ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday, 7 January 2014

சிறுகதைப் போட்டி 116

 பழசு பழசுதான்



"அப்பா ப்ளீஸ் இந்த சம்மர் ஹாலிடேஸ்-கு தாத்தா ,பாட்டி ஊருக்கு போகவேணாம்
வேற எங்கயாவது டூர் போகலாம் " என்று கெஞ்சிகொண்டிருந்தான் ராகுல்.

ஏன் ராகுல் தாத்தா,பாட்டியை பாக்க உனக்கு விருப்பம் இல்லையா?உனக்கு
விளையாட அங்க ஏரி,தோப்பு,வயல்,மலை-னு எல்லாம் இருக்கு . இங்க இருக்குற
வெயில் ,டென்ஷன் நு ஏதும் இல்லாம 20 நாள் சந்தோஷமா இருக்கலாமே என்றான்
சந்தோஷ்.அதுலாம் சரிதான் அப்பா,ஆனா பாட்டி சமைச்சு குடுக்குற சமையல்
....அதுதான் அப்பா வேணாம்-நு சொல்றேன் என்றான் ராகுல்.

ஆமாங்க எப்பயும் சம்மர் ஹாலிடேஸ்-கு அங்கதானே போறோம் இந்த முறை வேற
எங்கயாவது போவோம்.அதுவும் இல்லாம அத்தை பத்திய சாப்பாடு மாதிரி
கேழ்வரகு,கம்பு கூழ் ,மிளகு ரசம்,முடக்கத்தான் கீரை தோசை-னு ...நாக்கே
செத்து போய்டும் என்றாள் மலர்.

மலர்,பசங்களுக்கு புரியவைக்கவேண்டிய நீயும் என்ன சின்ன பிள்ளை மாதிரி
சொல்லிக்கிட்டு இருக்க..நீ ஒரு நாள் புரிஞ்சிப்ப.அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் அங்க தோப்பு ,வயல்,தொறவு-நு அத பாத்துக்க நேரம் சரியாய்
இருக்கறதால நம்மகூட வந்து இருக்க முடியலை.வருசத்துக்கு ஒரு தடவைதானே
போறோம்.நாம போகலைனா அவங்க கஷ்டபடுவாங்க .இந்த நாள் எப்போ வரும் நு
காத்துகிட்டு இருக்காங்க .நாம ஏமாத்தலாமா?அதனால நாளைக்கு போறோம்.எல்லாம்
எடுத்து வச்சுடு என்றான் சந்தோஷ்.

ஹய்யா நாளைக்கு தாத்தா பாட்டி ஊருக்கு போறோம் - என்று துள்ளி குதித்தவாறே
ஓடினால் ராகவி.ராகுலின் தங்கை..

அப்பாவும் ,பொண்ணும் ஒரே மாதிரி இருங்க என்று முனுமுனுத்தவாறே எல்லாம்
எடுத்துவைக்க தொடங்கினாள் மலர்.

அடுத்தநாள் ,கிராமத்து வீட்டை அடைந்தனர்.மனம் முழுக்க அன்போடும்,முகம்
முழுக்க சந்தோஷாதோடும் சந்தோஷத்தின் பெற்றோர் விசாலாட்சியும் ,கண்ணனும்
வரவேற்றனர்.

டே! கண்ணுங்களா பாட்டிய இப்போதான் நியாபகம் வந்ததா?வாப்பா ராஜா நல்லா
இருக்கியா?ராஜாதி நல்லா இருக்கியாமா என்று அன்போடு விசாரித்தாள்
விசாலாட்சி.நல்லா இருக்கோம் அத்தை.நீங்க எப்படி இருக்கீங்க ?மாமா எப்படி
இருக்கீங்க ?என்று விசாரித்தவாறே உள்ளே நுழைந்தனர் .


