அவள் ஒரு
பெண்ணியவாதி!
அந்த அரங்கம் அதிர எல்லோரும் எழுந்து
நின்று ”சுப்பர் சிங்கரின் இறுதிச் சுற்றில்” தட்டுவது போல கை தட்டிக் கொண்டு
இருந்தார்கள்.
அமைதியாக எல்லோரையும் பார்த்துக் கைகூப்பி வணங்கிவிட்டு
மேடையிலிருந்து இறங்கி வந்து கொண்டு இருந்தாள், பூர்ணிமா, பேரழகி! வெள்ளை
நிறத்தில் சிவப்பு பாடர் வைத்த காட்டன் புடவை உடுத்தி இருந்தாள். கீழ் நின்றவர்கள்
இவள் நடந்து வந்த வழி எல்லாம், “நல்லாப் பேசுனிங்க” என்று வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
“தேங்க் யூ, தேங்க்ஸ்”, என்று வெளியே வந்து கொண்டிருந்தாள். சுரேஷ் இவள் அரங்கத்தின் வெளியே வந்ததும்
வாசலில் பார்த்து, “இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு முன்னாடி என்னமாப் பேசுற,
எனக்கெல்லாம் நடு நடுங்கிப் போயிரும், நீ ஆனாலும் ரொம்ப தைரியசாலி தான்!
கங்க்ராட்ஸ் பூர்ணி” வாழ்த்துச் சொல்கிறான். வெளியே வந்து
அங்கு அருகில் இருக்கும் ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டு
இருக்கிறார்கள். தோழிகள் கூட்டம் ஒரு பக்கம் நிற்கிறது. இன்னும் ஒரு பக்கம் ஒரு பிள்ளையார் மரத்தடியில், அதை ஒட்டி, சிறுவர்
பூங்காவில் இருப்பது போல ஒரு குட்டி ராட்டிணம். அந்த இடமெங்கும் பச்சைப் பசும்
புல், அதில் ரத்தச் சிவப்பில் ஏதோ ஒரு வகைப்பூ, நிறைய பூத்துக் கிடக்கிறது,
கொத்துக் கொத்தாக!
இன்னும் ஒரு பக்கம் காகிதங்கள் சிதறிக் கிடக்கின்றன. இவளது தோழி
ஒருத்தி அவற்றைப் பொருக்கிக் கொண்டு இவளையும் சுரேஷையும் பார்த்து லேசாகச்
சிரிக்கிறாள் கேலியாகக் கண்ணடித்து.
இவள் பேசிவிட்டு கிளம்புகிறாள். நடந்து வருகையில், தூரத்தில் சுத்தமான
வெள்ளை நிறத்தில் கம்பெனியின் பெயர் கூட எழுதாமல், விசித்திரமாக ஒரு ஐஸ்கிரீம் வண்டி
நிற்கிறது, சிவப்புத் தொப்பி அணிந்த இளைஞன் ஒருவன் அருகில் நிற்கிறான், அதில் ஐஸ்
வாங்கலாம் என்று நினைக்கிறாள், ஆனால் வாங்கவில்லை! நடக்கிறாள்!
திடீரென அந்த சாலையில் ஒரு விபத்து, ஒரு வாலிபன் பல்சரில்
வேகமாக வந்து ஒரு காரில் மோதி, அதே வேகத்தில் தூக்கி எறியப்பட்டு, ரத்தம் ஒழுக
ஒழுக, வெட்டி வெட்டி இழுக்கிறது! இழுத்துக் கொண்டே இருக்கிறது! யாரும் அருகில்
செல்லவில்லை, சாலையில் யாருமே இல்லை! இவள் மட்டும் தான்! அவன் துடித்துத் துடித்து
அப்படியே இறந்து போகிறான்.
பிணவறையில் ஏதோ ஒரு மருத்துவமனையில் அந்தப்
பிணம் கிடக்கிறது, இவள் கதறி அழுது கொண்டிருக்கிறாள். தேம்பித் தேம்பி அழுகிறாள்.
