ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 7 January 2014

சிறுகதைப் போட்டி 93

கடவுள்களின் முகவரி

                பரபரப்புடன்  இயங்கிக்கொண்டிருந்த மத்திய தொடர்வண்டி  நிலையத்திற்குள் அலமேலு மெல்ல நடந்தாள்.  குவிந்துகிடந்த மனிதர்கள் அங்கும் இங்குமாக இயந்திரதனமாய் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.  சிலரது சுறுசுறுப்பான ஓட்டம், அலமேலுவிற்கு கதிரவனை நினைவுபடுத்தி, அவள் விழிகளை ஈரப்படுத்தியது. சற்று நின்று பெரும்மூச்சிவிட்ட நொடியில், அந்த புத்தகம் அவளது கண்ணில் பட்டது.
அக்னியின் - விடியல்’. பயணத்திற்காக காத்திருப்பவர்களில் இளைஞர் ஒருவர் முழுவதுமாக அந்நூலில் மூழ்கியிருந்தார்.  அவருக்கு பக்கத்து இருக்கையில், வெறுமை உட்கார்ந்திருந்தபடியால், அதை எழுப்பி அனுப்பிவிட்டு, அலமேலு அமர்ந்து கொண்டாள். புத்தகத்தையும் அந்த  வாசகரையும் ஒருமுறை குனிந்து பார்த்துக்கொண்டாள். அவளுக்குள் இனம்காண முடியாத உணர்வு. அதற்கு காரணம், மகிழ்ச்சியா, பெருமிதமா அவைகளைப் பின்னுக்குத்தள்ளி முன்னே முன்னே வந்து முகங்காட்டும் குற்ற உணர்வா என்று புரியாமல் குழம்பினாள்.
                சட்டென, “தம்பிநீங்க படிச்சிட்டிருக்கீங்களேஅந்த புத்தகம் எப்படி இருக்கு?” என்றாள்.
                புத்தக அட்டையை திருப்பி பார்த்துக்கொண்டே, அந்த ஆசாமி, ‘யார் நீங்க?’ என்பதுபோன்ற கேள்விப்பார்வை வீசினான்.
அலமேலு அமைதியாய் உட்கார்ந்து கொள்ள, அவளது நினைவலைகள் பின்நகர்ந்து கடந்தகால கரைநோக்கி பாய்ந்தது.
***
                “என்னங்ககத எழுத உட்கார்ந்துட்டிங்களா...? கிழிஞ்சிதுபோங்க. பையன கூட்டிகிட்டுபோய் முடிவெட்டிகிட்டு வாங்க. கண்ணுலவந்து குத்துது கொடையுதுன்னு நாலுநாலா கத்திக்கிட்டு கெடக்கறான் பாருங்க.அடுப்படியில் இருந்தபடியே ஆணை பிறப்பித்தாள், அலமேலு.
                “ஏம்மாஅரைமணி நேரங்கழிச்சி போகக்கூடாது…? ஏன்னா அதுக்குள்ள, இந்த கதைய முடிச்சிடுவேன்.தயங்கியபடியே பேசினான், கதிரவன்.
                “எனக்குத்தெரியாதுங்க. எக்கேடாவது கெட்டுப்போங்க. கதைய முடிக்கிறேன்.. கதைய முடிக்கிறேன்னு ஒங்க பொண்டாட்டி புள்ளைங்க கதைய அற்ப ஆயுசுல முடிக்கப்போறீங்க.
                எரிச்சலோடு, எடுத்தேற கட்டிவிட்டு கிளம்பினான்.
                கதிரவன் -பொருளாதாரத்தில் ஒரு முதுநிலை பட்டதாரி. படித்து முடித்த அடுத்த வருடமே, தனியார் நூற்பாலை ஒன்றில் மேற்பார்வையாளராக பணி கிடைத்தது. குடும்பம் நடத்த அது, போதுமான வருமானம் தரும் என்கிறபடியால் அடுத்த ஆறு மாதங்களில், திருமணமும் முடிந்தது. அப்போது, அலமேலு, தனியார் பள்ளி ஆசிரியை. திருமணத்திற்கு பிறகும் அவள் அந்த வேலையை தொடரலாம் என்கிற சுதந்திரம், கதிரவன்மேல் ஒரு புரிந்துணர்வு ஏற்பட காரணமாயிருந்தது.
