ஆன்லைனில் புத்தகம் வாங்க

Saturday 25 January 2014

போட்டிச் சிறுகதை 122

முடிவென்பதும் ஆரம்பமே

காலை நேரத்திலே அந்தத் தெரு பரபரப்பாகக் காணப்பட்டது. காலை நேரம் மட்டுமல்ல, காலை 8.30 முதல் மாலை 4.30 வரை இதே பரபரப்பு தான். அதற்கு காரணம் அங்கிருந்த அரசு நடுநிலைப் பள்ளி. பள்ளிக் குழந்தைகளின் சத்தம் தெரு முழுக்க எப்போதும் நிறைந்து இருக்கும். அந்தத் தெரு வாசிகளுக்கு இது ஒரு பொ¢ய தொல்லை தான்.

சும்மா சொல்லக் கூடாது, மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பொ¢யது என்பது போல அந்தக் குழந்தைகள் செய்யும் குறும்புக்கு அளவே இல்லை. “சினிமாப் படங்க்களைப் பார்த்து எல்லாம் நாசமா போகுதுக” என்று காலையிலே அலுத்துக் கொண்டிருந்தார் ஒரு பொ¢யவர்.
“இன்னைக்கு ஹெட் மாஸ்டர் வரட்டும் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் பாரு, இவன் டீ.வீ'ல விஜயகாந்த் படம் பாத்தா போய் உன் அப்பன்,ஆயிய உதை. உனக்கு எம் பேரன் தான் கிடைச்சானா , படாத இடத்தில பட்டு இருந்தா என்ன ஆகுறது?” என்று கத்திக் கொண்டிருந்தார்.

நேற்று விஜயகாந்த் ஸ்டைலில் உதை கொடுத்த பையனோ ரொம்பப் பவ்யமாக நின்று கொண்டிருந்தான். “இனிமேல் சத்தியமா சண்ட படமே பாக்க கூடாது. ஓரே ஒரு அடிக்கே வீட்ல இருந்து ஆள் கூட்டிட்டு வந்த்தர்ரானுக, எப்படி ஹெட் மாஸ்டர் கிட்ட இருந்து தப்பிக்கறது” என்று அந்தக் குட்டி விஜயகாந்த் யோசித்துக் கொண்டிருந்த்தான்.

அப்போது தான் பள்ளிக்குள் நுழைந்தான் சுந்தரம். சுந்தரம் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த்தான். படிப்பைத் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் சுந்தரம் தான் டாப். படிப்பு விஷயத்தில் சுத்த மக்கு.

செருப்பை வகுப்புக்கு வெளியே கழற்றி விட்டு அனைத்து செருப்புகளையும் ஒரு நோட்டம் விட்டான். அவன் எதிர்பார்த்த ஏதோ கிடைக்காதது போல் வகுப்புக்குள் நுழைந்தான்.
அந்தப் பள்ளியின் எல்லா வகுப்புகளிலும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித் தனி வா¢சைகள் தான். பையனுக வா¢சையில் கடைசில கொண்டு போய் தன்னுடைய புத்தகப் பையை வைத்துவிட்டு, உள்ளே ஒரு நோட்டம் விட்டான். அப்போதும் அவன் தேடியது கிடைக்கவில்லை. அடுத்து பொண்ணுக உட்காரும் மூன்றாவது வா¢சையில்  போய்ப் பார்த்தான். அங்கே இவன் தேடிய கருப்பு-சிவப்பு பேக் இல்லை. சா¢ இன்னும் அவள் வரவில்லை என்று முடிவு செய்து விட்டு வெளியே ரோட்டை நோக்கி நடந்து சென்றான். அப்போது அவனுடன் பொ¢யசாமியும் சேர்ந்து கொண்டான். பொதுவாக அவனை யாருமே பொ¢யசாமி என்று கூப்பிட்டதே இல்லை. அவனுக்கு அந்தப் பெயரை வைத்த அவன் அப்பா கூட அவனை ‘பெருசு'னு தான் கூப்பிடுவாரு.

