ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 7 January 2014

சிறுகதைப் போட்டி 111

சீலைக் காரி

ஒரு பெரிய காட்டுல சீலைக் காரி என்று ஒரு மரம் இருந்திச்சு. அவள் காலம் காலமா எல்லா மரமும் மாதிரியே வேரிலே நீர் எடுத்து ,இலைகளுக்கு அனுப்பி பரந்து விரிந்து கிடந்ததால் போகிற வருகிறவர்களுக்கு நிழலும், மண்ணுக்கு முதிர் இலைகள் உதிர்த்து உரமும்,  தேன் நிறைந்த பூக்கள் பூத்து தேனை உண்ணும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும், தேனை சேகரிக்கும் தேனீக்களுக்கும் தேனையும் , விறகு பொறுக்குகிறவர்களுக்கு சுள்ளிகளையும் கொடுத்திச்சு.
.     அவள் பெருமதிப்புக் காரி யுக யுகமாய் மாறாமல் வாழ்ந்திருக்கும் அவள் தினமும் இளமையாகவே இருந்ததால் பெருமதிப்புக்காரியாயும் இருந்தாள்  அதனாலேயே அவள் அவ்வளவு சீக்கிரம் விலை போகிறவளாக இருப்பதில்லை. அவளின் பெருமதிப்பு ஒரு நாளில் விளைந்ததில்லை. அவளின் மதிப்பை உயர்த்திச் சொல்லுகின்ற தொடர் வளையங்கள்   அவளின் தழும்புகள் என்றால் யார் நம்பக் கூடும் ஆனால் அதுதான் நிஜம். சனங்கள் அவள் தழும்புகளைப் பார்க்கின்றோம் என்பதையே மறந்து விட்டு, அவள் மதிப்புகளைப் பார்க்க வளையங்களை எப்பொழுதும் தடவிக்கிட்டு இருந்தாங்க . சாதாரண மரமாய் அவளிருந்த நேரமும் ஒரு காலத்தில இருந்திச்சு
ஆரம்பத்தில் அவளுக்கான எதையும் அவள் வேண்டவே இல்லை. அதற்கான மொழியும் அவளது கைவசமில்லை. அவளது முன்னோரும் அம்மாவும் பாட்டியும் அதைத் தந்தவர்களில்லை. எனவே அவள் எப்பவும்
அடுத்தவர் மொழிகளைப் பேசிக் கொண்டிருந்த ஏனைய மரங்களைப் புறம் தள்ளி  தன் தேவைக் கான தேர்வில் பேசத் தொடங்கிய போது காடு அவளிடமிருந்து மெல்ல விலகியது. தனியாகவா தனித்துவமாகவா எது தான் எனும் கேள்வியோடவே தென்றலோடு தலையசைத்தாள் சீலைக்காரி