வெளியே நடந்து வருகிறாள். ”யாரிந்த வாலிபன்? யார்? இதென்ன? இது!? என்ன
இது?? என்ன இது??”, மனது படபடக்கிறது!
அங்கிருந்து இவளது பத்திரிக்கை அலுவலகத்திற்கு வருகிறாள். உள்ளே
செல்கிறாள், யாருமே இல்லை! வெளியில் வாச்மேன் கூட இருந்தது போலத் தோன்றவில்லை!
எல்லோரும் எங்கே? காற்றாடி வேகமாகச் சுற்றிக் கொண்டு இருந்தது, இவள் தனது மேசையில்
வைத்திருந்த காகிதங்கள் எல்லாம் அந்தக் காற்றாடியின் வேகத்தில் பறந்து இருந்தன! ”அய்யோ, நேற்று நான் எழுதிய குறிப்புகள்...”, இவள் தேடுகிறாள் அவளது முக்கியமான
குறிப்புகளை மேசையில். மேசையின் மேல் இல்லை, கீழே விழுந்து இருக்குமா? தேடுகிறாள்.
கீழே தேனீர் குடித்துவிட்டுப் போட்ட பேப்பர் கப்புகள் கிடந்தன! குறிப்புகள் இல்லை!
”குறிப்புகளை யாராவது எடுத்து
இருப்பார்களோ??? முக்கியமானவை! அந்த விபத்தில் இறந்த வாலிபன்? அவனைப் பற்றி காவல்
நிலையத்தில் சொல்ல வேண்டும். குறிப்புகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்! சுரேஷையும்
உடன் அழைத்துச் செல்லலாம்..”,
யோசித்துக் கொண்டே வெளியே வருகிறாள்.
இரவு! “அதற்குள் இருட்டிவிட்டதே”, நினைத்துக் கொண்டே நடக்கிறாள். ஒரு இருட்டான
சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கிறாள், தெருவிளக்குகள் இல்லை. வானத்தில் அரை
நிலவு அந்தக் குறையைத் தீர்த்து இருந்தது. அந்த நீளமான சாலை ஏதோ ஒரு பூங்காவில்
இருந்து தான் வெளி வருகிறது. அப்படித் தான் தெரிகிறது! ஒரு ஓரத்தில், ஒருவன், முகத்தில் வெடிப்பு வெடிப்பாக வந்து
அதில் ரத்தம் ஒழுக ஒழுக நிறைய கொப்புழம் வெடித்துக் கொடூரமாக
அமர்ந்திருந்தான்.
இவளைப் பார்த்து “அருகில் வா” என்று
அழைப்பது போல சைகை செய்கிறான். இவளுக்கு பயம். இதயம் வேகமாகத் துடிக்கிறது.
வெளிறிவிட்டது முகம். நாவெல்லாம் வரண்டு இருந்தது, கொஞ்சம் தண்ணீர் குடித்தால்
நன்றாக இருக்கும் போல இருந்தது.
தூரத்தில் கொஞ்சம் வெளிச்சம்! அதை நோக்கி வேகமாக நடக்கிறாள். அந்தக்
கொடூரமானவன் பின் தொடருகிறான், சற்று நொண்டி நொண்டி தான் அவன் ஓடுகிறான் இவளைத்
துரத்திக் கொண்டு! இவள் ஓடுகிறாள்.
