சிறுகதை-மூன்று
கதை ஒருவனுக்காக
கன்னியாகுமரி
பேருந்து நிலையத்தில் ஏறிய போது இருந்த படபடப்பு இன்னும் குறையவில்லை
இருவருக்கும். அவ்வப்போது அழுதுகொண்டு இருந்த நதியாவை சமாதானம் செய்து கொண்டு
ஆறுதல் கூறியே வந்தான் குமார். தங்கள் இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி காதல்
திருமணம் செய்து கொண்டு இருவரும் திருச்சி நோக்கி பயணித்து வந்து கொண்டு
இருக்கின்றனர். என்ன செய்ய போறோம் ???
அவசரப்பட்டு விட்டோமோ என்றே பயந்து இருந்த நதியாவிற்கு , ஆறுதலாய் இருந்தது ஒரே நம்பிக்கை குமார் எப்பொழுதும் சொல்லும்
திருப்பூரில் நிச்சயம் வேலை கிடைத்துவிடும் மாதம் 5000 சம்பளம்
ஸ்பின்னிங் மில்லில் ஏகப்பட்டது இருக்கின்றது என்று கூறுவான் அதை நம்பியே இவளும்
அவன் தோளில் சாய்ந்து கிடைச்சிடும் இல்ல என்று கேட்டால். கண்டிப்பா கிடைச்சிடும்
நாம புது வாழ்க்கைய தொடங்குவோம் கவலைபடாத என்று கூற திருச்சி மத்திய பேருந்து
நிலையம் வந்தது. இருவரும் இறங்கி சற்றும் தாமதிக்காமல் திருப்பூர் செல்லும்
பேருந்தை தேடி பிடித்து ஏறி அமர்ந்தனர். பேருந்து செல்ல தொடங்கியது இருவரும் இரவு
முழுக்க பயணித்த களைப்பும் இப்பொழுதும் அதுவே என்று அசதியில் இருவரும் ஒருவர் மீது
ஒருவராக கண் அயர்ந்தனர்.
இன்னும்
2மணி நேரத்தில்
திருப்பூர் வந்துடும் , இறங்கி என்ன பண்றது?? ஊர்காரண எப்படி தேடி பிடிக்கிறது என்று மனதில் புலம்பியபடியே இருந்தான்
ராஜா. தன்னுடைய தம்பியின் பள்ளி படிப்பு , தந்தை குடியால்
பட்ட கடன் என்று எந்த சொத்தும் இல்லாமல் கிராமத்தில் தாயுடனும் தம்பியுடனும் சிறு
சிறு வேலை செய்து கொண்டு ஓரளவு வாழ்ந்துவந்தவனுக்கு விதி, தந்தையின்
கடனாளிகளின் வழியாக வந்து இவனை சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி ஓட
வைத்துள்ளது. 75 ஆயிரம் கடன் மாசம் 4000 ஆனா கூட எப்படியும் ஒன்றரை வருஷத்துல அடைச்சிட்டு நிம்மதியா இருக்கலாமே
என்று மனக்கணக்கு போட்டுட்டே கடவுளை வேண்டுகிறான் வேலை கிடைத்துவிட வேண்டும் என்று
ராஜா.
திருப்பூர்
பேருந்து நிலையத்தில் நின்றவுடன் நடுக்கத்துடன் தன் பேக்கை எடுத்து கொண்டு
இறங்குகிறான் அருண் . அவன் கும்பகோணத்தில் பேருந்து ஏறியது முதல் அவனையே கவனித்த
எல்லோரின் கண்களும் இப்பொழுதும் கவனிகின்றது ஆனால் இங்கே சகஜம் இது போல தினமும்
நூறு பேர் வருவார்கள் என்பதனால் ஒரு சிலர் மட்டுமே கவனிப்பதை அருணும் உணர்ந்தான்.
தன் ஊரில் விழா காலங்களில் காணும் கூட்டத்தை போல அனாசியமாக எல்லோரும் போவதை வருவதை
காணுகிறான். வேலைக்கு ஆட்களை ப்ரோக்கர்கள் கத்தி கத்தி அழைத்து கொண்டு இருந்தது
அவனை இன்னும் நடுக்கத்துக்கு உண்டாக்கியது.