                இரண்டு மாதங்களுக்கு பிறகு, கதிரவன், தனது இன்னொரு முகத்தை அலமேலுவிற்கு அறிமுகப்படுத்தினான். பள்ளிக் காலங்களில், கதைபோன்று கிறுக்கியவற்றையும், கல்லூரி நாட்களில் எழுதி, பிரபல இதழ்களில் வெளிவந்த ஒன்றிரண்டு சிறுகதைகளையும் அவளுக்கு படித்துக்காட்டினான். அப்போதே அவள், அதில் ஆர்வம் இல்லாதவளாய்த்தான் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டாள் நூறு சதவிகிதம் புரிந்துகொண்ட கதிரவனும் அதற்குப்பிறகு, இதுபற்றியெல்லாம் அவளிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.
                ஆறு ஆண்டுகளில், ஆண் ஒன்று பெண் ஒன்றிற்கு அப்பாவாகியிருந்த கதிரவனின் தலையில் காலம் கல்லைத் தூக்கிப்போட்டது. ஆம். அவன் பணியிலிருந்த ஆலை, நிர்வாகக் குளறுபடியால் இழுத்து மூடப்பட்டது. அதுவரை வாசிப்பதையம் எழுதுவதையும் பொழுதுபோக்காக கொண்டிருந்த அவன், இனி முழுநேர எழுத்தாளனாகிவிட முடிவெடுத்தான்.
                எழுத்தே வாழ்க்கை என்றாகிப்போன பிறகு, நிறைய வாசிக்கத் தொடங்கினான். புதுமையை உட்புகுத்தி அக்னிஎனும் புனைப்பெயரில் படைப்புகள் பிரசவித்தான்.
***
புக் வேணுமா மேடம்?” நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து நிறுத்தினான், பக்கத்து இருக்கை இளைஞன்.
இல்ல..தம்பி.. நீங்க படிச்சிட்டிருக்கீங்களே.. அந்த புத்தகம் எழுதனவரோட மனைவிதான் நானு.
ஐயோ..அப்படீங்களா…? வணக்கம்மாஅலமேலுவின் கால்களை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான்.
ஐயையோஎன்ன தம்பி நீங்க? நானே அக்கினியில்லையேஅவரோட மனைவிதானேஎங்காலுலலாம் விழுந்துகிட்டு…”
இல்லமா. என்ன பொறுத்த வரைக்கும் நான் அவுரு கால்ல விழுந்த மாதிரிதான்
பளாரென கன்னத்தில் அரைந்ததுபோலிருந்தது, அலமேலுவிற்கு.
அலமேலு.. நீ என்ன பேசினாலும், திட்டினாலும், சாபம்விட்டாலும், என்னோட வெற்றிக்கு பின்னால நீ இருக்கறன்னு நான் மட்டும் பேசலஇந்த சமூகமே பேசுது. அவங்களுக்கெல்லாம்.. அக்னிங்கறது நான் மட்டுமில்ல. நீயும்தான். கதிரவன் எப்போதோ சொல்லியிருந்த வார்த்தைகள்தான் அதற்கு காரணம்.
சென்னையிலிருந்து மும்பை செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ், ஒன்பதாவது பிளாட்பாரத்திலிருந்து….’ அறிவிப்பை தொடர்ந்து,
தம்பி. நான் கௌம்ரேம்ப்பா.என்று எழுந்தாள்.
மும்பைக்காமா?”
ஆமாம்ப்பா. ஐயாவோட மகன் மகள்லாம்மும்பாய்ல இருக்காங்க
                விடைபெற்றுக்கொண்டு அவள் முன்நோக்கி நடக்கத்தொடங்கியதும், நினைவுகள் பின்னோக்கி நடந்தது.
***
என்னங்கஏதோ பட்டறன்னுபேசப்போனீங்க. அர..நாள் கழிச்சி வர்றீங்க. இன்னா குடுத்தாங்க…?”
கதிரவன் அமைதியாய் தன் ஜோல்னாப்பையிலிருந்து சால்வையை உருவி மேசை மீது வைத்துவிட்டு நகர்ந்தான்.
ஆமா.. நான் தெரியாமதான் கேட்கறேன்; உங்க தமிழ் ஆளுங்களுக்கு,     இதவிட்டா வேற எதுவும் தெரியாதா?”
“…ம்..தமிழாளுங்க….! இவ மட்டும் இங்கிலீஷ்காரி பாரு…” உச்சரிப்பை  உதட்டைவிட்டு வெளியேறிவிடாமல் நசுக்கினான்.
நா..சம்பாரிக்கிறது, வாயிக்கும் வயித்துக்குமே சரியாயிருக்குது. நீங்களும் எதாவது கம்ப்பனி கிம்ப்பனிக்கு போனீங்கன்னாகொழந்தைங்களுக்கு சேத்துகீத்து வைக்கலாம். அந்த அக்கற கொஞ்சமும் இல்லாமஎழுத்தாளனாகிட்டன்..கிழுத்தாளனாகிட்டேன்னு ஏடா கூடமா பேசிக்கிட்டு. எக்கேடாவது கெட்டுத் தொலைங்க. எல்லாம் எந்தலையெழுத்து…”
