ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 7 January 2014

போட்டிச் சிறுகதை 79

நம்பிக்கை... எதிர்பார்ப்பு... கடவுள்...


“சச்சின் அவுட் போய் படி”... இந்திய குடும்ப தாய்மார்களின் 24 வருட ஒரே தாரக மந்திரம்... இனி அந்த குரல் கேக்க வாய்ப்பு மிக அரிது. ஏன்டா இப்படி பைத்தியம் மாதிரி கிரிக்கெட் மேட்ச் பாத்து நேரத்த வீண் பண்ற அவன் விளையாண்டா அவன் கோடி கோடிய சம்பாதிச்சுட்டு போறான் உனக்கு என்ன கொண்டு வந்து தரவா போறான். நம் அம்மாவை எதிர்த்து பேச முடியாமல் போனவர்கள் தான் நம்மில் அதிகம். ஒரு மாறுதலுக்கு நாம் மனதில் நினைப்பதை அம்மாவிடம் பேசுவோம் என்று வைத்துக் கொள்வோம் இது தான் இந்த கதையின் கரு. இதே கேள்வியை அம்மாவிடம் ஏன்மா நாம சாமி கும்பிட்ட சாமி என்ன உண்டியல்ல இருந்து உனக்கு கொடுக்கவா போகுது, அம்மாவின் பதில் “இல்லடா சாமி நமக்கு நம்பிக்கை தரும் எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ள”. அதே தான்மா சச்சின்னும் எனக்கு கொடுக்கறாரு என்று நான் சொன்னனேன். ஏன் சச்சின்னும் கடவுளும் ஒன்னு என்று சொல்ற அம்மா கோவமாக. இல்லாம கொஞ்சம் கோவபடாம கேளுங்க என்று ஆரமித்தேன். அம்மா சாமி என்ன தரங்க நம்பிக்கை. அம்மா கோவம் கொஞ்சம் கூட குறையாத குரலுடன் “இம்”. அதே நம்பிக்கை தான் சச்சினும் இந்தியாக்கு விளையாடும் பொழுது எனக்கு தெரியுது.. சச்சின் அவரோட திறமை விளையாட்டுல இருக்கு அதனால இந்தியாக்கு விளையாடறாரு நான் படிச்சா நாளைக்கு ஏதோ ஒரு துறைல இந்தியாக்கு வேல செய்வேன்ல அது மாதிரி தான்... அதெலாம் இருக்கட்டும் அவரு உன்ன வந்து மேட்ச் பாக்க சொன்னாரா போய் உன் கடமைய செய்டா படி வேல செய் அது போதும் இந்தியாக்கு நீ செய்யற நல்லது. அம்மா அதே தான்மா நாம நம்மலோட வேலைய செஞ்ச போதும் கடவுளும் அவரோட வேலைய தான செய்வாரு. எல்லாருக்கும் ஒரு சின்ன நம்பிக்கை தேவ அது வேறுபாடும் சிலது முடநம்பிக்கை ட்ரைன் நாம லேட்டா போகும் பொழுது அது 5 நிமிஷம் மெதுவா புறபடனும் அதுவே நமக்கு தேவைங்க பொழுது அது என் இவளோ லேட்டா போகுது அப்படின்னு பொலம்புறது. அதே மாதிரி தான் சச்சின், கடவுள், ஏன் எல்லா மனுஷங்களும் நம்பிகைய பூர்த்தி செய்யாத பொழுது திட்டறது வெற்றி பெற்று நம்மலோட எதிர்பார்ப்பு பூர்த்தி ஆச்சுனா அவங்கள பாராட்டறது. என் அம்மா இது ஞாயம் அதுவும் நீங்க சும்மா இல்லாம சச்சின் விளம்பரம்ல நடிகறாரு அவளோ சம்பதிகறாருன்னு சொல்றிங்க. ஆமா அது தான