குளிச்சுட்டு சாபிடுங்கப்பா எல்லாம் தயாரா இருக்கு .சாப்பிட்டு செத்த
நேரம் ஓய்வு எடுங்க என்றனர் விசாலாட்சியும் ,கண்ணனும்.
சிறிது நேரத்திற்கு பின் ,பாட்டி ரொம்ப பசிக்குது என்ன இருக்கு
சாப்பிட?என்றாள் ராகவி.செல்லத்துக்கு என்ன வேணும் நு சொல்லு பாட்டி
செஞ்சு தரேன் என்றாள் விசாலாட்சி.நீங்க என்ன செஞ்சு இருக்கீங்களோ அது
போதும் பாட்டி என்றாள் ராகவி.கேழ்வரகு தோசை,கோழி கொழம்பு செஞ்சிருக்கேன்
வா சாபிடலாம் என்று அமரவைத்தாள் விசாலாட்சி.
ம் ...உன் சமையலே சமையல் தான் அம்மா ...என்று புகழ்ந்தவரே சாபிட்டான்
சந்தோஷ்..ம் பாட்டி சூப்பர் என்று பாராட்டினாள் ராகவி.
பாவம் ராகுலுக்கும்,மலருக்கும் சாப்பிட்டு முடிப்பதற்குள் போதும் என்றாகி விட்டது.
சாப்பிட்டு எழுந்து நிற்க முடியாமல் மெதுவாக காலை பிடித்தவாறே எழுந்தாள்
மலர்.ஏன்மா !....உடம்புக்கும் எதுவும் முடியலையா? கால் வலியா?
என்னமா சொல்லு.என்று பதறினாள் விசாலாட்சி.இல்ல அத்தை அதுலாம் ஒன்னும்
இல்லை, வீட்ல டேபிள்,சேர், சோபா-னு உக்காந்து கீழ உக்காந்து எந்திரிக்க
முடியலை அவ்ளோதான் என்றாள் மலர்.
அப்போ நீ சேர்-லையே உக்காந்து இருக்கலாம் இல்ல.இதுல என்னமா இருக்கு?எங்கள
பாரு 60 வயசாகுது எங்களுக்கு. இப்பவும் நாங்க எவ்வளவு திடமா உடம்புலயும்
மனசுலயும் தெம்பா இருக்கோம்.நீங்க சின்ன பிள்ளைங்க இப்பவே முடியலைன்னு
சொல்றீங்க.
உண்மை தான் அத்தை நகரத்துல இருக்குற சவுகரியம் இங்க வராது இல்ல அத்தை
என்றாள் மலர்.அது சரிதான் கண்ணு,இருந்தாலும் நாம உடம்பு முக்கியம் அதான்
சொன்னேன்,சரி சரி ராத்திரி முடக்கத்தான் கீரை தோசை செஞ்சு தரேன்
முட்டிக்கு ரொம்ப நல்லது என்றாள் விசாலாட்சி..ஐயோ கீரை தோசையா?என்று
மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் மலர்.

விசாலம் நீவேற ...பிள்ளைங்கள கீரை தோசை,கேழ்வரகு,கம்பு நு
பயமுறுத்தாத.அவங்க அதுலாம் அங்க சாப்பிட்டு இருக்கமாட்டாங்க.கஷ்டபடுத்தாத
என்னபா சந்தோஷ் பக்கதுல இருக்குற டாக்டர் கிட்ட கூப்பிட்டு போயிட்டு வா
பா என்றார் கண்ணன்.
சும்மா இருங்க..புள்ளைங்க அங்க இதுலாம் சாப்பிட்டு இருகமாட்டாங்கனுதான்
இங்க வரும்போது எல்லாம் செஞ்சுதறேன்.இதமட்டும்மா சாப்பிட செய்றேன்.அவங்க
விருன்மி சாப்பிடற கரி கொழம்பு,மீன்,முட்டை நு எல்லாம் வேற விதமா வேற
ருசியோடதானே செய்றேன். .பாருங்க ஊருக்கு கிளம்பறதுக்குள்ள நா மலரோட
கால்வளியை சரி பண்ணி காட்டுறேன் என்றாள் விசாலாட்சி.
இப்படி தினமும் கண் பார்வைக்கு சிறந்த கீரை,வாய்புண் ,வயிற்று புண்ணிற்கு
சிறந்த மனத்தக்காளி கீரை ,இரும்பு சத்துள்ள முருங்கை கீரை,வெந்தயக்கீரை
,மிளகு ரசம்,மிளகு கொழம்பு,மிளகு டீ, உடல் ஆரோகியதிர்ற்கு கம்பு
,கேழ்வரகு உணவுகள்,பயதன்கஞ்சி, குளிப்பதற்கு மஞ்சள்,கடலைமாவு பயத்தம்மாவு
கலந்த பொடி,தலைக்கு சீகக்காய்,வெந்தயம்,செம்பருத்தி எல்லாவற்றையும் முதல்
நாள் இரவே கஞ்சியில் ஊறவைத்து மறுநாள் அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்க
சீகக்காய் இப்படி எல்லாம் விசாலாட்சியின் கை பக்குவதிலேயே இருந்தன.
ராகவி,மலர்,ராகுல் எல்லோரையும் கூப்பிட்டு தோப்பு ,வயல் ,மலை அடிவாரம்
என்று எல்லா இடமும் சுற்றிக்காட்டினான் சந்தோஷ்..