ராஜ்
மில்ஸ் ராஜ் மில்ஸ் 5000
சம்பளம் தாங்கும் வசதி என்று கத்தி கொண்டு இருந்தவனை நோக்கி அருண்
மெதுவாக நடக்க முற்பட்டான். அவனின் தோளை யாரோ பின் தொட திடுக் என்று திரும்பினான்
அருண்.
தம்பி
எந்த ஊரு ? வேலைக்கு தான்
வந்துருக்க பார்த்தாலே தெரியுது ? என்று அருணிடம் அன்பாக
கேட்டான் வந்தவன்.
ஆம்மான்னே
என்ன வேலையா இருந்தாலும் செய்வேன்னே வாங்கி தான்கனே ப்ளீஸ்நே என்று கண்கள் கலங்க
அருண் கேட்டது வந்தவனுக்கே உருக்கம் தந்தது.
வாப்பா போகலாம் நல்ல வேலை வாங்கி
தரேன் என்று கூறி கொண்டு அருணை அழைத்து சென்றான், சற்று நடக்கும் தொலைவில் இருக்கும் இடத்திற்கு.
யார்
என்று தெரியாமல்??? என்ன
நம்பிக்கையில் போகிறோம்??? என்று அவனுக்கே தெரியாமல் உடன்
சென்றான் அருண். இரண்டு மாடி அடுக்கு கட்டிடம் தம்பி இங்க நில்லு என்று உள்ளே
சென்றான் வந்தவன். அருண் வெளியே தொங்கும் போர்டை காணுகிறான் "சோழன்
கன்சல்டன்சி " அனைத்துவகையான வேலைகள் பெற்று தரப்படும் என்று போட்டு இருந்ததை
பார்த்து கொஞ்சம் நிம்மதி அடைந்தான் அருண்.
மாடியில்
இருந்து தம்பி மேல வா என்று அழைக்க அருணும் மேலே சென்றான் வரவேற்பறையில் இருந்த
நபர் அருணை மேலும் கீழும் பார்த்தான் அருண் அதை சட்டை செய்யாமல் தொடர்ந்தான் , மேலே சென்றவுடன்
"தம்பி இந்த ரூம்ல இரு மணி இப்போ 5.15 சார் வேலை
முடிஞ்சி 6 இல்ல 6.15 போல வருவாரு,நா சொல்லிட்டேன் அவர்ட பார்த்துப்பார் உள்ள படுத்துக்கோ கவலைபடாதபா சரியா
போ ரூம் தொறந்து தான் இருக்கு" என்று கூற
அருணும்
நன்றி தெரிவித்து விட்டு உள்ளே சென்றான் இருட்டாக இருந்த ரூமில் லைட்டை போட
சுவிட்சை தேடினான் ,
போட்டால் லைட் எரியவில்லை விரக்தியில் கதவை திறந்து வைத்து விட்டு
ரூம் மூலையில் சென்று அமர்ந்தான். எதை நினைத்தானோ திடீர் என்று அழுக ஆரம்பித்து
விட்டான். கண்ணீர் அவன் சட்டையை நனைந்து கொண்டு இருந்தது.
அருணை
விட்டுவிட்டு மீண்டும் பேருந்து நிலையம் நோக்கி சென்றவன் மீண்டும் கத்த தொடங்கி
விட்டான் சோழன் கன்சல்டன்சி ,சோழன் கன்சல்டன்சி எந்த வேலையும் உண்டு வாங்கனே வாங்கனே என்று
கூறிக்கொண்டு இருந்த அவனை நோக்கி வந்தான் ராஜா, சார் சோழன்
கன்சல்டன்சி ரமேஷ் தெரியுமா சார் என்று கேட்டான் அதற்க்கு நீ யாருபா இல்லை சார்
அவன் என் ப்ரெண்ட் ஒரே ஊரு வேலை தேடி வந்துருக்கேன் அவன் நீங்க சொல்லுற கம்பெனில
தான் வேலை பாக்குறான் வந்தாலே கேட்டா சொல்லுவாங்கனு சொன்னான் அதான் சார் கொஞ்சம்
ஹெல்ப் பண்ணுங்க சார் என்று கேட்டான் ராஜா.
