ஆன்லைனில் புத்தகம் வாங்க

Sunday, 5 January 2014

போட்டிச் சிறுகதை 56

சிறுகதை - ஒன்பதாவது புணர்ச்சி
--------------------------------------------------------

காண்டீபனைப் பார்த்தால் எட்டு பெண்களை புணர்ந்தவன் என்று நம்பவே முடியாது. சினிமாக்களில் வரும் ப்ளேபாய் கதாபாத்திரங்களின் சாயல்கள் அவனிடம் இல்லை. ஒன்றுகூட இல்லை. வயது இருபத்தி எட்டிலிருந்து முப்பதிற்குள் இருக்கலாம், ஐந்தரை அடி உயரம், மாநிறம், முன்வழுக்கை, பார்வை குறைபாடு காரணமாக தடிமனான கண்ணாடி, விக்ரம் பிரபுவினுடையது போன்ற மூக்கு, அதற்கு கீழே புல்லுக்கட்டு போல சீர் செய்யப்படாத மீசை, சிகரெட் குடித்து குடித்து கருத்த வறண்ட உதடுகள். ‘பாடி’ தேவையுற்ற பாடி, இளந்தொப்பை, பைல்ஸ் இருக்குமோ என சந்தேகிக்கக்கூடிய நடை. இத்தனை பலவீனங்கள் இருந்தும் அவனைச் சுற்றி பெண்கள் இருந்தனர். காரணம், அவனுடைய பதவி, பணம், பகட்டு, ஸோ அண்ட் ஸோ. டாட் நெட் வித்தைக்காரன். பணியில் சேர்ந்து ஒன்பது வருடங்களிலேயே அசுர வளர்ச்சி. தற்போது சென்னையின் ஒரு பெருநிறுவனத்தில் திட்ட மேலாளர். வலதுபுற புட்டம் புடைக்க சம்பளம் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. திருமணமாகவில்லை. வீட்டிற்கு ஒரே மகன். அப்பா ஆரம்பகால ஈழ ஆதரவாளர். தற்சமயம் பெற்றோர் சொந்த ஊரான கோவையில் செட்டில்ட். காண்டீபன் மட்டும் சென்னை ராஜீவ் காந்தி சாலையிலுள்ள ஒரு அடுக்கு குடியிருப்பில் வசிக்கிறான். சென்னை வந்த புதிதில் அம்மாஞ்சியாகத்தான் இருந்தான். சில வரிகளுக்கு முன் குறிப்பிட்ட ப3 கிடைத்தபிறகு ஸ்திரிலோலன் ஆகிவிட்டான். அவனுக்கென வாய்க்கும் ஜூனியர் டெவெலப்பர்கள், பப் சினேகிதிகள், அரைலூஸு ஆண் நண்பர்களால் கைவிடப்பட்ட காதலிகள், ஆன்லைனில் மடக்கிய தோழிகள், ஃப்ளாட்டிலேயே ஒரு ஆண்ட்டி என்று தொட்டது, தடவியது, இன்னபிற கூடுதல் ‘து’க்கள் தவிர்த்து புணர்ந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் மொத்தம் எட்டு !

கடிகாரத்தின் சின்னமுள் எட்டிலிருந்து ஒன்பது நோக்கி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதோ வரப்போகிறாள் எண்ணிக்கையை ஒன்பதாக்க போகிறவள். பெயர் தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் ப்ரியதர்ஷிணி. காய்ந்து போய் இணையத்தில் உலவிக்கொண்டிருந்த ஒரு பின்னிரவில் அறிமுகமானாள். போக், லைக் என்று தொடங்கி, அவளுடைய மொக்கையான கவிதைகளுக்கு நைஸ் என்றும், ஜோக்குகளுக்கு லொள் என்றும் கமெண்ட் போட்டு நட்பு வளர்த்து சாட்டில் வளைத்தான். மற்ற ஃபிகர்கள் போல அதிகம் சிலுப்பிக்கொள்ளாமல் நன்றாகவே வளைந்துக் கொடுத்தாள். அடுத்தடுத்த சாட்டுகளில் நட்பு தீவிரமாகி, போன் நம்பர் பரிமாறி, குறுந்தகவல்களில் சங்கீத ஸ்வரங்கள் பாடி,  இன்று வீட்டுக்கு வர சம்மதித்திருக்கிறாள். கண்ணாடி முன் நின்று தன்னுடைய சொற்ப மயிரை சீராக வாரிக்கொண்டான். முகத்திற்கு ஆக்ஸி க்ளோ கந்தாயங்களை பூசிக்கொண்டான். தொப்பையை மறைக்கும்பொருட்டு தொள தொள டீ-ஷர்ட் ஒன்றை அணிந்துக்கொண்டான். அதன்மீது ஜார்ஜோ அர்மானி தூறல்கள். கீழே திட்டமிடாமல் அணிந்தது போல திட்டமிட்டு தொடை தெரிய ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டான். அழைப்பு மணி ஒலித்தது...!