அடியே..ய்பணம் சம்பாதிக்கிறது மட்டுமே வாழ்க்கையில்ல. எவன் எவ்ளோ சம்பாரிச்சு என்ன புண்ணியம்? நாளைக்கு அவனெல்லாம் செத்தா..அது ஒரு சம்பவம். ஆனாநான் செத்தா அது ஒரு செய்தி. நான்சமுதாயத்துல எனக்குன்னு ஒரு கூட்டத்த சேத்து வச்சிருக்கேன். பணம் மட்டும் வட்டி குட்டின்னு போடாது….புகழும் போடும்.
காட்சி அந்த இடத்தில் அறுந்தபோது உண்மதாங்க. உண்மதான்.என்று கண்கலங்கினாள், அலமேலு.
ஏ.சி கம்பார்ட்மென்டில் தன் இருக்கையை தேடி அமர்ந்து கொண்டாள். தன் எதிர் இருக்கையில் இருந்த இளம்தம்பதியர் ஏதோ அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மொழி தமிழாய் இருந்தது, அலமேலுவிற்கு ஆறுதல் தந்தது.
அம்..மா.. நீங்கஅக்னி ஐயாவோட மனைவி தானே…?” தம்பதியரில் ஆடவன் கேட்டான்.
ஆச்சரியத்தோடு ஆமாம்.என்றாள்.
அம்மா.. ரொம்ப சந்தோஷம்மா.  நான் ஐயாவோட அமைப்புல இருந்தேம்மா. உங்க வீட்டுக்கெல்லாம்கூட வந்திருக்கிறேன்.
பானுநான் சொல்வேனே.. அக்னி ஐயாஅவரோட மனைவி இவுங்க.அவன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்.
அவள் சம்பிரதாயத்திற்கு வணக்கம் சொல்லிவிட்டு, “சொல்லறத கேளுங்க. புக்ஸ்லாம் வேணாங்க. காச இப்டி கரியாக்காதீங்க..என்று சொல்லிவிட்டு முகத்தைதிருப்பி ஜன்னல் பக்கம் வைத்துக்கொண்டாள்.
இல்ல பானுகத அனுப்பியிருக்கேன். வந்திருக்குதான்னு பாக்கவேணாமா?” தலையை சொறிந்த அவனிடம், தீடீரென உரிமையோடு,
நீ போய் வாங்கிட்டுவாப்பா. நான் அதுவரைக்கும் பானுவோட பேசிக்கிட்டிருக்கேன்.என்றாள் அலமேலு.
அவன் தயங்கி தயங்கி நகர்ந்ததும், அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், அலமேலு பேசத்தொடங்கினாள்.
நானும் ஒன்ன மாதிரிதாம்மா. எனக்கும் புக்ஸ்லாம் வாங்கி, காச கரியாக்கனா பிடிக்காது
அவள் ஆர்வமானதும், ‘அலமேலு-கதிரவன்பற்றிய முழு கதையையும் சொல்லத்தொடங்கினாள். பேச்சின்போது,
அப்போ அவர் சொல்லும்போதெல்லாம் புரியாத ஒரு விஷயம் இப்போ புரியுதுமா. கதை எழுதறவங்ககடவுள்மா. அவுங்கபுதுசு புதுசா படைக்கிறவங்க. நம்ம பண்பாடு கலாச்சாரம் சீரழிஞ்சிபோவாம பாதுகாக்கிறவுங்க. சமுதாயத்துல, முள் செடியா வளர்ற அவநம்பிக்கையும் மூடத்தனத்தையும் அழிக்கிறவுங்க. ஆக்கல், காத்தல், அழித்தல்ன்னு மூணு வேலையையும் அக்கறையோட செய்யற அவுங்க கடவுள்மா. இத மட்டும் நான் முன்கூட்டியே உணர்ந்திருந்தாமுப்பது வருஷம்அவர பாடாதபாடு படுத்தியிருக்கமாட்டேன். அவுரும்நிம்மதியா சந்தோஷமா இன்னும் கொஞ்ச நாளு.. இருந்திருப்பாரு…” கண்ணீர் கட்டுப்பாட்டை இழந்து வழிந்தது.

என்னங்க .. இந்தப்பாவிய  மன்னிச்சிடுங்க…” மேலே பார்த்து வாய்விட்டு அழுத அலமேலுவின் கைகளை அந்த இளம்பெண் அழுத்திப்பிடித்தாள். அந்த அழுத்தத்தின் அர்த்தத்தினை அலமேலுவால் உணரமுடிந்தது.கடவுள்களின் முகவரி

என்னங்க .. இந்தப்பாவிய  மன்னிச்சிடுங்க…” மேலே பார்த்து வாய்விட்டு அழுத அலமேலுவின் கைகளை அந்த இளம்பெண் அழுத்திப்பிடித்தாள். அந்த அழுத்தத்தின் அர்த்தத்தினை அலமேலுவால் உணரமுடிந்தது.