ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday, 6 January 2014

போட்டிச் சிறுகதை 64
கதையின் பெயர் - "ரா" 

 "ஈஸ்ட் டேர்ன் லார்ர்ஜ், டோர் நம்பர் 23, உள்ள கஸ்டமர் இருப்பாரு, எல்லாம் முடிஞ்சதும் காச கறாரா வாங்கிக்கோ"

புது டி-சேர்ட் நிறையவே இறுக்கியது. ப்ரைஸ் பேட்ஜை பிய்த்து விட்டு இடுப்பு தெரிந்தும், தெரியாமலும் இருக்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி கொண்டாள்.

"ஏய் ராக்கி, இந்த பேர்ஸ்ஸயும் கொண்டு போ சிலருக்கு லிப் ஸ்டிக் ஜாஸ்தி இருந்தா பிடிக்கும், தேவ பட்டா யூஸ் பண்ணிக்கோ"

ராகினியை தான் சுருக்கி ராக்கி ஆக்கி இருந்தார்கள். கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்தவள் அவள். கிராமம் என்றால் அவ்ளோ கிராமம் கிடையாது நகரத்தை விட சில ஒற்றுக்கள் தான் குறைவு, வீதிக்கு ரெண்டு கம்பியூட்டராவது இருக்கும்.

பிளஸ் 2 வில் சிறப்பு எய்தி சென்னை காலேஜ் ஒன்றுக்கு சீட் கிடைத்ததால் வந்திருந்தாள். அவளது தாய் முறை மாமா ஒருவன் உதவியில் அவளுக்கு இந்த லேடிஸ் ஹாஸ்டலில் இடம் கிடைத்து இருந்தது. அம்மா தான் வீட்டின் தலை. தனி மரமாக இருந்தே இவளை சின்ன வயசில் இருந்து கவனித்து வருகிறார். அப்பா சின்ன வயதிலே பிரிந்து போய் விட்டார், டிவோர்ஸ் பண்ணினதாக தெரியவில்லை. ரெண்டு அண்ணன்.

ஒரு சமயம் ராகினி வீட்டுக்கு அவளது அம்மாவின் உறவினன் அடிக்கடி வருவதை பார்த்து அவளது அண்ணனிடம் ஒருவன் "அங்கிள் போனப்புறம் உங்க வீட்டுக்கு நான் வரவா? இல்ல இப்பவே....? அங்கிள் போனப்புறம் உங்கம்மாக்கிட்ட கேட்டு சொல்லு" நாலு வயதிலே அந்த கேள்வியின் விஷமம் அவனுக்கு புரிந்து விட்டு இருந்தது.. கையில் கிடைத்த செங்கல்லால்அவனை நோக்கி எறிந்து கோபத்தில் வீட்டை விட்டு ஓடியவன் தான்.

மூத்த அண்ணன் இப்போது நெட் செண்டர் வைத்து நடத்துகிறான். வீட்டு பொறுப்பு அவன் தலையில் தான். ராகினியின் உணவுக்கு மட்டும் காசு அனுப்புவான்.

"ஏய் ராக்கி ஆட்டோ வந்திடிச்சு டி.. சீக்கிரம் கிளம்பு"

கோர்ன் சத்தமாக ரெண்டு முறை அடித்தது.

"ஓகே. நான் கிளம்ப்புரன் டி" அவசரமாக பேர்சை தூக்கி கொண்டு ஓடினாள்.

"கவனம்.. முதல் தடவ தான் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும், போக போக பழகிடும்" கூடவே சிரித்தும் வைத்தாள்.

ஆட்டோ சர்ரென்று கிளம்பியது.

பாடசாலை காலத்தில் கூட ஆண்கள் வாசம் இல்லை. ஹாஸ்டல் தோழிகளிடம் செழிக்கும் ஆடம்பரம், பணம் இப்படி இவளையும் மாற்றி விட்டது. தினம் புது உடைகள், நகைகள், ஐ போனில் இருந்து டேப் வரை, அதை தினமும் வித உணவுகள், பார்ட்டிகள் அவளை வெகுவாக கவர்ந்து விட்டு இருந்தது.