நடக்குது. அது சரிம்மா போன மாதம் பக்கத்து வீட்டு ரமேஸ் என்னோட பத்து மார்க் அதிகம் அதுக்கு என்னை எவளோ திட்டு திட்டுன அது மாதிரி தான்மா சச்சினும் அவோரடா வாழ்க்கைக்காக சம்பதிகறாரு. அது சரிடா மச்சி பாக்கற உனக்கு அதுனால என்ன பலன் உனக்கு ஏதாச்சி கெடைக்குத. இல்லமா அப்பா எவளோ சம்பாதிகறாரு அத வேல செய்யாத இருக்கறவங்களுக்கு தருவாரா? அம்மா தர மாட்டாரு. உடல் நலம் முடியாதவங்களுக்கு தருவாரு. அதே மாதிரி தான் சச்சினும் முடியாதவங்களுக்கு தருவாரு. சரிடா இப்ப என்ன சொல்ற அவர மாதிரி நீயும் படிக்க மாட்ட உன்னோட இஷ்டப்படி விளையாட போவனு சொல்றியா. இல்லமா நீங்க என் இப்படி தப்பானது மட்டும் சொல்றிங்க. நான் பேப்பர்ல படிச்சேன் சச்சின் இது வரைக்கும் லேட்டா போனதே இல்லையாம் பயிற்சிக்கு அது மாதிரி நல்ல விஷயம் சொல்லுங்க. அதே மாதிரி அவரு பண்ணுன நல்லது நெறைய இருக்கு நீ மேட்ச் பாரு அதுல வர மாதிரி இங்கிலீஷ் பேசுன்னு சொலுங்க. அதே மாதிரி நீங்களும் எதிர்பார்ப்பு இல்லாம இருகங்கமா சச்சின் எவளோ சதம் அடிச்சேன் அப்படின்னு கவலை படமாட்டேன் என்று பேப்பர்ல ஒரு பேட்டில சொல்லி இருந்தாரு அதே மாதிரி தான்மா மார்க் முக்கியம் இல்ல அது ஒரு அளவு தான் தினமும் ஒரு புது விஷயம் கத்துக்கனும் அது தான் நாளைக்கு வாழ்கைக்கு  உதவும், அப்பறம் நீங்க ஒரு நாளாவது எல்லைல இருக்கற வீரர்கள் பற்றி கவல பட்டு இருக்கீங்களா. அப்பறம் இதே மாதிரி பல பேரு நல்லா நாட்டுக்கு முக்கியமான வேல செய்யரவாங்கல பத்தி சொலி இருக்கீங்களா சச்சின் சம்பதிகறாரு அவளோ தான் சொல்லுவிங்க எல்லைல வீரர்கள் இருகாங்க அவங்கள மாதிரி நல்லா நாட்டுக்கு உழைக்கணும் அப்படி சொல்லுங்கம்மா அது தான் சரி. டேய் போய் ஒழுங்கா வேலைய பாரு எனக்கே தலைக்கு மேல வேலை இருக்கு இதெல்லாம் மறுபடியும் பாத்துக்கலாம். இனி எப்ப அவளோ தான் நம்ம பேசுனது வேஸ்ட்னு அம்மா சொல்லிடு போகும் போதே தெரிஞ்சுது. என் அம்மாவின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, கடவுள் இந்த முன்றும் அவர்களை விட்டு பிரிக்க முடியாது. மேலும், ஒருவர் மீது உள்ள நம்பிக்கை அது தோற்கும் பொழுது தோல்வியை ஏற்க மறுக்கும் மனம். நம்பிக்கை வென்றால் அந்த வெற்றியை விட பெரிய வெற்றி “எதிர்பார்ப்பு” அதை மறுக்க நினைக்கும் மனம். இது இரண்டும் இல்லாத உலகம் இந்த கலியுகம் முடிந்தால் கூட கிடைப்பது அரிது. அப்படி இவ்விரண்டும் நடந்தால் அது கடவுள் செயலாகத்தான் இருக்க முடியும்.