அது முதன் முதலாய் காய் தாங்கிய போதுதான் தன்னுள்  மந்திரங்கள் உருவாவதை  உணர்ந்தது..சூல் கொண்ட காலத்தில் தனக்குள்ளே ஆணும் பெண்ணுமாய் அர்த்த நாரீசுவரராய், ஏன் திருநங்கையாய் இருந்திருந்ததைக் கூட உணரத் தொடங்கியது. அதன் தண்டுகளுக்குள் மந்திர வளையங்கள்  உருவாகத் தொடங்கிய பிறகு எந்தவொரு விறகு வெட்டியாலும் தன்னை நெருங்க முடியாமல் போயிருந்ததையும் அது அறிந்து மகிழ்ந்தது
வெட்டுப் பட வாய்ப்பளிக்காத அந்த மரத்தை பத்திரப் படுத்தியிருப்பதாக வனத்தின் சொந்தக்காரனாக உலா வந்தவன் சொல்லிக் கொண்டு திரிந்தான்
அந்த மரத்தில் இரவில் இலைகள் ஒளிர்வதாக புரளி கிளம்பியது. இலைகளின் பகையினங்களான பூச்சிகளும் புழுக்களும் அதன் அருகில் சென்றதும் சுருண்டு விழுந்துவிடுவதாக சொல்லப் பட்டது.பலர் தூர தேசத்திலிருந்தும் வந்து பார்த்த போது  அது எல்லா மரங்களையும் போலவே காற்றில் இலைகளூம் கிளைகளூம்  அசைந்தபடி இருக்க புதிதாய் ஒன்றுமில்லை என்று சொன்னவர்களும் திரும்ப திரும்ப வந்தார்கள். அதனிடம் அதன் ஒளிரும் தருணங்களை களவாடி விட . அது காலை சூரிய உதயத்தில் கிழக்கிருந்து மேற்காக பார்த்த சிலரும்  சூரிய அஸ்தமனத்தில் மேற்கிலிருந்து கிழக்காக பார்த்த சிலரும் மரத்திலிருந்து ஒளிர்க்கதிர்கள் புறப்பட்டு வண்ணம் மாறி மாறி வானெங்கும் வியாபிப்பதாகவும் புகழ் பாடினர்.
மரம் அறிந்திருந்தது புகழ் பாட மறுத்தவர்களும் புகழ் பாடியவர்கள் இருவருமே தன் ஒளிரும் தருணங்களைக் கண்டதே இல்லை என்பதை
அது சூல் கொள்ளக் காரணமாயிருந்த இணை மரத்தில் மகரந்தத் துகள்கள் திருடி வந்த வண்ணத்துப் பூச்சி அம்மரத்தில் களவுக் காதலனாய்  மரத்தோடவே வாழ்ந்தது. வண்ணத்துப் பூச்சியிடமிருந்து வண்ணங்கள் அம்மரத்தின் இலைகளில் உருகி ஓடியது. இதுவரை காணாத மரமாய் வண்ண வண்ன இலைகளுடன் ஒளிர்ந்திருந்தது சீலைக் காரி மரம்
காட்டின் அந்த விநோத மரத்திற்கு சீக்கு புடித்து விட்டது மருந்தடிக்கலாம் என்று சொன்னவர்களும் அது வாடாமலும் இலைகள் உதிர்க்காமலும் இன்னும் இன்னுமுமாய் பூத்து குலுங்குவதைப் பார்த்ததும் அவர்களது கபட வார்த்தைகள் மக்கி உதிர்வதைப் பார்த்து மிரண்டனர்.
மரத்தில் மந்திர சக்தி இருப்பதாய் இன்னுமொரு புரளி இவர்களாலும் கிளப்பப் பட்டது மிரண்டவர்கள் , வியந்தவர்களும் சூழவே மரம் தன்னை தன் நிழலை வியாபித்துக் கொண்டே வந்தது. அதன் மதிப்பூட்டும் வளையங்கள் வளர்ந்து கொண்டே போயின.