சுந்தரம் யாரையோ தேடி போவது போல பெருசும் ஒருவரை தேடித் தான் வருகிறான்.
இப்போது அவர்களுக்கு மெய்ன் ரோடு தொ¢ந்தது. அத்துடன் இவர்கள் தேடிப் போன ஆட்களும் வந்தது தொ¢ந்தது. “அப்புறம் ,,, என்ன இந்த பக்கமா நடந்து வர்றீங்க” என்றான் அங்கிருந்த முனுசாமி நக்கலாக. ஹ்ம்ம்..எல்லாம் உங்களை வரவேற்கத் தான் என்று கடுப்புடன் சொல்லி விட்டு அவர்களுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான் சுந்தரம்.

முன்னரே இந்த முனுசாமிக்கு சுந்தரத்தோட மேட்டர் தொ¢யும். ஒரு தடவை பொன்னியோட ஊர் எது? வீடு எங்க என்று இவனிடம் தான் கேட்டு தொ¢ந்து கொண்டான் சுந்தரம்.ஆமாங்க, இந்த பொன்னி தான் சுந்தரத்தோட கனவுக் கன்னி. இந்த ஒரு வருஷமா இப்படியே தான் அவளை ஃபாலோ பண்ணிட்டு இருக்கான்.

சுந்தரத்தை பொறுத்த வரை அவன் பார்த்ததிலே அழகான பெண் பொன்னி தான்.நல்ல கலையான முகம். அதிகம் பேசாத உதடுகள். எப்போதும் எதையாவது பேசும் கண்கள், குறுஞ் சி¡¢ப்பு என அவளின் ஒவ்வொரு அசைவுகளும் சுந்தரத்திற்கு நித்திரையைக் கெடுத்தது ஆனாலும் சொப்பனத்தைக் கொடுத்தது.

ஒரு முறை வகுப்பில் 'முருகன் அல்லது அழகு' பாடத்தை தமிழ் டீச்சர் நடத்த ஆரம்பித்தார். அப்போது அவர் அழகு என்ற வார்த்தையின் அர்த்தத்தைப் பு¡¢ய வைப்பதற்காக, "நம்ம வகுப்பிலேயே யாரு ரொம்ப அழகு'னு கேட்டாங்க.' உடனே சுந்தரம் முந்தி¡¢ கொட்டை மாதி¡¢ பொன்னி என்று கத்தி விட்டான். “அய்யோ போச்சு. செத்தோம்” என்று நினைப்பதற்குள், “முத்து லஷ்மி ...” என்று பொ¢சு கத்தினான். பிறகு ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பொண்ணு பேரா சொல்ல ஆரம்பித்தானுக. கடைசியா “மஞ்சுளா..” என்று டீச்சர் பேர எவனோ சொல்ல, இவனுக கிட்ட போய் இந்த கேள்விய கேட்டன் பாரு" என்று டீச்சர் தர்ம சங்கடதில மாட்டிகிட்டங்க. இப்படி பல சந்தர்ப்பங்களில் தன் விருப்பத்தை பொன்னிக்கு மறைமுகமாகத் தொ¢வித்து இருக்கிறான் சுந்தரம்.

அனைவரும் அப்படியே நடந்து கொண்டே வகுப்பை அடைந்தனர். அந்த பள்ளியில் மாணவர்களுக்கும் மணவிகளுக்கும் தனித் தனி வா¢சை வைத்தது போல செருப்புக்கு தனி வா¢சை வைக்கவில்லை. அது சுந்தரத்துக்கு வசதியாகப் போயிற்று. எப்போதும் அவன் தன் செருப்பை பொன்னியின் செருப்புக்குப் பக்கத்தில் எப்படியாவது வைத்து விடுவான். ஆனால் இன்று எப்படியோ பேசிக் கொண்டு வந்ததில் அதை மறந்து விட்டான். அதற்குள் முத்துவும்,முனுசாமியும் பொன்னிக்கு பக்கத்தில் செருப்பை கழற்றி விட்டனர்.

