லட்டு
The
process of deriving one class from another…. உச்ச ஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்த
அவள் குரல் சட்டென்று தயங்கி நின்று, தவிர்க்க முடியாது பார்வை ஜன்னல் வழி
சென்றது. அருகில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், இலைச் சல்லடைகள் வழியே வழியும்
வெளிச்சத்தீற்றல்கள், நடுவே அழகிய அணில்
ஒன்று விரலிடுக்கில் எதையோ வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. தவறவிடக்கூடாத
காட்சிதான். பார்த்தவர்களுக்குத்தான் அந்த அழகு புரியும். பார்வையை நகர்த்த முடியவில்லை. கற்பிப்பவள்
வேடிக்கைபார்ப்பதா? “யாரது சாப்பிட்ட
மீதமெல்லாம் ஜன்னல்மேல் வைத்தது?” சற்று கோவமாகவே குரலுயர்த்தினாள். அவன்தான் Mam, இவன்தான் Mam சலசலப்புகளிடையே
அனைவரின் பார்வையும் ஜன்னல்வழி நிலைத்தது, சற்று நேரம். போதும். இதுதான்
வேண்டியிருந்தது. OK listen, என்று பாடத்தை
தொடர்ந்தவள், கரும்பலகை பக்கம் திரும்பி தன் டெக்னிக்கை நினைத்து தானே புன்னகைத்துக்
கொண்டாள், அன்று மாலை வாங்கப்போகும் பல்பின் ஒளி தன்பின்னே ஒளிர்வதறியாமல்.
அடுத்த இருபது
நிமிடங்களில் வகுப்பு முடிந்து வெளிவந்தபின், இரண்டு மாணவி குழுக்களுக்கிடையேயான
ப்ரச்சனைக்கு நாட்டாமையானதும், தற்கொலைக்கு முயன்ற மாணவியை மருத்துவமனையில்
சேர்த்த பரபரப்பில் மதிய உணவு தவறிப்போனதும் இந்த கதைக்கு அவ்வளவு முக்கியமில்லை.
மாலைவானில்
சூழ்ந்திருந்த மேகத்தில் மழையின் சாத்தியம் தெரிந்தது. மழையற்ற நாட்களிலும்
போதையையும் தெளிவையும், நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் தந்துகொண்டிருக்கும்
வானம் அவளுக்கு முதலும் கடைசியுமான
புகலிடம். ஏதாவது கவிதை பொழியுமா
என்று வானத்தைப் பார்த்துக்கொண்டே நடந்தாள். “நடு ரோட்ல என்னமா பராக்கு?” என்ற ஆட்டோகாரரின் கோபக்குரலுக்கு சட்டென்று ஒதுங்கி
தலையில் தட்டிக்கொண்டாள். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை.
தொடர்ந்து ரயில்
நிலைய காத்திருப்புக்கள், பயணங்கள் தாண்டி, டூவீலர் ஸ்டாண்டை அடைந்தபோது அங்கே விதி அல்லது சதி ஏதோ ஒன்று காத்திருந்தது.
பெட்ரோல் தீர்ந்துபோய் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. நான் வாங்கிட்டு வந்து தரேன்
மேடம் என்ற பழைய மாணவனிடம் உன்னைவிட்டா இப்ப வேற யாரு இருக்கா என்று மனதில்
நினைத்தபடி பரவால்லபா என்றாள். அதிலென்ன மேம் இருக்கு என்று புண்ணியம்
கட்டிக்கொண்டான். அவன் நகர்ந்த நிமிடம் மழை பிடித்துக்கொண்டது. தொடர்ந்து இருள்
கவிழ்ந்துகொண்டிருந்தது. என்ன கோவமோ வாங்கிவரப்பட்ட பெட்ரோலை ஊற்றியும் வண்டி
ஸ்டார்ட் ஆகவில்லை. சரி இதுக்கெல்லாம் அசந்தா எப்படி என்று, மெக்கானிக் ஷாப்பிற்கு
போன் செய்தாள். வரும்வரை காக்க வேண்டும்.
இப்படி
உட்காருங்க மேடம் என்று ஒரு சேர் கொடுத்துவிட்டு, கொஞ்சம் பேச்சும் கொடுக்க ஆரம்பித்தார்
ஷெட்காரர். என்ன மேடம் இப்படியாகிடுச்சி!
பெரிய வண்டின்னா நானே பாத்திருப்பேன் என்று சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார். கொசுக்கள்,
குளிர்கள், சாரல்கள் என எல்லாத் தொல்லைகளையும் விழுங்கியபடி, “பரவால்லீங்க
இப்படி நடக்க ஏதாவது காரணம் இருக்கும்” சொல்லி வாய்மூடவில்லை, அங்கு வந்த அறிமுகமில்லா நபர்
ஒருவர், இங்க வாம்மா என்றார். சற்றே தயக்கத்துடன் என்னங்க? என்று கேட்டுக்கொண்டே
அருகில் சென்றாள். திருப்பதி போய்ட்டு இப்பதான்மா நேரா வரேன். ப்ரசாதம்
வாங்கிக்கம்மா என்று அவளுக்கும் ஷெட்காரருக்கும் கொடுத்தார். இவ்வளவு ப்ரச்சனைக்கும் காரணம் கிடைத்துவிட்ட சந்தோஷம்
லட்டுவைவிட இனித்தது. ஆம்! ஃபேவரைட் கடவுள் பாலாஜி! அதற்குள் மெக்கானிக்
பாலாஜியும் வந்து சேர்ந்திருந்தான்.
வீடு
திரும்பியதும், என்ன லேட்டாயிடுச்சி என்ற மாமியாரின் கேள்விக்கு பதிலாய், மாலை
நடந்த அனைத்தும் விவரிக்கப்பட்டது. லட்டு ப்ரசாதம் பற்றி சொல்லும்போது ஏனோ
பெருமிதம் தாங்கவில்லை. அவர்களும் அதிசயிக்கப்போகிறார்கள் என முகத்தையே
பார்த்துக்கொண்டிருந்தாள். “அட லூசே! முன்ன பின்ன தெரியாதவங்க தரதெல்லாம் வாங்கி
சாப்டுவியா? மயக்க மருந்து கொடுத்து உன் நகையெல்லாம் தூக்கிட்டு போயிருந்தா என்ன
பண்ணிருப்ப? கொஞ்சம்கூட பொறுப்பே கிடையாது. ஹ்ம்.” வாங்கிய பல்பில் முகம் இருண்டது. நடந்திருக்கக்கூடிய
வாய்ப்பு வாயை திறக்கவிடவில்லை. அவமானத்தில் என்ன செய்வதென்று புரியவில்லை.
சட்டென்று சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்,
“ஹாஹாஹா...” .
முற்றும்.