ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday, 6 January 2014

போட்டிச் சிறுகதை 65

கூனூர்க் கிழவர் 

பாகவதர் கிராப்பும், வெற்றிலைச்  சாறு வழியும் வாயும், கை இடுக்கில் வைத்து இருக்கும் சவரப் பெட்டியும் தான் கூனூர்க் கிழவரின் அடையாளம்.தலை முடி சற்று கைப்பிடிக்கும் அளவுக்கு வளர்ந்து வருகையில்  எப்படித்  தெரியும் என்று தெரியாது, சரியாய் ஞாயிறு காலை வீட்டில் ஆஜராகி விடுவார் 

அவரைப் பார்த்தவுடன் திக்கென்று இருக்கும். சற்றே வாகெடுத்து  சீவும் அளவு வளர்ந்த முடியை, ஓட்ட வெட்டி விடுவார். ஓட்ட வெட்டுவது என்பது  "ரோட்டில் போகும் அனைவரும் திரும்பி பார்க்கும் வண்ணம் இருப்பதும், எந்தக் கோயில் மொட்டை என்று பள்ளியில்  கூட்டாளிகளே கேட்கும் அளவுக்கு இருப்பதுதான் அந்த "ஓட்ட வெட்டுவது" என்பதன்  அளவீடு .

அப்பா இல்லாத சமயங்களில் அவரிடம் முடி வெட்டுவதற்கு பெரும் ரகளையே நடக்கும்.  "தனக்கழகு மொட்டையும் சபைக்கழகு கொண்டையும்" என்று  கூறியே  வலுக்கட்டாயமாக பிடித்து உட்கார வைத்து விடுவார்கள் ஆச்சியும் அம்மாவும் . அப்போதெல்லாம் வெற்றிலைச்   சாறொழுக  சிரித்தவாறே,சும்மா வாங்க "அய்யா மகனே  "   சினிமா ஹீரோ மாதிரி வெட்டி வுடுறேன் என்று கூறி வழக்கம் போல மொட்டை அடித்து விடுவார்.

வளர்ந்து பெரியவன்  ஆனவுடன் தலை நிறைய முடியுடன் இந்த கூனூர்க் கிழவர்  முன்னிலையில் சுற்ற வேண்டுமென  நானும் எனது தம்பியும் பலநேரம்  சங்கல்பம் எடுத்ததுண்டு.

அப்பா வெளி வேலை ஏதுமின்றி இருந்தால் முதலில் அவருக்கு முகச்சவரம் செய்வதில் தொடங்கும் கூனூர்க் கிழவரின் கைவண்ணம்.வீட்டில் இதற்கென்றே காட்டு  மரத்தில் செய்த  ஒரு நாற்காலி உண்டு. முண்டா பனியன் , தேங்காய்ப் பூ துண்டு சகிதமாய்  அந்த நாற்காலியில் உட்கார்ந்து விடுவார்.அப்போது மட்டும் வாயில் வெற்றிலை ஏதும் போடாமல் அமைதியாக சவரம் செய்து விடுவார்.

சவரக் கத்தியை, வாருடன் பொருத்தப்பட்ட தேய்ப்புக்கல்லில் வைத்து சர் சர்ரென்று தீட்டுவதை பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கும்.அவ்வளவு லாவகமாகத் தீட்டுவார். அப்பாவிடமிருந்து  ஒரு சின்ன முகச்சுளிப்பு கூட வராமல் முகச்சவரம் செய்து விடுவார்.

கடைசியில் படிகாரக் கல்லை  சவரம் செய்த முகத்தில் வைத்து தேய்க்கையில்  அப்பா முகத்தில் தெரியும்  அந்த உணர்வுகள் கூறும் அவர்  வேலையைப் பற்றி.  

முகச்சவரம் முடிந்து அப்பா கிளம்பியவுடன், அதே நாற்காலியின் கைப்பிடிகளுக்கு இடையில்  ஒரு பலகையைப் போட்டு,எங்களை அதில்  உட்கார வைத்து மொட்டையடிப்பதில் ஆரம்பமாவது  முடிவில் கத்தி வைத்து   பொறடி மற்றும் காதுக்கிடையில் வழிக்கையில் ஒருவித  குறுகுறுப்புடன்  முடிவடையும் எங்களது  முடி வெட்டும் படலம்.

வருடங்கள் ஒடிவிட்டன.பம்பாய்க்கு ஓடிப்போன கூனூர்க்கிழவரின்  மகன் திரும்பி வந்து நால்ரோடில் ஒரு சலூன் திறந்து விட்டான். மகன், மருமகளுடன்  ஏற்பட்ட மனக்கசப்பில் தனியே வசிக்கிறார் கூனூர்க்கிழவர். ஏதாவது சிறிய  வேலைகள்  செய்து காலத்தை ஒட்டி வருகிறார்எங்கேனும் வழியில் எதிர்ப்படுகையில் வாஞ்சையுடன் விசாரிப்பார்

தலைகொள்ளா முடியுடன் திரிய வேண்டுமென நினைத்த நான் போலீசாகி, இன்றும்  கிட்டத்தட்ட  அதே போல் ஓட்ட வெட்டிக்  கொண்டு திரிகிறேன். பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்கையில், பழைய தட்டு முட்டு  சாமான்களுக்கிடையில் உடைந்து அனாதையாய் கிடக்கிறது  அந்த நாற்காலி. கை தன்னிச்சையாய் தலையைத் தடவியது.ஏனோ கூனூர்க் கிழவரின் ஞாபகம் அதிகமாக வந்தது .