ஆன்லைனில் புத்தகம் வாங்க

Saturday, 25 January 2014

சிறுகதைப் போட்டி 95

உருமாற்றம்

மழை நிற்பதாயில்லைவண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு நிழற்குடையில் நின்றுகொண்டேன்நெடுஞ்சாலை வெறிச் சோடிக் கிடந்தது. மழையோடு மழையாக மின்விளக்கின் ஒளியும் இறங்கிக் கொண்டிருந்ததுஎங்கிருந்தோ ஓடிவந்த, நெடுஞ்சாலையில் பிழைப்புதள்ளும் நாயொன்று உடல் சிலுப்பிநாலு சுற்று சுற்றி ஒரு மூலையில் முடங்கிக் கொண்டதுநாய் வந்த நேரம் மின்சாரம் நின்று போனது

எங்கும் இயற்கையிருள் வியாபித்துக் கொண்டது.
பார்வையை வானம் நோக்கி விட்டேன். அதுவும் கொஞ்ச நாட்களாய்த்தான் இந்த வான் நோக்குதல்முன்பெல்லாம் ஒன்றுமே தோன்றியதில்லைபிரபஞ்சமே எங்கும் இருக்கிறது, இருந்தது, இருக்கப் போகிறது”  இவ்வரிகள் எங்கும்படித்ததா அல்லது யாரேனும் சொல்லக் கேட்டதா எனத் தெரியவில்லை . ஆனால் சத்தியமாக என்மனதில் உதித்திருக்க வாய்ப்பில்லை.வான் நோக்கும் போதெல்லாம் இவ்வரிகளை உணர்வது போல் மனம் ஒரு மாயமான நிலைக்கு தள்ளப்படுகிறது

இந்நிலையில் வாய்பிளப்பேனோ இல்லையோமனம் ஆச்சரியத்திலும் கேள்விகளிலும் ததும்பும். இந்தப் பிரபஞ்சம்தான் எங்கும் இருந்ததெனில், நான் ? நானும் இங்கூதானே இருந்தேன் இருக்கிறேன் இருக்கப் போகிறேன்மழைமலை, பெருங்கடல், அண்டம், பிரபஞ்சம் என இப்பெரும் பிரம்மாண்டத்தில் பிரக்ஞை கொண்ட சிறுசதைப் பிண்டமென நான். வாழ்ந்து மரித்து உருதெரியாமல் போகப் போகிறேன். இவ்வளவுதானா? மனம் ஏற்க மறுக்கிறது.

மண்கண்ட முதல் உயிர்தொட்டு ஓயாது நடந்தேறும் உருமாற்றம்வெறும் உருமாற்றம்அவ்வளவுதானா? பிரபஞ்ச இயக்கம் துவங்கியதிலிருந்து இது ஒன்றுதான் நடந்தேறுகிறதாசிந்தனையினூடே நாயின் குளிர் முனகல். இந்தநாய் கூட எங்கிருந்தோ எப்படியோ உருமாறி வந்ததுதானாஇந்த உருமாற்றம் ஒன்றே நிலையானதெனில் பின்மனித வாழ்வில் ஏன் துன்பம்ஏன் நாஜிக்கள் தோன்ற வேண்டும்? 


உருமாற்றத்தின் விளைவாக ப்ரக்ஞை வந்து அதன் பொருட்டே பிரிவதற்குள் ஏன் இவ்வளவு துன்பங்களை வாரி வாரி நம் மீது கொட்டிக் கொள்கிறோம்? தற்கொலை சிசு கொலை இனப் படுகொலைநாமே பலவந்தமாக ப்ரக்ஞையை பிரித்தெரிந்தாலும்ஒன்றுமில்லா இவ்வுடல் இங்ககுதானே போகிறது. பின் ஏன் சோகம் ? மகன் இறந்தால், மனைவி இறந்தால், தாய் தந்தை நண்பன்…. ஒன்றுக்கும்  லாயக்கில்லாத ஆனால் நிதர்சனமான மனித உணர்வுகள்


டேய்டைம் ஆச்சு ஷோ ஸ்டார்ட் பண்ணிடுவான். சீக்கிரம் வா” 



என்று என்னை முந்ததிக் கொண்டு வண்டியில் தெருக் கோடியில் திரும்பி மறைந்தான்கார்த்தி. நான் தெருக்கோடி அடைந்தபோதுபைக் ஒரு பக்கம், கனவுகளையும் உறவுகளையும் காதலையும் சுமந்துத் திரிந்த அவன் ஒருபக்கம்ஸ்பாட் அவுட் என்றார்கள்.

அன்று அழுதேன்சூரையல் காட்டிடக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நினைப் பொழியும் முன் மண்டைக்குள்உருமாற்றம்என்ற சொல்பலமாக ஒலித்ததுஅவனைஎன்னை போலதான் பெருங்குரலெடுத்து பெய்யும் இம்மழையும். நாளை இருந்த தடம் தெரியாமல் போய்விடும்இதுதான்  உண்மைஇந்த உண்மையை தாண்டி வாழ்வை நடத்த ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது.

இது போல் பலமுறை வாய்திறவாது புலம்பியுள்ளேன். புலம்பாத தருணங்களில் கூட இச்சிந்தனை என்னுடனேயே இருந்து வந்திருக்கிறதும்ச் என்னபோ”-எப்பொழுதும்  என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கும் வரிகள் . ஒரே ஒரு தருணம் மட்டும் விதிவிலக்கு


அவளோடு கூடிக்கிடக்கும் தருணம் மட்டும்தான் இந்நினைப்பு இருப்பதில்லை. உலகில் எனக்கு இருக்கும் ஒரே ஸ்வாரஸ்யம் கங்காதான் .அவள் மட்டும்தான். நான் நானாக இருந்தால்தான் பிரச்சனை.


