ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 7 January 2014

சிறுகதைப் போட்டி 91

வறுமைக்குள் ஈரம்

அந்த மருந்துக்கடையில் கடிகாரத்தை நான் பார்த்த நொடியில் நினைத்தது சரியாகவே இருந்தது. அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக நான் வந்து சேர்வதற்குள், பேருந்து நிலையத்தைவிட்டு வெளியே வந்துவிட்டிருந்தது, நான் வழக்கமாகச் செல்லும் அந்த புதுச்சேரி பேருந்து. ஓடி, ஏறி, இடம்தேடி அமர்ந்தேன். பின்பக்க டயருக்கு நேர்-மேல் இருக்கை. தனியே பயணம் என்பதால் உட்காரமுடிந்தது. மனைவியோடு வரும்போது டயருக்கு நேரான இருக்கைகளில் அமர அவள் சம்மதிப்பதில்லை. தூக்கித் தூக்கிப்போடும்என்பாள். எனக்கு அதுபற்றி கவலையில்லை. காரணம்- வாழ்க்கையின் வழிநெடுகிலும் வறுமை என்னை தூக்கித்தூக்கிப் போடுவதைவிட, இது என்ன பெரிதாய் போட்டுவிடப்போகிறது என்கிற நினைப்பு எனக்கு.

இருநபர் இருக்கை அது. அதில் சன்னலோரம் அமர்ந்திருந்த இளைஞன், காதில் செல்பேசியின் உபகரணம் ஒன்றை பொருத்தி கிசுகிசுத்துக் கொண்டிருந்தான். அவனிடம், கல்லூரி மாணவனின் தோரணை. ம்ம். இந்த காலத்து இளைஞர்களுக்கு உணவு உடை உறைவிடம் கூட தேவையில்லை, செல்பேசி ஒன்று இருந்துவிட்டால்.

நகரத்து நெரிசலைவிட்டு விடுபட்டு, பேருந்து வேகம்கூட்டி நகரத்தொடங்கியது. என் கைப்பையை திறந்து, வாங்கிய மருந்து மாத்திரைகள்  பத்திரமாய் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளும் அனிச்சை செயலொன்று நிகழ்ந்து முடிந்தபின், என்னிடம் மீதமிருந்த சில்லறைகளை எண்ணினேன். இந்த பேருந்துக்கான டிக்கட்போக, மூன்று ரூபாய் மீதம். இதற்கடுத்து, புதுச்சேரியிலிருந்து நான் பயணிக்க வேண்டிய நகர பேருந்திற்கு இரண்டு ஐம்பது போக, இன்றைய சேமிப்பு, ஐம்பது காசு என்கிற மனக்கணக்கு, பெருமூச்சோடு முடிந்துபோனது.

டிக்கட்….டிக்கட்

நடத்துனர், நான் கொடுத்த சில்லறைகளை பார்த்ததும். அப்பா…. நீயாவது சில்லறையா கொடுத்தியே! எல்லாரும் அம்பது நூறுன்னு குடுத்தா…. நா என்ன பண்ண முடியும்?” என்றார்.
பார்த்தியா, உன் இல்லாமைக் கூட உனக்கு ஒரு பாரட்டுதல வாங்கி தர்றத..நீ என்னவோ அம்பதையும் நூறையும் வச்சிக்கிட்டு சில்லறையா கொடுக்கிற மாதிரி….” எனக்குள்ளேயே ஒரு ஏளனக்குரல் சிரித்தது.

தம்பி….. டிக்கட்டிக்கட்…” என்ற நடத்துனரின் குரலை கவனிக்காமல் செல்பேசியில் மூழ்கியிருந்தவனை, அதான் என் பக்கத்து இருக்கை ஆசாமியை, நான் தட்டி, அவர் பக்கம் திருப்பிவிட்டேன்.

அப்படி என்னதான் பேச்சோ!என்ற எண்ணத்தால் நொந்து கொண்ட நான், பேருந்தை முழுவதுமாக ஒரு அலசு, அலசினேன். நான்கு இருக்கைக்கு முன்னால், ஒரு முதியவர், என்னை ஒட்டிய பின்புற இருக்கையில் ஒரு அம்மா, கடைசியில் சீருடையில் ஒரு பருவப்பெண், பேசிக்கொண்டிருந்தார்கள் அவரவர் செல்பேசியில். தற்போது உபயோகப்படுத்திக்கொண்டிருப்பவர்கள் வேண்டுமானால் இந்த நான்கு பேராக இருக்கலாம். ஆனால், இந்த பேருந்தில் பயணிக்கும் எல்லோரிடமும் ஒரு செல்பேசி நிச்சயம் இருக்கலாம், என்னைத்தவிர. பெருமூச்சு வந்தது.