 அதை விட இவளுக்கு நம்பிக்கை அளித்த ஒரு விடயம் இவர்களை போலவே அவள் தங்கி இருந்த அறையில் இருந்த அவளது சீனியர் காலேஜ் பெண்கள் தற்போது திருமணம் முடித்து சந்தோசமாகவும், அமைதியாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 ரெண்டு வருஷம் இப்படி ஒரு சந்தோசம். அது முடிய புதிய வாழ்க்கை, எந்த ஊர், யார் எவர் என்று எதுவும் தெரிய போவதில்லை. கிட்ட தட்ட இது ஒரு வகை ரொட்டேசன்.

சட்டென்று பிரேக் அடித்தது..

"ஏம்மா பொண்ணு, இதான் அவங்க சொன்ன லாட்ஜு, உள்ளார போ, 3 மணியார வாரேன், என்னாவுனா கால் பண்ணு"

ஆட்டோ கிளம்பியது..

உடம்பு கொஞ்சம் இப்போது கூச தொடங்கியது. எங்கோ தொலை தேசத்தில் தனி மரமாக நிப்பது போல இருந்தது. இன்னொரு ஆட்டோ பிடித்து திரும்பிடலாமா என்றும் யோசித்தாள்.

 "ஏய் மணித்தியாலத்திற்கு 3000/- ரூபா டி, 3 மணித்தியாலம் தாண்டிசுனா 9000/-, பிரெஸ் துண்டுனா அதோட டபுள், மிஸ் பண்ணாதடி" தோழிகளின் குரல் காதிற்குள் ஒலித்து கொண்டது.

மூன்று மணிநேரம் 18,000 ரூபா, டிப்சும் சிலவேளை வரலாம்.

"டோர் நம் ... 18, 20, 22, யெஸ் 23"

கதவை மெதுவாக தட்டி

"மேய் ஐ கமின்"

"யெஸ்.. கம்மின் " உள்ளிருந்து

"க்ளோஸ் அன் லொக்"

"முதல் வாட்டியா''

"யா''

கையில் இருந்த சிகாரை கொளுத்தி வாயில் வைத்த படியே

"டோன்ட் பனிக், நான் சொல்ற படியே செய், ஐ கேர் யூ, டோன்ட் வொரி"

"யெ...........ஸ்" சத்தம் குறைந்து இருந்தது. பயத்தில் உடல் மனது எல்லாம் உறைந்து விட்டது போல் இருந்தது.

"பர்ஸ்ட் டேர்ன் லெப்ட்"

மெதுவாக திரும்பினாள்.. அவனது பார்வை அவளை கூனி குறுக்கியது.

"அன் அப் யுவர் ஹேண்ட்ஸ்"

உதட்டை கடித்தவள் அப்படியே கண்ணால் நீர் வழிய அப்படியே குனிந்த படி அமர்ந்து கொண்டாள். இதயம் படு வேகமாக படபடத்து கொண்டது.

"ஏய் ஹே.. கூல்.. கூல்..  பயபடாத ஐ ஜஸ்ட் டீஸ்ட் யூ"

 தொடர்ந்து

"ம்ம்ம் வோர்ம் அப்.. எதுவும் வேணாம்.. டிரெக்டா மைதானதிற்குள்ள போய்டலாம்"

எழுந்தவன் தன்னை நிர்வாணமாக்கி கொண்டு அவளை நெருங்கி........

---------------------------------------------

"ஹேய் ரொம்ப பிரெஸ் நீ, ஐ ஏம் இம்ப்ரெஸ்ட், உனக்கு 20,000 இல்ல 30 தவுசண்ட் கூட கொடுக்கலாம்"

வெலட்டினினை வெளியில் எடுத்தவன் காசை எண்ண தொடங்கினான். ஜீன்ஸை மாட்டி கொண்டே திரும்பியவள்..

கிட்ட வந்தவள்

கொஞ்சம் இதயம் ஸ்தம்பிதவள் போலானாள்..

தனது அம்மாவின் படம்.

"சேர்.. இந்த படத்தில் இருக்கிறவங்க??"

"ஒஹ் இவுங்களா.. கணக்கு படி பார்த்தால் இவுங்க தான் என்னோட முதல் அம்மா.. இப்போ இவுங்க" என்று இன்னொரு படத்தையும் காட்டினான்.

கட்டிலை விட்டு எழுந்தவன் 30000 கையில் வைத்து விட்டு கேசுவலாக வெளியேறினான்.