அடடே
ரமேஷ் ப்ரெண்டா வாங்க வாங்க நாம கம்பெனி போய் பேசுவோம் என்று அதே மாடியில் அருண்
அறையில் ராஜாவையும் இருக்க சொல்லிவிட்டு இருங்க பாஸ் வந்துருவாரு வெயிட் பண்ணுங்க
ரமேஷ்ட்ட பேசிடுவோம் சரிங்களா உள்ள ரூம்ல இருங்க ஒரு தம்பி கூட இருப்பாரு பேசிட்டு
இருங்க என்று கூற ராஜாவும் அந்த ரூமிற்குள் சென்றான்.
அழுது
கொண்டு இருந்த அருணை கண்டு ராஜா வருந்தினான் , சங்கடமாக ஏங்க அழுகாதிங்க எல்லாருக்கும் கஷ்டம்
தான் விடுங்க பாஸ் ஏன் இருட்டுல இருக்கேங்க வாங்க வெளிய லைட் வேற எரியலை என்று
அவரை சமாதான படுத்த அருணால் கட்டுபடுத்தமுடியாமல் தேம்புகிறான். கொஞ்ச கொஞ்சமாக
நிதானம் வந்த அருண் ராஜாவின் ஆறுதலில் கொஞ்சம் இளைப்பாறினான். இருட்டு அறையில்
இருந்த அவர்களுக்கு வேலையாள் ஒரவன் வந்து லைட்டை கழட்டி விட்டு புது லைட் போட
வெளிச்சம் வந்தது அறையில். அதுவரையில் நிதானமாக இருந்த ராஜா அருணை கண்டு
திடுக்கிட்டான்.நீ யாருபா ஏன் இங்க வந்துருக்க ?என்று ராஜா
கேட்க நடுக்கத்துடன் அருண் சொல்ல தொடங்குகிறான்.
பேருந்து
நிலையமே மாலை 6.30 என்பதால்
கூட்டம் மிக அதிகமாக தினறிக்கொண்டு இருந்தது. அந்த கூட்டத்திலும் வெளியூர் ஆட்களே
அதிகம் அதில் முதல் முறை அவைகளை காணும் வியப்பில் இறங்கி நண்பனுக்கு கால்
செய்கின்றான் குமார் அருகில் இன்னும் பதட்டத்துடன் நதியா. நண்பனிடம் கேட்டு விட்டு
நதியா நாம இந்த ஊர்ருல இருக்க வேணா கேரளா போய்டலாம் இல்லைனா கண்டிப்பா நம்ம
வீட்டுல இருந்து தேடி வருவானுங்க சரியா என்று கேட்க, நதியா,
வேண்டாம் ஒரு மாதம் இங்கே இருக்கலாம் இப்போ எங்க வேலை கேட்கிறது அதை
சொல்லு முதல என்று கேட்டாள். ப்ரெண்ட் அட்ரஸ் எஸ்.எம்.எஸ் பண்ணிருக்கான் வா
பக்கத்துல தான் போவோம் என்று சோழன் கன்சல்டன்சி வாசலில் நின்றனர். ஓரத்தில் நின்று
கொண்டு இருந்த பேருந்து ஆள்பிடிப்பு பார்ட்டி சார் வாங்க, அக்கா
வாங்க வேலைக்கா இதோ பாஸ் வந்திடுவாரு மேல போங்க என்று அதே ரூமிற்கு
அனுப்பிவிட்டான்.பின்னாடியே சோழன் கன்சல்டன்சி ஓனர் செல்வம் , வருவதை கண்டு ஆள்பிடிப்பு பார்ட்டி
"சார் சார் வாங்க லேட் ஆயிடுச்சு போல ரெம்ப நேரமா இருக்கேன்" என்று
வலிகிறான்,
அப்புறம் காசு வேணும்னா நாயி வாள
ஆடித்தான ஆவுனும் என்று கூறிக்கொண்டே செல்வம் அவர் அறை நோக்கி செல்ல சார் சார்
ஆளுகள பார்த்திடுங்க 2,
1,1 மொத்தம் நாலு பேரு சார் அதுல ஒரு ஆள் நம்ம ரமேஷ் ஊர் ஆளு
பார்த்துகோங்க என்றான் ஆள்பிடிப்பு பார்ட்டி. சரி சரி இருடா என்று 600 ரூபாயயை தந்து விட்டு , நாளைக்கு சனிகிழமை ஆள் நிறைய
வரணும் பார்த்துக்கோ என்று கூறினார் செல்வம். தலையை ஆட்டிக்கொண்டே உத்தரவு வாங்கி
கொண்டான்.