அவளோடு சேர்கையில்,‘பாதிநான்’அழிந்து போகிறேன்ஒவ்வொரு  அசைவையும் அவளுக்கானதாக மாற்றிக் கொள்கிறேன். படிக்கும் படிப்பில் பிடிப்பே கிடையாது எனக்குடீசல் எஞ்சின் பெட்ரோல் எஞ்சின் கார் புரேட்டர் கத்தரிக்கா!!

ஆனாலும் படிக்கிறேன்.அவள்அப்பா தலையசைக்க வேண்டுமேஎன்னுள் மற்றொருவன் உண்டுஎங்கு நல்ல வார்த்தை வாயில் வந்துவிடப் போகிறது என்று யொசித்து யோசித்து பேசுபவன். அவன்  ஒரு…. அவன்…. ம் ‘pessimistic cynical misanthrope.டேய் இது சும்மாடாஆர்காஸம்உருமாற்றம் உருமாற்றம்னு உளர்ரியேஅது நடக்கதான் இவ்வளவும்…. 



என்ன மொத்தமா உனக்கு நூறு ஆர்காஸம் தேவபடுமா இல்ல ஆயிரமாஅவ்வளவுதான் கங்காவும் அலுத்து போய்டுவாலவ் லவ்னு ரூம்குள்றதான போற!!”என்னுள் இக்குரல் ஒலித்தால் என்னை நானே செவிடாக்கிக் கொள்வேன். காதல் மீதான புனிதத்தை மட்டும் தர்க்கம் கொண்டு தகர்க்காமல் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதன் புனிதம் விழும் நாள் நான் என்னை நானே துண்டித்துக் கொண்டு விட வேண்டியதுதான் இவ்வுலகிலிருந்துஅதன் இடத்தை அது தவிற வேறேதுவும் நிரப்ப முடியாதுநாயும் நானும் மட்டும் நின்றிருந்த நிழற்குடையில் பல மனிதப்பதர்கள் சேர்ந்து கொண்டன. ஏனோ எனக்கு கூட்டமே பிடிப்பதில்லை

மழை ஓய்ந்தபாடில்லை. “நான் கால் பண்ணி சொன்னப்றம் வீட்டுக்கு வா. நான் சொன்னப்றம் வந்தா போதும் என்ன!” என்றாள். அவள் வீட்டண்டை நின்று கொண்டு காலுக்கு காத்திருக்கலாம் என்றால் இந்த மழை!!!

கரென்ட்டும் இல்லை.. 


உண்மையிலேயே முகம் தேரியாதவர்கள் அருகில் நின்று கொண்டு எவ்வளவு நேரம் கழிப்பது?பாத்துப்பம் என்று வண்டியை நோக்கி நடை கட்டினேன்.  நாயும் என்னுடனேயே இரங்கி சாலை நோக்கி ஓடியது ஏய் ஏய்..போச்சு போச்சு” . டயர் தேயும் கிரீச் சப்தம். நாய் மேல் ஏறிய அப்பாச்சி ஒன்றுதன் மேலிருந்த யுவனையும் யுவதியையும் தள்ளிவிட்டுச் சரிந்தது. அவரவர் தூக்க ஓடினார்கள்நான் பைக்கை நிமிர்த்தி ஓரம் கட்டினேன்ஒரே பரபரப்பு. பாத்து வரக்கூடாதாஅறிவுரைகள்நான் என் வண்டியில் கிக் அடித்த போதுதான் அக்குரல் கேட்டது. அந்த யுவதியுடையது.ரொம்பவும் பரிட்சயமான குரல்.எனக்கு தலை கிறுகிறுத்ததுகங்கா குரல்தானே அது.. அவன் யார்?... இந்தமழையில் நெடிஞ்சாலையில்?... ஒரு பக்கமாதானே உக்காந்திருந்தா!’ இல்லடாமுட்டாள்ரெண்டு பக்கம் கால் போட்டு அவன இருக கட்டிகிட்டு உக்காந்திருந்தா..’



! வாயமூடு. அவஅப்டிபண்ணமாட்டா.’


போடா லூசு உன்ன விட்டு வேற எவனோடையோ ஊர் சுத்துறா… 


நீ தொட்டதுக்கும் ப்ரபஞ்சம் ப்ரபஞ்சம்னா? உனக்கு பெரிய தத்துவஞானினு நினைப்பு?  வேற எவனோ தட்டிகிட்டு போய்ட்டான். சொன்னா கேளு காதலும் இல்ல கருணக்கிழங்கும் இல்ல.. ஆர்காஸம்ஆஆஆ... ஆர்காஸம் அவ்வளவுதான்..  வாழ்க்கைக்கு அர்த்தம் தராராம் காதல வச்சுஅதுக்கு ஏது அர்த்தம்?... இருக்குங்குரவன் முட்டாபயடேய் என்ன இன்னும் அங்கயே பாக்குற? பக்கத்துல போய் அவ கங்காதான்னு உறுதி படுத்திகிட்டு சூஸைட் பண்ணிக்கோ…. தயவு செய்து பண்ணிக்கோTHE BIGGEST BOON IN THE WORLD IS NOT BEING BORNஸோ!! சூஸைட் பண்ணிக்கோ...’ செலுத்தப் பட்டவணாக கூட்டத்தை விளக்கி அவளருகில் சென்றேன். விழுந்த அதிர்ச்சியில் அழுதுகொண்டிருந்தாள். அவளேதான்!! கங்காதான்.அடைத்திருந்த தொண்டையை மீறி வாய் திறந்தேன்.

“கங்கா”