண்டபானியின் லட்சியம் நிறைவேறியது.
இதுவரை அந்த ஊர்க்காரர்களுக்கு மலிவான மனிதனாகத் தொ¢ந்த தண்டபானி, இப்போது மகத்தான மனிதனாகத் தொ¢ந்தான். பொதுவாக ஒருவன் இறந்தபின் சொர்க்கத்தில் சேருவான் என்று சொல்வது வழக்கம். ஆனால் தண்டபானி இறந்தபின்னோ அந்தப் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பலர் சொர்க்கத்தில் சேர்ந்தனர். ஆமாங்க 'சொர்க்கம்' என்பது தான் தண்டபானி மாற்றுத் திறனாளிகள்இல்லத்திற்கு வைக்க நினைத்த பெயர். அதனால் அந்த பெயரையே அந்த அமைப்பும் ஏற்றுக்கொண்டது.
மரங்களைக் காக்க சில அமைப்புகள் இருப்பது போல மனிதர்களைக் காக்கவும் தண்டபானி போல் சிலர் இ(ற)ருக்கத்தான் செய்கிறார்கள்.