எப்படியாவது செருப்புகளை கலைக்க வேண்டும் என்று பிளான் செய்தான். அனைவரும் வகுப்புக்குள் சென்றனர். சா¢யாக 8:55 மணிக்கு ப்ரேயர் பெல் ஒலித்தது. உடனே சுந்தரம் நான் தான் ஃபர்ஸ்ட்டா போவேன் என்று கத்திக் கொண்டு முதல் ஆளாக வெளியே ஓடி வந்தான். வேண்டுமென்றே படிகளில் இறங்காமல் ஏதோ குறுக்கு வழியில் செல்வது போல வகுப்புத் திண்ணையில் இருந்தே கீழே வா¢சையாக கழற்றி வைத்திருந்த செருப்புகளின் மேல் குதித்து ஓடீனான். மற்ற பையன் களும் செம்மறி ஆடு போல சுந்தரத்தில் பின் ஓடி வந்து ஒட்டுமொத்தமாக எல்லா செருப்புகளையும்  கலைத்தெறிந்தனர்.

வகுப்பாசி¡¢யர் உள்ளே நுழையும் போது செருப்புகள் கலைந்து இருந்தால் லீடர் தான் அதைச் சென்று அடுக்க வேண்டும். அதை ஒரு பனிஷ்மென்ட்டாக சுந்தரம் எப்போதும் எடுத்துக் கொண்டதில்லை. இந்த சந்தர்ப்பத்தைத் தான் அவன் எதிர் பார்த்துக் கொண்டிருப்பான். இன்றும் அப்படி தான் நடந்தது. 'டேய் சுந்தரம், உனக்கு அறிவே இல்லயாடா, எத்தன தடவ சொல்றது, செருப்ப ஒழுங்கா வா¢சையா அடுக்குங்கனு. போ போய் அடுக்கித் தொலை' என்று காட்டமாக கத்தினார்.

"எங்களுக்கா அறிவு இல்ல, அந்த செருப்ப கலைக்க பட்ட பாடு எனக்கு தான தொ¢யும்." என்று முனுமுனுத்துக் கொண்டே, தன் செருப்பை பொன்னியின் செருப்புடன் சேர்த்து வைத்தான். அந்த ஜோடிப் பொருத்தத்தை சற்று நேரம் ரசித்து விட்டு வகுப்புக்குள் சென்றான்.

முழு ஆண்டுத் தேர்வுக் காலஅட்டவணை போர்டில் எழுதப்பட்டிருந்தது. "டேய் எந்த பா¢ட்சைக்கும் லீவே இல்லடா. தொடர்ந்து வெச்சுட்டானுக" என்று பெருசு பெருமூச்சு விட்டான். "லீவு விட்டா மட்டும் அப்படியே படிச்சு ஃபர்ஸ்ட்டா வந்துருவ", என்று அவனை ஒரு ஓட்டு ஓட்டினான். உடனே பெருசும் பதிலுக்கு,”மகனே, இந்த செருப்பு ஜோடி சேர்க்கர வேலை எல்லாம் வெறும் 15 நாளைக்கு தாண்டா" என்று பெருசும் ஓட்டினான்.

இதற்கு சுந்தரம் எந்த பதிலடியும் தரவில்லை, அவன் மனமும் பெருசு சொன்னதையே நினைக்க தொடங்கியது. 15 நாளோட இந்த ஸ்கூல் வாழ்க்கை முடிஞ்ச்சிடும். அப்புறம் வேற ஸ்கூல்ல போய் சேரணும்.பொதுவாக இங்கு எட்டாவது முடித்துவிட்டு நல்லா படிக்கற பசங்க எல்லாம் புளியம்பட்டி ஹைஸ் ஸ்கூல்ல சேர்ந்து விடுவார்கள். அந்த ஸ்கூல்ல் ரொம்ப கண்டிப்பான ஸ்கூல். அதுவும் இல்லாம ஒரு என்ட்ரன்ஸ் எக்ஸாம் வைத்து அதில் பாஸ் ஆகுறவங்ககளை மட்டும் தான் சேத்துக்குவாங்க. மீதி படிக்காத மக்கு பசங்க எல்லாம் தாரபுரத்தில போய் சேர்ந்துடுவாங்க.