"மணி ஏழாச்சு நம்ம ரமேஷ் ஊர்காரன் மேல இருக்கானாமுல அவன வர சொல்லுயா"
என்று செல்வம் கூற , ராஜா வந்து நின்றான் சார் நான் தான்
ரமேஷ் ப்ரெண்ட் ஒரே ஊர் என்று கூற நல்லதுபா என்ன வேலை அனுபவம் ???
பெரிய
ட்ராக்டர் ஓட்டுவேன் சார்
சரி
அப்போ லாரில கிளினரா போபா மாசம் 3500
டு 4000 வரும்
சரிங்க
சார் ஒரு சின்ன ????
என்னபா
சொல்லு ??
இல்லைங்க
சார் மேல ஒருத்தர் என்கூட இப்போ இருந்தார் அவரையும் என் கூட வேலைக்கு அனுப்புங்க
சார் தப்பா நினைக்காதிங்க அவரு ஏன் தம்பி போல என்றான் ராஜா
ஏன்பா
நானே ரமேஷ் ஊர்காரனு தான் நல்ல வேலையா உனக்கு தரேன் அதவிட்டு இப்படி அதிகபிரசங்கி
தனமா பேசகூடாது கிளம்பு வண்டிக்கு விட சொல்லுறேன் போய் பைய எடுத்துட்டு வா என்று
கறாராக சொல்லி விட்டார் செல்வம்.
மேலே
சென்று அருணிடம் என்ன சொல்லுவது என்று தவித்து விட்டு அருண் நீ பார்த்துக்கோ பா
என்ன மன்னிச்சிடு என்று கூற ராஜாவையும் அருணையும் அந்த குமார் -நதியா ஏதோ
வியப்புடன் கண்டனர். தன்னுடைய பையை எடுத்து கொண்டு கிளம்பும் போது ராஜா குமாரிடம்
அண்ணன் கொஞ்சம் வெளிய வாங்களேன் என்று கூற அவரும் நதியாவிடம் சொல்லிவிட்டு
வெளியில் வந்து ராஜா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அவனுக்கு நல்லவிதமா
எடுத்து சொல்லுங்க விட்டுறாதீங்க அண்ணே என்று சொல்லிவிட்டு சென்றான் ராஜா.
குமார்
வந்து நதியாவிடம் அனைத்தையும் கூறிவிட அவளும் அருணை பரிதாபமாக பார்த்து தம்பி இங்க
எப்படி வந்த ?? அதுவும் ஸ்கூல்
பேக் கூட ? எத்தனவுது படிக்குற ? என்று
அவள் என்ன கேட்டாலும் பதில் கூறாமல் மீண்டும் இறுக்கம் அவனை சூழ்ந்து கொள்ள. அவன்
பேக்கை குமார் எடுத்து பார்க்கின்றான் நதியாவும் தான் அப்பொழுது முடிந்துருந்த
எக்ஸாம் பேபெர்ஸ் மார்க் எல்லாம் 75 , 80 ,85 னு இருக்கு ,
புக்ஸ் எல்லாம் பார்த்துட்டு தம்பி 10த்
படிக்குற அதுவும் எல்லா சப்ஜெட்லையும் நல்ல மார்க் ஏன் பா வீட்ல திட்டுனாங்கள
என்று அவனிடம் அன்பாக கேட்டனர். அவன் கலங்கி கொண்டே சொல்ல தொடங்கினான்.