ஒரு நாள்  சூல் கொண்ட மரம் தன்னிடத்தில் காயாய் காத்து அது கனியக் காத்திருந்தது. தன் காலடியில் விழுந்த விதை முளைப்பதற்கு தன்  கிளைகளை சிதைத்துக் கோண்டு அதன் மேல் மழை நீரும் வெயிலும்  விழுவதற்கு வழிவகுத்தது
 கனிந்து  விதை  வெளித் தள்ளும் நாளில் விதைகளுக்கு இறக்கைகளும் சேர்த்துத் தந்திருந்தது அந்த மரம். தனக்கில்லாது போன மொழி போன்றில்லாது, அவைகள் தனக்கான மொழியில் பேசுவதை புரிந்து கொள்ள முயற்சிக்க எப்பவும் அவைகளூடாகவே இருந்தது
கனி காய்ந்து வெடித்து வெறும் கூடாகி நின்ற  போது பலர் நகைத்தனர் விதைகளைத் தொலைத்தவளென்றும், பத்திரப் படுத்த தெரியாதவளென்றும்
இல்லை விதைகள் காற்றின் திசையில்  அசைந்து அசைந்து  ஈரம் உள்ள காற்றில் ஒட்டிக் கொண்டு காற்றுக்கு ஈரம் தந்த நிலத்தில் தனை விதைத்துக் கொண்டன. முளைகள் கீழே  வேர் பரப்பி மேலெழுந்தன. மண் மீறி அவைகள் முதல் இரண்டிலைகள் வைத்த போது ஊர் கூடி வேடிக்கை பார்த்தது.
முளைகள் வலுவாகவும்  பச்சையாகவும் இருந்தன. பச்சைக்கான வலு தானே தள்ளி  முளைத்ததால் என்பது இரண்டு முளையில் ஒன்றுக்கு புரிந்தும் இன்னொன்று தானே கஷ்டப் பட வேண்டும் என்று தள்ளி விட்ட அம்மா மரத்தை நெருங்க சந்தர்ப்பம் தேடியபடியும் வாழ்ந்தது. விழுந்த விதைகள் முளைத்த பின் தன்னிடம் வருவது சாத்தியமில்லை என சீலைக்காரி மரம் புரிய வைத்த போது இரண்டு முளையில் ஒன்று துவண்டது
 சூரிய ஒளி தின்று தின்று  தீராது இயங்கிய இன்னொரு நாற்று  பலமாக வளர்ந்தது. அது எழுந்த  ஒவ்வொரு  அடியிலும் துளிர் விட்ட ஒவ்வொரு இலையிலும் சீலைக்காரி மரத்தில் புது வளையங்கள் உருவாகிக் கொண்டே இருந்தன
அதன் வலு கூட கூட அது மதிப்பும் அதன் இலை அசைப்பில் புதிய மந்திரச் சொற்கள் பொறித்த முதிர் இலைகளும் உருகி வழிந்தன. இலைகளைத் திண்ண  ஆடு , இலைகளைச் செரித்த மண் இலைகளைத் தைத்த வனாந்திரச்  சிறுவன் அவன் தைத்த இலைகளில் சாப்பிட்ட நகர மக்கள்  எல்லாரும் அதன் மந்திரச் சொற்களால் ஒளி பெற்றனர்.
வனாந்திரத்திலொளிர் தேவதையாய் மாறிக் கொண்டிருந்த தருணத்தில் முளைத்திருந்த அந்த இன்னுமொரு  முளை  அம்மா மரம் தந்த இறக்கைக்கு  வருந்தி தனித்து விடப் பட்டதாகப் புலம்பியது. புலம்பிய  அதன் கண்ணீர் துளிகள் சீலைக் காரி மரத்தைச் சுற்றி விசத் துளிகளாய் வீழ அதன் வளர்ச்சி சுருங்கியது இலைகள் சுருங்கிக் கொண்டன சூரியன் சுட்டெரித்தது அதன் வேர்களை. நாற்றின் ஒவ்வொரு அசம்பாவத்திலும் அம்மா மரத்தின் அடியிலிருந்து பொந்து விழுகத் துவங்கியது. கூடற்ற உடலாய் தான் பலவீனமாய் மாறி வருவதன் காரணம் தேடியது சீலைக்காரி மரம்