முன்பெல்லாம் சுந்தரதுக்கு தராபுரம் ஸ்கூல்ல சேருவது தான் ஆசை. ஆனால் பொன்னி எப்படியும் அங்கு வந்து சேர மாட்டாள். ஏழாம் வகுப்பு முடிந்ததுமே அவளின் அப்பா அவளை புளியம்பட்டி ஸ்கூல்ல சேர்க்கணும்னு வந்து T.C கேட்டார். ஆனால் இந்த மாணிக்கம் வாத்தியார் தான் பேசி T.C தராம சமாளிச்சார். அப்பவே தந்திருந்த ஒரு பிரச்சனையும் வந்திருக்காது. அப்ப எல்லாம் அவ மேல் ஒரு 'இது' வரலை. ச்ச.. எல்லாம் இந்த ஒரு வருஷத்தில தான். அதானால சுந்தரம் எப்படியும் புளியம்பட்டில சேர்ந்த்துடணும்னு முடிவெடுத்தான்.

அடுத்த 15 நாட்கள் ஒடியதே தொ¢யவில்லை . தேர்வு முடிந்த மறு நாளே புளியம்பட்டி சென்று, அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கி வந்தான். அன்று முதலே வீட்டில் படிக்கவும் ஆரம்பித்து விட்டான். அவன் பெற்றோர்கள் பார்த்து விட்டு, "என்ன? பா¢ட்சை அப்ப கூட இப்படி படிக்காதவன் இப்ப இப்படி படிக்கரானே, ஒரு வேளை பா¢ட்சை ஒழுங்காக எழுதலையோ?, மறுதேர்வுக்கு இப்பவே படிக்க ஆரம்பித்து விட்டானோ?" என்று பயப்பட ஆரம்பித்தனர்.

“ஊ¡¢லிருந்து பிரஸிடெண்ட் ஐயா பேரனுங்க எல்லாம் வந்திருக்கானுக, அவங்களெல்லாம் டீவீல சச்சின் வெச்சிருக்கற மாதி¡¢  பேட் கொண்டு வந்திருக்காங்க. ஆனா விளையாட தான் ஆள் பத்தலையாம்” என்று அவன் படிக்க ஆரம்பித்த அடுத்த நாளே பெருசு சொன்னான்.

சுந்தரத்துக்கு சின்ன வயசிலிருந்தே அந்த மாதி¡¢ பேட்ல விளையாடணும்னு ஒரு ஆசை. அவன் ஊ¡¢ல் கி¡¢க்கெட் எல்லாம் வெறும் கட்டையை வைத்தோ அல்லது தென்னம்மட்டயை வைத்தோ விளையடுவது தான் வழக்கம். அவன் படித்த ஸ்கூலில் ஒரு பேட் உள்ளது, ஆனால் அதை யாருக்குமே விளையாட தர மாட்டார் ஹெட்மாஸ்டர்.ஒரு முறை இன்ஸ்பெக்ஷனுக்கு AEO வந்தப்ப பீ.டீ பீ¡¢யடில் விளையாட கொடுத்தார்களாம், ஆனால் AEO எல்லாரையும் கேள்வி கேட்பாரு, யாரவது பதில் தப்பா சொன்னா தோல உ¡¢ச்சுருவேன்னு ஹெட்மாஸ்டர் பயமுறுத்துனதால அன்றைக்கு எங்க தாத்தா சீ¡¢யசா இருக்கிறார்னு சொல்லி லீவு போட்டு விட்டான். எனவே இந்த முறை எப்படியாவது பேட்டை பிடித்து விளையாடியே ஆக வேண்டும் என்று அந்தப் பசங்களிடம் போய்ச் சேர்ந்து கொண்டான். 

அதற்குப்பின் அவன் அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் பற்றி நினைக்கவே இல்லை. ஆனால் பொன்னியை மட்டும் கோடைப் பண்பலையில் மெலடி பாட்டு கேட்கும் போதெல்லாம் நினைத்துக் கொண்டான்.