இல்லைங்க
நான் நல்லா தான் படிப்பேன் மார்க் கூட நல்லா தான் எடுப்பேன் ஆனா என்ன இன்னு படி
படினு எப்போ பார்த்தாலும் டார்ச்சர் முடியலைங்க , டியுஷியன் பீஸ் தராம வீட்ல நானு நாலு மாசம் போகல
போறேன் சொல்லிடு வெளில சுத்திட்டு இருந்தேன் , எங்க சார்க்கு
தெரிஞ்சி என்னை கூப்பிட்டு ஒன்னு சொல்ல மாட்டேன் நீ வானு சொல்லிடாரு நானு போயிட்டேன் ரெண்டு நாலு ஆனா எங்க அப்பாவ இன்னைக்கு வர சொல்லி இருக்காங்க அதன் என்ன பண்றதுன்னு தெரியல எங்க வீட்ல இது போல தெரிஞ்சா என்ன கொன்னே போற்றுவாங்க என்று அருண் அழ ஆரம்பித்துவிட்டான்.
குமார்
திடுக்கிட்டு டேய் தம்பி இதுலாம் ஒரு விஷயம்னு இங்கயா வருவா என்று அவனை கரிச்சு
கொட்ட அவன் மேலும் பயந்து அழ ஆரம்பித்தான் . நதியா அவனிடம் அழாத அருண் ஒன்னு இல்லை
நீ வீட்டுக்கு போ ஒன்னு சொல்ல மாட்டங்க என்று அவள் அவனை மற்ற முயற்சிக்க
முயல்கிறாள். குமாரும் இதுலாம் மோசமான இடம்பா நாங்களே வேற வலி இல்லமா வீட்ட
பகைச்சிட்டு வந்து இருக்கோம். நல்ல பையன் நீ நல்ல படிச்சு பெரிய ஆளா வாப்பா அப்பா
அம்மாவ ஒரு நிமிஷம் நினைச்சி பாரு இப்போ மணி 8 இன்னும் நீ வரலைன்னு வீட்ல தேட ஆரம்பிச்சுருபாங்க இல்லையா ....!!! என்றவுடன் அருண்
சொல்வது அறியாமல் அவர்கள் மடியில் விழுந்தான். யாரோ வருவது தெரிந்து மூவரும்
பிரிந்து உட்கார அருண் தன் முகத்தை சாட்டையால் துடைத்து கொள்ளுகிறான்.
கதவை
தட்டி செல்வம், ஏன்பா எவ்ளோ நேரம்
கூபிடுறோம் வர மாட்டீங்களா ??? என்று உடன் வந்த ஒருவரை
கூப்பிடு அந்த பையன் தான்பா வேணுமா என்று அருணை நோக்கி கேட்க,
அருணோ
குமாரையும்-நதியாவையும் பார்க்கிறான் ,
குமார் தலையை ஆட்ட அருணும் ஏதோ புரிந்தது போல தலை குனிந்து இருந்து
விட்டான்.
என்ன
செல்வம் ரொம்ப சின்ன பயலா இருக்கான் என்று வந்தவர் கேட்க அதெல்லாம் எல்லா வேலையும்
செய்வான் என்றார் செல்வம். பின்னர் இருவரும் சென்று விட்டனர். போகும் போது
குமாரையும் -நதியாவையும் வர சொல்லி விட்டு செல்வம் போக , அருண் பதட்டம்
அடைய தொடங்கிவிட்டான் மணி இப்பொழுது இரவு 9.30.
அருணை
சமாதானபடுத்தி விட்டு இருவரும் கீழே சென்றனர் , அவர்களின் விவரங்களை கேட்டு அவர்களுக்கு
ஸ்பின்னிங் மில்லில் இருவருக்கும் வேலை ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரும்
தங்குமிடம் செல்ல புறப்பட தயாராயினர். அருணிடம் வந்து இதை கூற அவன் மேலும் பதட்டம்
அடைய அவனுக்கு ஆறுதல் கூறினார்.
எந்த
வேலைக்கு போகலை வீட்டுக்கு போறேன் சொல்லு தைரியமா சொல்லு என்று கூறிவிட்டு அவன்
புக்கில் செல் நம்பரை எழுதி எதாச்சுனா கூப்பிடு என்று குமார் சொல்ல நதியாவும்
அவனுக்கு என்ன கூறுவது என்று தெரியாமல் தவித்தல். இருவரும் கிளம்புகையில் வெளியில்
சென்று விட்டு ஏதோ நினைத்தவளாய் மீண்டும் அருணிடம் வந்து அவன் நெற்றியில் நேற்றைய
கோயில் பிரசாதம் திருநீரை வைத்து அவனுக்கு நம்பிக்கை தந்து கிளம்பினால்.