ப்ரியதர்ஷிணி. இறுக்கமான பர்பிள் நிற டீ-ஷர்ட், கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள். ஹாய் என்று சிரித்துக்கொண்டே குலுக்கலுக்காக கை நீட்டினாள். நாகரீகம் தெரிந்தவள். குலுக்கிவிட்டு சோபாவில் அமர்த்தினான். பரஸ்பர நலம் விசாரிப்புகள், சம்பிரதாய உரையாடல்கள். ஆரஞ்சு ஜூஸு குடிக்கக் கொடுத்தான். உண்மையில் அது சிறிய அளவில் ரம் கலக்கப்பட்ட ப்ரீசர். ஃபிகர்களுக்காக அவனே பிரத்யேகமாக கண்டுபிடித்த காக்டெயில். ஒன்றுமில்லை, சில சமயங்களில் வீடு வரைக்கும் வந்துவிட்டு சதாய்ப்பவர்கள், மித போதையில் சாய்ந்துவிடுவார்கள். ஆரஞ்சு ஜூஸை குடித்துக் கொண்டிருந்தவளை நோட்டமிட்டான். ஃப்ரீ ஹேர் விட்டிருந்தாள். தோள்பட்டைக்கு கீழே மூன்று அங்குலம் வரை தலைமயிர் படர்ந்திருந்தது. அவனை விட உயரம் அதிகம். அதற்கேற்ற உடல்வாகு. செம கட்டை என்று தாராளமாக விளிக்கலாம். கோதுமையும் மைதாவும் சேர்த்து பிசைந்த நிறம். சற்றே மிரட்சியுடன் காணப்பட்ட கருப்பு திராட்சைகள். எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமான மூக்கு, அவள் குடித்துக்கொண்டிருக்கும் ஜூஸு நிற உதடுகள், அப்படியே கழுத்தில் சரிந்து வந்தால் டீ-ஷர்ட்டுக்குள் திட்டமிட்டு செய்தது போல எடுப்பான இரண்டு மலை மேடுகள். டீ-ஷர்ட்டில் ஆங்கில வாசகம் ஏதோ பொறிக்கப்பட்டு கீழே சார்லஸ் மேன்சன் என்று தெரிந்தது. அவள் மார்புகளின் நிலை காரணமாக வார்த்தைகள் மடங்கி மடங்கித் தெரிந்தன. ஏதாவது பொன் மொழியாக இருக்கக்கூடும். பெண் மொழி படிக்கிற நேரத்தில் பொன் மொழி எதற்கு...? ஜூஸ் காலியான கண்ணாடிக் குவளையை திருப்பிக் கொடுத்தாள்.

குவளையை வைக்கப் போனவனை பின்னாலிருந்து இடுப்பை இழுத்துப் பற்றியது ஒரு உருவம். பிரியதர்ஷிணியுடையது. அவளுடைய உதடுகள் காண்டீபனின் பின்னங்கழுத்தை உரச, கண்ணாடிக் குவளை கீழே விழுந்து நொறுங்கியது. அவள் அவனை இழுத்துக் கொண்டுபோய் சோபாவில் மல்லாக்கச் சரித்தாள். தமிழ் காம சம்பிரதாயங்களின் படி, அவன் செய்ய வேண்டியதை எல்லாம் அவள் செய்துக் கொண்டிருந்தது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆயினும் அவன் அவளுடைய ஆளுமையின் அழகில் வீழ்ந்துவிட்டான்...!