என்ட்ரன்ஸ் எக்ஸாம் தேதியும் வந்தது, எதுவுமே படிக்காமல் எழுதச் சென்றான்.பெருசும் கூடவே வந்திருந்தான்.

பா¢ட்சை எதிர்பார்த்தது போலவே இருந்தது.ஒண்ணும் பு¡¢யல. எல்லா கேள்விக்கும் விடை 'C'னு போட்டு விட்டான். பொன்னி இவனுக்கு நேர் எதிர் பெஞ்சில் பச்சை நிற சுடிதா¡¢ல் எழுதிக் கொண்டிருந்த்தாள். அவளையே ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது பெருசையும் பார்த்தான். ஏதோ எல்லாம் படித்தது போல கணக்கு போட்டு பார்க்க அடிஷனல் சீட்டெல்லாம் கேட்டு வாங்கி அலப்பறை பண்ணிக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக இரண்டு மணி நேரம் முடிந்ததும் பெல் அடித்தார்கள். பேப்பரை கொடுத்து விட்டு முதல் ஆளாய் வெளியேறினான் சுந்தரம். ஆனால் பெருசு  பெல் அடிச்சும் பேப்பரைத் தரவில்லை, அப்புறம் வாத்தியார் வந்து பேப்பரை புடிச்சு இழு இழுனு இழுத்து அது கடைசியா கிழிஞ்சே போச்சு. உன்னை மாதி¡¢ ஒரு நாய் இந்த ஸ்கூலுக்கு தேவையே இல்ல. இதை நீயே வெச்சுக்கோ என்று பேப்பர மூஞ்சிலயே விட்டு எறிஞ்சார். அங்கு இருந்த யாராலும் சி¡¢ப்பை அடக்கவே முடியவில்லை. அனைவரும் விழுந்து விழுந்து சி¡¢த்தார்கள்.

ஒரு முறை கி¡¢க்கெட் விளையாடும் போது இவன் அடித்த பந்து காளியம்மா வீட்டு ஓட்டின் மேல் விழுந்து விட்டது. ஆனால் அவளோ ஏதோ அவள் தலையிலே விழுந்த மாதி¡¢ பொ¢ய ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டாள். அவ்வளோ தான், "இனிமேல் நீ கி¡¢க்கெட் விளையாட போக கூடாது, ஒழுங்கா அப்பா கூட வேலைக்குப் போ.போய் அவருக்கு உதவியா இரு" என்று அம்மா ஆர்டர் போட்டு விட்டாள்.

அடுத்த நாள் அப்பாவோடு வேலைக்குப் புறப்பட்டான். அவன் அப்பா வண்டியை புளியம்பட்டிஸ்கூலில் கொண்டு போய் நிறுத்தினார். 'அப்பா, இந்த ஸ்கூல்லயா வேலை?" என்று  ஆச்சர்யமாக கேட்டான். "ஆமாண்டா,இன்னும் இரண்டு நாளைக்கு இங்க தான் வேலை" என்றார்.

முதல் நாள் சில வகுப்பறைகளில் ஜன்னல்.கதவுகளை சா¢ செய்து விட்டு, அடுத்த நாள் ஆபீஸ் ரூமை சா¢ செய்ய ஆரம்பித்தார். அப்போது அங்கிருந்த பீரோவில் உள்ள புத்தகங்கள், பழைய புகைப்படங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரம். அப்போது அவன் கண்களில் ஒரு பா¢ட்சை பேப்பர் கட்டு தொ¢ந்தது. ஒரு வேளை நாம் எழுதிய எண்ட்ரன்ஸ் பேப்பரா இருக்குமோ என்று அதை எடுத்துப் பார்த்தான். பார்த்தவுடன் அவன் கண்களில் ஒரு ஒளி தொ¢ந்தது. உடனே தன் பேப்பர் இருக்கிறதா என்று கட்டைப் பி¡¢த்துத் தேட ஆரம்பித்தான். வேகமாக ஒவ்வொரு பேப்பராய் புரட்டும் போது, பொன்னியின் பேப்பரும் தாண்டிப் போனது. அதைத் தனியே எடுத்து வைத்தான். "இன்றைக்கு எல்லா விடையையும் பொன்னி பேப்பர்ல இருக்கிற மாதி¡¢ சா¢யா மாத்திடணும்" என்று முழு  வீச்சில் தேடினான். ஆனால் அவன் பேப்பர் மட்டும் காணவில்லை. மொத்தம் எழுபது பேர் எக்ஸாம் எழுதினாங்க, ஆனால் அங்கு ரொம்ப குறைவான பேப்பரே இருந்தது. வேறு எங்காவது இருக்கின்றதா என்று எல்லா இடங்களிலும் தேடினான். எங்கும் கிடைக்கவில்லை.