அத்தை நான் உங்களுக்கு உதவியா இருக்கேன் என்று மலர் சொன்னாலும் இங்க ஒரு
வேலையும் இல்லமா எல்லாத்துக்கும் ஆள் இருக்காங்க பாத்துப்பாங்க.சமையல்
நான் பண்ணிடுவேன் நீ பிள்ளைங்களோட சந்தோஷமா இரு என்பாள் விசாலாட்சி .
12 நாளும் சென்றது.
சரி அப்பா எனக்கு ஆபீஸ்-இல் வேலை இருக்கு நானும் மலரும்
கிளம்புறோம்.பிள்ளைங்க இங்க இருக்கட்டும் 10 நாளுக்கு பிறகு நான் வந்து
கூப்பிட்டு போறேன் என்றான் சந்தோஷ்.சரிப்பா என்று வழி அனுப்பினர்
கண்ணனும் ,விசாலாட்சியும்.ராகுல்,ராகவி தாத்தா ,பாட்டிக்கு தொந்தரவு தராம
சமத்தா இருக்கணும் சரியா?என்றாள் மலர்.நாங்க பாத்துக்குறோம் நீங்க
போய்ட்டு வாங்க .டாட்டா டாட்டா ...என்றனர் பிள்ளைகள்.எங்களுக்கு அவங்க
என்ன செஞ்சாலும் சந்தோசம் தான் மா ..நாங்க பாத்துக்குறோம் என்றனர்
கண்ணனும்,விசாலாட்சியும்.
சந்தோஷும்,மலரும் நகரத்திற்கு திரும்பினர் ..நகரத்தின் எல்லை தொட்டதும்
ஆரம்பித்தது போக்குவரத்து நெரிசல்..மாசு,தூசி என நகரத்திற்குள் நுழையவே
ஒரு மணி நேரம் ஆனது..பாரு 12 நாள் எவ்ளோ அமைதியான சூழல்ல ,நிம்மதியா
இருந்தோம் இங்க வந்ததும் டென்ஷன் தான் என்று புலம்பியவாறே காரை ஓட்டினான்
சந்தோஷ்.அதுக்கு என்ன பண்றது என்ன இருந்தாலும் சிட்டி சிட்டிதான் கிராமம்
கிராமம் தான் என்றாள் மலர்.
அடுத்த நாள் தன் சிநேகிதி லதாவிடம் பேச லதாவிற்கு போன் செய்தாள் மலர்.
ஹாய் லதா எப்படி இருக்க?நேத்துதான் ஊருல இருந்து வந்தேன் நீ எங்க
இருக்க?எப்படி இருக்க? என்றாள் மலர்.ராகுலும் லதாவின் மகன் அகிலனும் ஒரே
பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள்.ராகுல்,அகிலன் நட்பின்
மூலமாகத்தான் லதாவும் மலரும் சிநேகிதி ஆனார்கள் சில வருடங்களுக்கு
முன்பு.
அகிலனுக்கு உடம்பு சரி இல்ல மலர் ,ஹாஸ்பிடல்லுக்கும் வீட்டுக்கும் தான்
அலையுறேன் என்றாள் கண்ணீருடன் .ஏன் என்னாச்சு எந்த ஹாஸ்பிடல் நான் உடனே
வரேன் என்று கிளம்பினாள் ,அடுத்த 40 நிமிஷத்தில் லதாவின் வீட்டை
அடைந்தாள்.
வா மலர்...
என்ன நடந்துச்சு லதா ஏன் ஹாஸ்பிடல்? என்று கேட்டாள் மலர்.
டயாபடீஸ் மலர்.நம்ம பாஸ்ட் புட் கலாசாரத்தால இப்படி..மாத்திரை,மருந்து
,ஊசி-னு அகிலனை பாகவே எனக்கு கஷ்டமா இருக்கு.என்று
அழுதாள் லதா..கம்பு,கேழ்வரகு,கோதுமை சத்தான உணவு-னு இப்படி அடிக்கடி
சாப்பாட்டுல சேத்துக்காம பிசா,பர்கர்,நூடுல்ஸ்,பாஸ்தா-னு நாமளும் அவங்க
போக்குக்கே விட்டு அவங்க ஹெல்த் மேல ரொம்ப அக்கறை எடுத்துக்காம
சாப்பிட்டா போதும்-னு விட்டுடுறோம் இப்போ கஷ்டம் நாம
கொழந்தைன்களுக்குதான்.அவங்கள பாத்து பாத்து நாமும் கஷ்டபடுறோம் என்று
சொல்ல சொல்ல மலரின் நினைவில் அத்தை விசாலாட்சியும் அவரின் சமையல்
பக்குவமும் நினைவுக்கு வந்தது.என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்
என்று நினைத்துக்கொண்டாள்.
அன்று இரவே சந்தோஷிடம் ,ஏங்க பிள்ளைங்கள கூப்பிட்டு வர போகும் போது
நானும் வரேங்க.அத்தகிட்ட கேழ்வரகு,கம்பு,கீரை வெரைட்டி சாதம்,தொக்கு
எல்லாம் எப்படி செய்யணும்-னு கேட்டு தெரிஞ்சிகிட்டு வரணும் இனி தினம் நாம
வீட்லயும் அத்தை செய்றமாதிரி உணவே மருந்து வெரைட்டி ஒன்னு கண்டிப்பா
இருக்கும் என்றாள்.பரவாஇல்லையே இப்போதாவது புரிஞ்சுகிட்டியா?அப்படியே
செய்யலாம் என்றான் சந்தோஷ் சந்தோஷமாக.