என்னங்க! இந்த தடவ டாக்டர் திட்டியே அனுப்பிட்டாரு, ‘கொழந்தைக்கு பயங்கரமான காய்ச்சல். வழக்கமா ஐஞ்சு நாளைக்கு மருந்து எழுதிக்கொடுத்தா, ரெண்டு நாளைக்கு வாங்கறது, மூணு நாளைக்கு வாங்கி போடறதுன்னு, பாதியில நிறுத்தற வேலையெல்லாம் இப்ப வேணாம். முழுசா போட்டாத்தான் குணமாகும். தெரியுதா?’ன்னு அதட்டினாரு. அதனால, நீங்க இந்த சீட்ல இருக்கிற எல்லா மருந்தையும் வாங்கிட்டு வந்துடுங்க. ஊசிபோட்டு ஒரு வேளைக்கு மாத்தரையும் அவரே கொடுத்தனுப்பிட்டாரு. அதனால, வேல முடிச்சிட்டு நீங்க வரும்போது வாங்கிட்டு வந்தாபோதும்” – காலையில் புறப்படும்போது மனைவி சொன்னதாலும், குழந்தையின் நலம் என்பதாலும், இன்றைய ஊதியம், ஏறக்குறைய முழுமையாக செலவாகியிருந்த போதிலும் வருத்தமற்று, எஞ்சும் ஐம்பது காசை எண்ணி திருப்தியடைந்தது, மனம். நல்ல வேளை, மருந்தின் விலையில் இன்னும் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்திருந்தால் கூட, புதுச்சேரியிலிருந்து நகரப்பேருந்தில் பயணித்திருக்க முடியாது. நடராஜா சர்வீஸில்வீடுபோயிருக்க வேண்டும்.

ஹலோ!...... ஹலோ!கத்திவிட்டு, செல்பேசியின் திரையை ஒரு முறை பார்த்து, இன்னும் அந்த அழைப்பு துண்டிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்துக் கொண்டு, மீண்டும், ‘ஹலோ! ஹலோ!.... சிக்னல் வீக்காயிடுச்சுன்னு நெனைக்கிறேன்என்று பேச்சை தொடர்ந்தான், பக்கத்து இருக்கைக்காரன்.

முப்பது நிமிட பயணம் முடிந்துவிட்ட நிலையிலும், அவன் இன்னும் பேசி முடித்த பாடில்லை. இந்நேரத்திற்கு எவ்வளவு பணம் செலவாகியிருக்கும்? இந்த பணத்தை யார் சம்பாதித்திருப்பார்? உழைத்து சம்பாரித்ததாக இருந்தால், அந்தப் பணம் விரயமாகிக் கொண்டிருப்பதாகத் தானே அர்த்தம். தேவையில்லாமல் இதை யோசித்துவிட்டு மீண்டும் பேருந்தை நோட்டமிட்டபோது, பேசுவோர் எண்ணிக்கை குறைந்திருந்தது. இவனைப்போலவே, சீருடைப்பெண்ணும் பேசிக் கொண்டிருந்தாள்.

அந்த பெண்மட்டும் என்ன, ‘இந்தியாவை முன்னேற்றுவது எப்படி?’ என்றா பேசிக்கொண்டிருக்கப்போகிறாள்? அவளும் பணத்தை வீணடித்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஒரு காலத்தில் செல்பேசி வாங்கும் அளவிற்கு வசதி வாய்த்து, வாங்கினால் கூட இப்படியெல்லாம் மணிக்கணக்கில் பேசக்கூடாது என்று தீர்மானம் இயற்றிக் கொண்டது மனம்.

புதுச்சேரியை நெருங்கிக் கொண்டிருந்தது பேருந்து. பேருந்து நிலையத்திற்கு இரண்டு நிறுத்தத்திற்கு முன்னரே இறங்க வேண்டிமையால் நான் தயாரானேன். மீண்டும், அனிச்சையாக மருந்தை சரிபார்க்கும் செயல் நீண்டு, சட்டைப்பையில் கிடக்கும் மூன்று ரூபாயையும் சரிபார்த்து முடிந்தது. ஆம். அதில் ஒரு ரூபாயை நான் இழந்துவிட்டால் கூட, நகரப்பேருந்து பயணத்தை துறந்து, பொடி நடையாய் வீடு போய் சேரவேண்டியதாகிவிடும். குறைந்தது அரைமணி நேரமாவது நடக்கவேண்டியதிருக்கும்.

நான் இறங்கிய அதே நிறுத்தத்தில், பேருந்திலிருந்த பாதிக்கும் மேற்பட்டோர் இறங்கினார்கள். என் பக்கத்து இருக்கை ஆசாமியும், சீருடைப்பெண்ணும் அதில் அடக்கம். அப்பாடா! இப்பொழுது அவர்கள் இருவருமே செல்பேசி பயன்பாட்டிலிருந்து தற்காலிகமாக விடைபெற்றிருந்தனர்.