அப்போது தான் கவனித்தான், அந்த பேப்பர் கட்டில் "கண்ணகி டீச்சருக்கு" என்று எழுதியிருந்தது. "ஓஹோ அப்ப என் பேப்பரெல்லாம் வேற யாரோ திருத்த எடுத்துட்டு போய்ட்டாங்க.இப்போ என்ன செய்யலாம்??" என்று யோசிக்க ஆரம்பித்தான்.

எப்படியும் தன் பேப்பரை திருத்துபவர், எல்லா கேள்விக்கும் விடை 'C'னு  போட்டதை பார்த்தவுடன், பெருசு பேப்பரை கிழித்துது போல கிழித்துத் தான் எறியப் போகிறார்கள். அதனால இப்ப ஒரே வழி பொன்னியோட பேப்பா¢ல் விடைகளை மாத்தி விட்டுட்டா அவ எப்படியும் தாரபுரம் தான் வந்து சேரணும். இதைத் தவிர வேறு வழியே இல்லை என்று தன் பேனாவை எடுத்தான்.

இவ்வளவு நாளாக பெருசு, அவனுக்கும் முத்துவுக்கும் இடையே உள்ள காதலைப் பற்றிப் பேசும் போதெல்லாம் "இவனுக்கெல்லாம் காதல் ஒரு கேடா. இவன் அந்த ஸ்கூலில் உள்ள எல்லா புள்ளகளையும் தான் பார்க்கறான். அப்புறம் என்ன முத்துவோட மட்டும் லவ்வு." என்று சுந்தரம் நினைப்ப்பான்.  அவனுக்கு அவனுடைய காதல் தான் புனிதமானது என்ற எண்ணம், அவனும் அதற்கேற்றது போல எப்போதும் பொன்னியை தவிர வேற எந்தப் பெண்ணுடனும் அவன் அவ்வளவாகப் பேசுவது கூட கிடையாது.

ஆனால் அவன் இப்பொழுது செய்யும் கா¡¢யத்தால் இனிமேல் தானும் தன் காதலைப் புனிதம் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடியாது. தன் அற்ப சுயநலத்திற்காக தான் அவளின் வாழ்வையே வீணாக்குவாதாக உணர்ந்தான். இனி எப்போதாவது இது அவளுக்குத் தொ¢ந்தால் கண்டிப்பாக அவள் தன்னை வெறுக்க இது ஒரு காரணமாக அமைந்து விடுமோ என்று அவன் மனத்துள் பல எண்ணங்கள் எழுந்தது.

இறுதியாக அந்த பேப்பா¢ல் விடைகளை மாற்றும் எண்ணத்த்ற்கு முற்றுப்புள்ளி வைத்தான். தன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதைப் போல உணர்ந்தான்.

"புளியம்பட்டி ஸ்கூல் என்ட் ரன்ஸ் எக்ஸாம் ¡¢சல்ட் வந்து விட்டது, போய் செலக்ட் ஆயிட்டியானு பாத்துட்ட வா" என்று அவன் அப்பா சொன்னார். அதை ஏன் போய்ப் பார்க்கணும், எழுதிய போதே தொ¢ ஞ்சுருச்சே. என்று நினைத்துக் கொண்டு ¡¢சல்ட் பார்க்கவே போகவில்லை. மாலையில் அவன் "அப்பா நான் செலக்ட் ஆகலை. என்னை தாரபுரம் ஸ்கூல்லயே சேர்த்து விடுங்க" என்றான்.