இவள் எத்தனை வேகமாக ஓடினாலும் முடியவில்லை! அவன் இவளை நொண்டி
நொண்டி வந்தே பிடித்துவிட்டான். இவளின் புடவையின் முந்தானை அவன் கையில்
அகப்பட்டுவிட்டது! இழுக்கிறான். அவன் கையில் ரத்தம் வழிகிறது, அதோடு இழுக்கிறான்
இவள் புடவையைக் கிழித்தெரிகிறான்! அவனைத் தாக்க முயல்கிறாள், திடீரென எங்கிருந்தோ
இன்னும் நான்கு பேர் வருகிறார்கள், ஓட முயன்று கீழே விழுகிறாள் தவறி, அவர்களைத் தாக்க
முடியவில்லை, கைகளை அசைக்க முடியவில்லை, கால்களை அசைக்க முடியவில்லை. யாரையாவது
சத்தமிட்டு அழைக்கலாமா என்று பார்க்கிறாள், ம்ம்ஹும், முடியவில்லை, உடலில் எந்த
பாகமும் பயத்தில் இருந்து மீளவில்லை, அசையவில்லை. கீழே விழுந்து கிடக்கிறாள். இவளுக்கு
வானில் இருக்கும் நிலவு, அந்த அரை நிலவு தெரிகிறது, மல்லாக்க மேலே பார்த்து,
சாலையில், புடவை இன்றிக் கிடக்கிறாள், இவளின் அருகே அந்த அருவெருப்பானவன், சுற்றி
அந்த இன்னும் சிலர்! இவளைப் பார்த்து சிரித்தவாறே, இவளின் மீது அவன்...
படாரென எழுகிறாள். கனவு, நல்லது, எல்லாமே
கனவு! அருகில் இருக்கும் மேசையில் இருந்து தண்ணீரை எடுத்து வேகமாக அருந்துகிறாள். கடிகாரம்
சரியாக ஆறு மணியைக் காட்டுகிறது. விடியத் தொடங்கி இருந்தது!
”ஏழு
மணிக்குப் போகனுமே!”,
அவசரமாக
அலுவலகத்திற்குக் கிளம்பத் தொடங்கினாள். குளியலறையில் ஷவரின் கீழ் நின்றாள்,
கண்களை மூடி, தண்ணீரை முகத்தில் வழியவிட்டாள், அந்தக் கனவில் வந்த முகம்,
கொப்புழங்களோடு, ரத்தம் வழிய.. கண்முன்
வந்தது! உடல் கூசியது! அதோடு சேர்த்து பேருந்தில் முந்தைய நாள் எவனோ ஒருவன்
இடித்தது நினைவுக்கு வந்தது. அப்படியே அவனை இவள் ஓங்கி அறைந்ததும் நினைவிற்கு
வந்தது, அந்த அறை கொஞ்சம் ஆறுதல் தந்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சோப்பைத்
தேய்த்து, அழுந்தத் தேய்த்து, அவள் தன்னைக் கழுவிக் கொண்டாள்.
குளித்து விட்டு, வெளியே வந்து அறையில் புடவை கட்டிக் கொண்டே,
“இன்று
பத்திரிக்கையில் என்ன எழுதுவது”
என்று யோசித்தபடி மடிப்பு வைத்தாள். அப்படியே யோசித்தவாறே, இடுப்பில் ஒரு ஊக்கு,
பின்னால் சேலை விலகாமல் இருக்க பின்னால் இருந்து இழுத்து ஒரு ஊக்கு, பக்கவாட்டில்
மறைக்க ஒரு ஊக்கு, என்று எல்லாப் பக்கமும் நன்றாக மறைத்துப் புடவையைக் கட்டிக்
கொண்டாள். கண்ணாடியின் முன் நின்று பார்த்தாள் ஒரு முறை. பின்னே திரும்பி, முன்னே,
வலது, இடது என்று எல்லாப் பக்கமும். சட்டென்று அந்தக் கனவு நினைவிற்கு வரவே,
இன்னும் ஒரு ஊக்கை எடுத்து, புடவையின் முந்தியையும் சரியாக மடித்து, முன்னே
இடுப்பில் மடித்து ஒரு ஊக்கை வைத்துக் குத்திக் கொண்டாள். முந்தி இனி பத்திரமாக
இருக்கும், யார் கையிலும் அகப்படாது!அவள் ஒரு

இருக்கும், யார் கையிலும் அகப்படாது!