அவள் அவனுடனான யுத்தத்தை உச்சியில் முத்தம் கொடுத்து தொடங்கி வைத்தாள். நெற்றி. கண்கள். கன்னங்களை வலிக்காமல் கடித்தாள். காது துவாரங்களில் அவளுடைய மூச்சுக்காற்று வீசி உஷ்ணமூட்டியது. காது மடல்களை மிருதுவாக கவ்விச் சுவைத்தான். பவித்ரா நினைவுக்கு வந்தாள். ப்ளஸ் டூ படிக்கும் பவித்ராவுக்கு தன்னுடைய காது மடல்களை காண்டீபனுக்கு சுவைக்கக் கொடுப்பது பிடித்திருந்தது. அவள் என்னவோ உடலுறவு என்பதே பெண்ணுடைய காது மடல்களை ஆண் சுவைப்பது என்று நினைத்துவிட்டாள் போல. ப்ரியதர்ஷிணி அவனுடைய உதடுகளை நெருங்கியபோது தான் கவனித்தான். அவளுடைய உதடுகளுக்கு மேலே வேக்ஸிங் செய்த தடயங்கள் தெரிந்தன. காண்டீபனுக்கு அது பிடிக்காது. ஒருமுறை ஷில்பா என்கிற சிநேகிதியை பப் வெளிச்சத்தில் பழக்கமாகி தள்ளிக்கொண்டு வந்தான். உறவுக்கு தயாரானபோது தான் அவளிடம் வேக்ஸிங் தடயங்களை கண்டான். அந்த இரவு அவனுக்கு அவ்வளவு விருப்பமானதாக இல்லை. உதட்டில் முத்தம் கூட பதிக்காமல் கடனே என்று பசியை மட்டும் தீர்த்துக்கொண்டான். ப்ரியா காண்டீபனின் உதடுகளை பப்பிள் கம் மெல்லுவது போல நிறுத்தி நிதானமாக சுவைத்தாள். விருப்பமில்லை எனினும் அவளுடைய பிடியிலிருந்து மீண்டு தடுக்க முடியவில்லை.

ப்ரியாவின் கவனம் அவனுடைய கழுத்துப்பகுதிக்கு விரைந்தது. கழுத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அவள் உதடுகளால் ஒற்றியெடுத்தாள். அதேபோல அவள் கழுத்தையும் கொண்டுவந்து அவன் உதடுகளுக்கு உண்ணக் கொடுத்தாள். அவள் கழுத்தில் சற்றே பெரிய மச்சம் ஒன்று காணப்பட்டது. அவனுடைய ஜூனியர் நான்சிக்கும் இதேபோல மச்சமிருந்தது. ஆனால் உண்மையில் நான்சி கிடைத்தது காண்டீபனின் மச்சம் என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்ட விஷயக்காரி. காண்டீபன் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தியது அவள் ஒருத்தியை மட்டும்தான். சட்டை பொத்தான்களை கழட்டி மேலாடைகளை நீக்கினாள். அவனுடைய மார்பு ரோமங்களை வருடிக் கொடுத்தாள். முகம் புதைத்தாள். முத்தமிட்டாள். மைதானத்தைக் கண்ட வீரனைப் போல அவனுடைய பரந்து விரிந்திருந்த மார்பில் புகுந்து விளையாடினாள். திடுமென ப்ரியாவின் கைப்பையிலிருந்து எக்ஸ் மச்சி ஒய் மச்சி என்ற கஜனி படப்பாடல் மொபைல் ரிங்டோனாக ஒலித்தது. அவள் அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை. புத்திசாலி. F18ல் வசிக்கும் மல்லிகா அப்படியில்லை. உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில் அவளுடைய கைபேசியில் கணவன் அழைக்க விழுந்தடித்துக் கொண்டு ஓடி அன்றைய குதூகல மனநிலையை குலைத்துவிட்டாள். காண்டீபன் அரை நிர்வாணமாக படுத்திருக்க, ப்ரியா அவளுடைய டீ-ஷர்ட்டையும் கழட்டி வீசினாள். அது பறந்துபோய் அணைத்து வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியின் மீது படர்ந்தது.