அவன் அப்பாவும் அங்கயே சேர்த்து விட்டார். 

பெருசும் தாரபுரம் ஸ்கூல்லயே சேர்ந்தான். அங்கும் தனது நற்பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான், அதாங்க காமெடி பண்றது. வந்து சேர்ந்த முதல் நாளே அங்கு உள்ள எல்லா¡¢டமும் சென்று,
"ஹாய், ஐ யம் பொ¢யசாமி, நைஸ் டு மீட் யூ." என்று எல்லோ¡¢டமும் கை கொடுத்து அறிமுகம் செய்து கொண்டிருந்தான். அப்படியே பசங்க வா¢சை முடிந்ததும் பொண்ணுக வா¢சைக்குச் சென்றான் பெருசு. அப்போது தான் அவன் திட்டம் என்னவென்று சுந்தரத்துக்குப் பு¡¢ந்தது. இவன் அவர்களை நோக்கி வருவதைப் பார்த்ததுமே அங்கு உள்ள ஒரு பெண் எழுந்து வெளியே ஓடி விட்டாள். அவ்வளோ தான், அந்த கிளாஸ் முழுவதும் சி¡¢ப்பலையில் மூழ்கியது. அந்த சி¡¢ப்பலை முடிவதற்குள் வெளியே ஓடிய பெண் ஒரு வாத்தியாருடன் உள்ளே வந்தாள்.

 "எவண்டா இங்க பொம்பள புள்ளய கையப் புடிச்சு இழுத்தது? இதுக்குத் தான் நீங்களெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வர்றீங்க்களா?" என்று கத்திக் கொண்டு வந்து பெருசோட
கையைப் புடிச்சு ஒரு முறுக்கு முறுக்கினார். அடுத்து பளார்..பளார்னு ரெண்டு அறை விட்டு விட்டு, இனிமேல் எவனாவது புள்ளைக பக்கம் பார்த்தாலே கொன்னு புடுவேன்" என்று அனைவரையும் எச்சா¢த்து விட்டுத் திரும்பினார். அழுது கொண்டே வந்த பெருசைப் பார்க்க பாவமாக இருந்தாலும், யாராலும் இன்னும் சி¡¢ப்பை அடக்க முடியவில்லை.

அடுத்த நாள் திடீரென்று ஒரு 10 பேர் முன்னால் சென்று, பெருசுவிடம் "ஹாய் பொ¢யசாமி, ஐ யம் ராம்குமார். நைஸ் டு மீட் யூ.", என்று கை கொடுத்து அவனை ஓட்ட ஆரம்பித்தனர்.
“ஆஹா...அதுக்குள்ள பெருசு இவ்வளோ தூரம் ஃபேமஸ் ஆயிட்டானா?" என்று சுந்தரம் தன் பங்குக்கு, "கையப் புடிச்சு இழுத்தியா, அந்த பொண்ணு கையப் புடிச்சு இழுத்தியா? ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கால் தகராறு.." என்று சொல்லி மீண்டும் ஒரு சி¡¢ப்பலையை ஏற்படுத்தினான்.சுந்தரம் தான் இப்பொது பழைய நிலைக்கு வந்துவிட்டதாக உணர்ந்தான். அவனுக்குள் ஒரு இனம் பு¡¢யாத உணர்வு ஏற்பட்டிருந்தது.

அப்போது வகுப்பாசி¡¢யர் உள்ளே நுழைந்தார். அட்டெண்டன்ஸ் எடுக்க ஆரம்பித்தார். அன்று தான் முதன்முதலில் அட்டெண்டன்ஸ் எடுப்பதால்,ஒவ்வொரு பெயருக்கும் யார் எழுந்திருக்கார்கள் என்று எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பொ¢யசாமியின் பெயர் வந்தது, சுந்தரத்தின் பழைய ஸ்கூலில் பெருசுவின் பெயருக்கு பிறகு பொன்னியின் பெயர் வரும். இங்கே முதல் நாள் எப்படி எல்லோரும்  பெயர் சொல்லும் போது திரும்பி பார்ப்பது போல, தினமுமே பொன்னி அட்டெண்டன்ஸ் சொல்லும் சுந்தரம் திரும்பிப் பார்ப்பான். அவளும் அட்டெண்டன்ஸ்  சொல்லி முடித்ததும் இவன் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு தான் உட்கார்வாள்ஆனால் இப்போது பெருசு பெயருக்கு பிறகு பொன்னி வரப்போவது இல்லை என்று சுந்தரம் ஏக்கமுற்றான். 