இரு பிள்ளைகளூம் தன்னைப் போல்  இலைகள் சுமக்கும் காலம் வரும் அதற்காகவே இறக்கை வழங்கியதாகவும் சொல்லிய அம்மரம் முதல் நாற்றின் பலமான செயல்பாடுகள் தன்னை மந்திர மரமாய் மாற்றுவதையும் பொய்யான புலம்பல்கள் உள்ளீடற்ற கூடுகளாக மாற்றியதையும் சொன்ன போது அதுவரை புலம்பிய நாற்று தன்னால் இதுவரை கொண்டிருந்த ஒளிவட்டம் இழந்து விடக் கூடாது எனத் தீர்மானித்தபோது தண்டுகள் மேற்கொண்டு பொந்துகளாவது  நின்று போயிருந்தது,
இப்பொழுது இரு முளைகளின் பலத்தாலும் அம்மரத்தின் ஒளிர்வுகள் பெருக அதன் கூடாகியிருந்த உடல் தெய்வம் முளைத்த வீடாகத் தெரிய முக்கோணக் கற்கள் ஊனப் பட்டது. சந்தனம் குங்குமம் பூக்கள் படையலென கொண்டாட்டமாய் மாறியிருந்தது சீலைக் காரி மரத்தைச் சுற்றி
விறகு வெட்டிகள் அதனிடமிருந்தும் அதை தாண்டும் போதும் அவள் மரமென்பதை   மறந்து போயிருந்தனர்,முளைகள் நாற்றாகி கன்
றாகி மரங்களாகிப் போன நாளொன்றில் ஊர் பேசியது அந்த வனமே மந்திர வனமென்றுஒளிரும் மரங்களும்,,நெருங்கும் பூச்சிகளை விழுங்கும் மரங்களும்வேண்டுதல்களை கேட்டு விடும் மரன்ஃப்களும்,கபடுகளை காட்டிக் கொடுத்து விடும் வனமாயும் அவ்வனத்தை  கடப்பவர்களுக்கு சக்திகள் பெருகுவதாயும் உலா வந்த மொழிகளில் ஊரு கூடி பௌர்ணாமியில் வன உலா வந்தது.
சடங்குகளின் பின்னால் போனவர்களுக்கு இறக்கைகலீன் வலிமை புரியவே இல்லை. விதைகளுக்கு இறக்கைகள் வழங்கத் தயாராக இல்லாத காடுகள் விற்கௌ வெட்டிகளால் சூழப் பட்டும் பலமான கன்றாக எழும்பாத நாற்றுகளால்  தாய் மரங்கள் கூடு விழுந்த மரங்களாகவும் மாறிய பல அம்ம மரங்கள் ஒவ்வொரு மழைக்காலங்களில் வீசும் காற்றுக்கு சாய்ந்து கொண்டே இருந்தன 

சீலைக் காரியின் பாடுகள் மரைந்து  வனமெல்லாம் சடங்காகிப் போயிருந்த போதும் புதிய முளைகலுக்கு இறக்கைகள் கொடுப்பதை  அந்த வனமும் நிருத்தவில்லை. மேலும் தன் கீழ் வளரும் நாற்றுகளுக்கு தன் வெளிச்சத்தின் அடியில் வாழப் பழக்காது நகட்டி வைக்கக் க/ற்றிருந்த சீலைக்காரியின்  மரபணூக்கள் வனத்தின் எல்லா இலைகளிலும் வண்னத்து பூச்சியின் வர்ணங்களாய் மின்னத் தொடங்கிற்று.மந்திர வனம் காற்றில்  உச்சரித்துக் கொண்டே இருந்தது எல்லாருக்குமான மந்திர மொழிகளைசீலைக் காரி
திலகபாமா                                                                                                                                                                                                                                                  

சீலைக் காரியின் பாடுகள் மரைந்து  வனமெல்லாம் சடங்காகிப் போயிருந்த போதும் புதிய முளைகலுக்கு இறக்கைகள் கொடுப்பதை  அந்த வனமும் நிருத்தவில்லை. மேலும் தன் கீழ் வளரும் நாற்றுகளுக்கு தன் வெளிச்சத்தின் அடியில் வாழப் பழக்காது நகட்டி வைக்கக் க/ற்றிருந்த சீலைக்காரியின்  மரபணூக்கள் வனத்தின் எல்லா இலைகளிலும் வண்னத்து பூச்சியின் வர்ணங்களாய் மின்னத் தொடங்கிற்று.மந்திர வனம் காற்றில்  உச்சரித்துக் கொண்டே இருந்தது எல்லாருக்குமான மந்திர மொழிகளை