தவளகுப்பம் தாண்டும் போது, நீ அவன பத்தி ஏதோ சொன்னீயே, அது சரியாவே கேக்கல. என்ன சொன்ன?” அந்த சீருடைப் பெண்ணிடம் விசாரித்தபடியே நகர்ந்தான் செல்போன் ஆசாமி.

அடப்பாவிகளா! கடலூரிலிருந்து புதுச்சேரி வரவரைக்கும் ஒரு பேருந்துக்குள்ளேயே உட்கார்ந்துகிட்டு, உங்களுக்குள்ளேவா பேசிட்டு வந்தீங்க? அதுக்கு பக்கத்து பக்கத்துல இடம்புடிச்சு பேசிகிட்டு வந்திருக்கலாமில்ல! பணத்தின் அருமை தெரியாத எருமைகள்!’ – மனதிலிருந்த எழுந்த வார்த்தைகள், முணு முணுப்பில் வந்து வெடித்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து என்னை திசைதிருப்பியது, ஒரு பெண்ணின் குரல். அங்கிருந்த பெட்டிக்கடை ஒன்றில் வைக்கபட்டிருந்த ஒரு ரூபாய் நாணயத்தொலைபேசியில் சத்தமாக பேசினாள்.

என்னங்க….. அகமதாபாத்துல இருந்துதான் நீங்க சம்பாரிக்கணும்மா? ஊரோட வந்துடுங்க….! பசங்கள வச்சிக்கிட்டு ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க. அப்பாஅப்பான்னுநச்சரிக்குதுங்கசரி, ரெண்டு ரூபாதான் இருந்தது. உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசிடுங்க. இல்லஉயிர எடுத்துடுவாஎன்றபடி தன் மகளிடம் கொடுத்தாள்.

நான்கு வயதிருக்கும் அந்த மழலை பேசத் தொடங்கியதிலிருந்து, நடுநடுவே அம்மா…. அப்பாகிட்ட இன்னும் கொஞ்சம் பேசணும்மா. ஆசையாசையா இருக்கும்மா. இன்னும் ஒரு ரூபா போட்டிடுங்கம்மா!என்றது.

இல்லடி பொண்ணு…. நீ பேசி முடி

அப்பா வகுப்புலேயே நான்…. நான்தான் முதல். நீங்க எப்பப்பா வருவீங்க? வந்திடுங்கப்பா. உங்ககிட்ட நிறைய பேசணும், உங்ககூட விளையாடணும்ன்னு ஆசையா இருக்குப்பா.இடையில்- அம்மா….அம்மாகட் ஆவப்போவுதும்மா. ஒரு ரூபா போடும்மா. நாளைக்கு காலையில எனக்கு பன்னுகூட வேணாம்மாநான் பட்டினியாவே பள்ளிக்கூடம் போயிக்கறேம்மா. அம்மாஅந்த ஒரு ரூபாய போடுமா. அம்மா….ஒரு ரூபாம்மா!கெஞ்சி அழுத குழந்தையின் குரல் என்னுள் ஒரு பூகம்பம் நிகழ்த்தியது. ஓடிப்போய், என் பையிலிருந்து எடுத்து, ஒரு ரூபாயை அந்த பேசியில் போட்டேன்.

மாமா! நன்றி….நன்றி மாமா? என்று அவசரமாக முடித்துவிட்டு அப்பாநா இன்னம் உங்ககிட்ட பேசுவேனே….” என்று கூதூகலத்துடன் பேச்சைத் தொடர்ந்தது. கண் கலங்க நின்றிருந்த அந்த குழந்தையின் அம்மா, என்னை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

என்னிடம் மீதமிருந்த இரண்டு ரூபாயையும் எடுத்து, பேசிக்கொண்டிருந்த அந்த குழந்தையின் கையில் திணித்துவிட்டு, “பேசுடா….நீ பேசுஅப்பாகிட்ட ஆசத் தீரப் பேசு…” என்றேன்.

பெருமூச்சு வந்தது. இது நிம்மதி பெருமூச்சு. நான் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். இரண்டடிக்குள்ளே என் கால் இடறியது. மருந்து மாத்திரைப் பையை பத்திரமாக பிடித்துக் கொண்டு, கவனமாக நடக்கையில், சாலை நெடுகிலும் குண்டும் குழியுமாக இருந்தது. இந்த சமூகத்தின் ஏற்ற இறக்கங்களைப் போலவே.வறுமைக்குள் ஈரம்

பெருமூச்சு வந்தது. இது நிம்மதி பெருமூச்சு. நான் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். இரண்டடிக்குள்ளே என் கால் இடறியது. மருந்து மாத்திரைப் பையை பத்திரமாக பிடித்துக் கொண்டு, கவனமாக நடக்கையில், சாலை நெடுகிலும் குண்டும் குழியுமாக இருந்தது. இந்த சமூகத்தின் ஏற்ற இறக்கங்களைப் போலவே.