ஆனால் பெருசுவின் பெயருக்கு பின் வந்தது பொன்னி என்னும் பெயர் தான். உடனே "உள்ளேன் ஐயா" என்று பதில் வந்தது. அந்த குரல் சுந்தரத்துக்குப் பா¢ட்சையமான குரல் தான். சுந்தரம் அந்த குரல் வந்த திசை நோக்கிப் பார்த்தான். அங்கே அவன் கண்டது அவனது பொன்னியேயன்றி வேறொன்றும் இல்லை.இவன் எப்படியும் திரும்பிப் பார்ப்பான் என்று எதிபார்த்தது போல அவளும் அட்டெண்டன்ஸ்  சொல்லி விட்டு இவனை பார்த்துக் கொண்டே உட்கார்ந்தாள்.

"பொன்னி எப்படி இங்கு வந்து சேர்ந்தாள்?, ஒரு வேளை ‘பொன்னிக்கும் அங்க சேர விருப்பமே இல்ல, அவ செட் புள்ளைக எல்லாம் தாரபுரத்தில சேருவதால அவள் எக்ஸாம் சா¢யா எழுதலையாம்' ன்னு பெருசு சொன்னது உண்மை தான் போல .அவளுக்கும் எக்ஸாம் ஊத்திக்குச்சா.. " என்று சிலாகித்துக் கொண்டிருக்கும் போதே சுந்தரம்..சுந்தரம் என்று  தன் பெயரை யாரோ ஏலம் விடுவது போலத் தோன்றியது அவனுக்கு. உடனே எழுந்து "உள்ளேன் ஐயா" என்றான்.

"உள்ளேன் ஐயாவா? எங்க உள்ளீர்கள் ஐயா?" என்று வாத்தியார் நக்கலாக கேட்டார். "முதல் நாளே தூக்கமா,போ.. போய் முகத்தைக் கழுவிட்டு வாடா." என்றார்.

சுந்தரம் குஷியாக எழுந்து வெளியே சென்றான். அவன் அங்க போய் என்ன பண்ணுவான்னு பெருசுக்கும்,பொன்னிக்கும் நன்றாகவே தொ¢ந்திருந்தது.வெளிய போனவுடன் பொன்னியின் செருப்பு எங்கே என்று தேடி தன் செருப்பை அவள் செருப்புடன் ஜோடி சேர்த்து விட்டு முகம் கழுவப் போனான்.

பிறகு இன்டர்வல் பீ¡¢யடில் வெளியே வந்து தன் செருப்பின் பக்கத்தில் சுந்தரத்தில் செருப்பு இருப்பதைப் பார்த்த பொன்னி, அவனிடம் சென்று , என்ன சுந்தரம்? முதல் நாளே வேலையை ஆரம்பிச்சுட்ட  போல.. என்றாள். "ஒருவேளை தான் செருப்பைக் கழற்றி விட்டது பற்றி பேசுகிறாளோ?" என்று நினத்துக் கொண்டே, "எதைச் சொல்ற பொன்னி?" என்றான்.

அவளும் சற்றே சுதா¡¢த்தவளாக "இல்ல, முதல் நாளே பெருச ஓட்ட ஆரம்பிச்சுட்டீங்களே " அதைச் சொன்னேன் என்று கண்ணாலே சுந்தரத்துக்கு காதல் காட்டிச் சென்றாள். “முற்றுப் புள்ளி அருகில் நீயும், மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே...” என்ற சிச்சுவேஷன் சாங்கோடு அவளைத் தொடர்ந்தான்...
 --------------------------------------------------------------------------------------------------------------------------------