இருவரும்
குமார் -நதியா கிளம்பும் போது முடிவு செய்து செல்வம் அவர்களை கண்டு அருணை பற்றிய
அனைத்தையும் கூறி அவனை ஊருக்கு அனுப்பிவிடுங்கள் என்று கெஞ்சி உள்ளனர் , அதை
பொருட்படுத்தாத செல்வம் அவர்களை அனுப்பிவிட்டு. அருணுக்கு சாப்பாடு வங்கி தர
சொல்லிவிட்டு அருணிடம் தம்பி நாளைக்கு காலைல அந்த ஆளு வருவாரு அவரோட லாரில கிளினரா
போகணும் தூங்குபா என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
அருணோ
என்ன செய்வது என்று புரியாமால் செய்த தவறை உணர்ந்து எப்படி போறது ஊருக்கு என்று
யோசித்தே தூங்காமல் விழித்து இருந்தான்,
பின் நாளை காலை இவரிடம் சொல்லிவிட்டு குமார் அண்ணனிடம் காசு
வாங்கிட்டு ஊருக்கு போவது என்று முடிவோடு படுத்தவன் மணியய் பார்த்தான் 2.30
இரவு , அந்த நேரம் யாரோ மேல வருவது போல
இருந்ததும் துங்குவது போல நடிக்க வந்தவன் அருணின் பேக்கை எடுத்து கொண்டு போக
செய்வது அறியாமல் திகைத்தான் அதில் மூணு புக் ரெண்டு நோட் பேபெர்ஸ் அவ்ளோதான்
இருக்குற 15ரூபாயும் எண்ட இருக்கு விடு என்றவாறு யார்
அவர்கள் என்று யோசித்து கொண்டே தூங்கிவிட்டான் அருண்.
காலையில்
6 மணிக்கு அருணை
எழுப்புகின்றனர் அழைத்து கீழே செல்வம் அவர்களின் அறைக்கு வந்தவுடன் அங்கே அவனின்
பேக் இருப்பதை பார்த்து பதட்டம் அடைந்தான்.
செல்வம்
அருணிடம், ஏண்டா கண்ணு கேரளா
போறதான ???
சார்
வேணாம் தெரியாம வந்துட்டேன் வீட்டுக்கு போய்டுறேன் என்று தைரியமாக கூறிவிட்டான்.
செல்வமோ
இவ்ளோ தூரம் வந்த நீ எப்படி வீட்டுக்கு போவணு நம்புறது வேற எங்கயாச்சும் போய்டனா
அதுக்கு நீ இங்கயே வேலைக்கு போகலாம்ல என்று அவனை கேட்க.
அருணும்
இல்லை சார் ப்ளீஸ் நான் சத்தியமா ஊருக்கு தான் போவேன் என்று உறுதியாக கூற செல்வம்
அருணை கட்டிபிடித்து
ஏன்பா
இப்படிலாம் வர கூடாது உன் மார்க்லாம் பார்த்தேன் பெரிய ஆளா வா என்று அவர் கூற
அருணுக்கு ஆனந்ததில் கண்ணீரே வந்தது மீண்டும்.
இவனிடம்
காசில்லை என்பதையும் தெரிந்து பேருந்து நிலையம் வந்து கும்பகோணம் நேரடி பேருந்தில்
டிக்கெட் எடுத்து கொடுத்து ,
மேலும் 20 ரூபாய் கொடுத்து அருண் வழி அனுப்பி
வைக்கப்பட்டான்.
பேருந்தில்
வந்து கொண்டு இருந்த அவனுக்கு வீட்டில் நிச்சயம் என்ன சொன்னாலும் தைரியமாக பேச
வேண்டும் என்று நினைத்துகொண்டு. குமார் -நதியா , ராஜா, செல்வம் இவர்கள் தானே என்னிடம் அப்படி கருணை
காட்டினார்கள் ஏன் ?
அவர்கள் யார் ? ச்ச குமார் அண்ணனுக்கு போன்
பண்ணி சொல்லலியே என்று வருத்தமும் , பரவசமும் ஒன்றாக
சேர்ந்து நம்பிக்கையுடன் புது மனிதனாய் ஊருக்கு சென்று கொண்டு இருந்தான் அருண்.