ப்ரியாவின் ப்ரா தரிசனம் கண்ட காண்டீபன் உற்சாகமாகி அவனையே அறியாமல் அவளுடைய ஸ்தனங்களை பிசைய துவங்கினான். அவை பஞ்சுமிட்டாய் போல அத்தனை மிருதுவாய் இருந்தன. காண்டீபனின் நண்பன் அஷோக்குக்கு ஒருத்தி காதலியாக இருந்தாள். பெயர் சாய்ரா பானு. காண்டீபனிடம் சாய்ந்துவிட்டாள். பர்தாவிலேயே பார்த்தவளை அன்று பரிபூரணமாக பார்த்தான். ஒரேயொரு மனக்குறை. அவளுடைய கழுத்துக்கு கீழே விரல்களால் பற்றக்கூடிய அளவில் கூட சதைப்பற்று இல்லை. அவளோடு ஒப்பிடும்போது ப்ரியா ஒன்றும் மோசமில்லை. ப்ரியாவின் தொப்புளில் பூனைமயிர் பூத்திருந்தது. அங்கே துளிர்க்கத் துவங்கியிருந்த பூனைமயிர் எங்கே போய் முடிகிறதென தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அவனிடம் மிகுதியாய் இருந்தது. ப்ரியா மறுபடியும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினாள். அவனுடைய ஷார்ட்ஸை ஜாக்கியோடு சேர்த்து உருவி நிர்வாணமாக்கினாள். வாயிலிருந்து லிங்கம் எடுக்கும் பயிற்சியை செய்ய ஆரம்பித்தாள். நினைவெல்லாம் நித்யா. நித்யாவின் பிடியில் அது பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அவளுக்கு சின்ன வயதிலிருந்தே கோன் ஐஸ் என்றால் பிடிக்கும் போல. ரத்தம் கக்கும் அளவிற்கு அதனை படுத்தி எடுத்துவிட்டாள். ப்ரியா அப்படியில்லை, வாய்ஜாலக்காரி,

பாம்பு சட்டையை கழட்டுவது போல ப்ரியா அவளுடைய ஜீன்ஸை கழற்றி எறிந்தாள். சிகப்பு நிற பூக்கள் படம் பொறித்த அவளுடைய பிங்க் நிற பேண்டீஸ் காண்டீபனின் கண்களை உறுத்தியது. பேண்டீஸ் அதன் கொள்பொருளின் காரணமாக உப்பியிருந்தது, சோனியா என்கிற காண்டீபனின் டீம் மேட் ஒருத்தி உற்சாக மிகுதியில் பேண்டீஸை கழற்றி வீசிவிட்டு மறந்ததையும், காண்டீபன் அதனை பத்திரப்படுத்தி வைத்திருப்பதையும் நினைவு கூர்ந்தான். ப்ரியாவின் பிங்க் நிற பேண்டீஸ் அவனுக்கு பிடித்திருந்தது. கழற்றி வீசும் தருணத்திற்காக காத்திருந்தான். சோபாவில் நிர்வாணமாக படுத்துக்கிடந்த காண்டீபனை ப்ரியா அலேக்காக தூக்கிச்சென்று, அறையின் மற்றொரு மூலையிலிருந்த டைனிங் டேபிள் மீது இடுப்பு வரை பரப்பினாள். கீழே வழியச்சென்ற அவனுடைய கால்களை பலம் கொண்டு மடக்கிப் பிடித்துக்கொண்டாள். ஒரு மதிய வேளையில் காண்டீபன் பட்டினி கிடந்தபோது கயல்விழி என்பவள் சோப்பு விற்க வந்தாள். வந்தவளை அப்படி இப்படி பேசி, ஆரஞ்சு ஜூஸு குடிக்கக் கொடுத்து, மித போதையில் இதே டைனிங் டேபிள் மீது போட்டு சாப்பிட்டிருக்கிறான்.காண்டீபன் தற்சமயம் படுத்திருக்கும் நிலை அவனுக்கு வலி ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. என்ன இவள் ஆளுமையின் அழகு என்றெல்லாம் ரசித்தால் காட்டுமிராண்டியாக இருப்பாள் போல இருக்கிறதே...? வலிக்குதுடீ என்றபடி திமிறியெழ முயன்றான். ப்ரியாவின் இரும்புப்பிடி அவனை விடுவதாக இல்லை. அவன் அசைவற்று படுத்துக்கிடக்க, அவள் பேண்டீஸை கழட்ட, அதனுள்ளிருந்து ஒரு விரைத்த சிசினம் வெளிவந்தது.

SEX TO ME IS LIKE GOING TO THE TOILET. SEX DOESNT MATTER. – Charles Manson

REFERENCES: