போட்டிச்சிறுகதை-(TISI)(தி.மு.ச.இ)
1
நான் ஆரவன்(ARAVAN).இன்னும் சிறிது நேரத்தில் என்னை கொன்று விடுவார்கள்.
கொல்லப்போவது நம் இந்திய அரசாங்கத்தின் ரகசிய துறை..யாரும் ஏன் எதற்கு என்று
கேள்வியே கேக்காத துறை. நம் இந்திய ஜனநாயகம் என்று உங்களுக்கு தெரிந்தவை வேறு.இந்த துறை வேறு. வெளியில் யாருக்குமே தெரியாத அரசாங்க துறை.
இந்த ஆவணத்தை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள்--எனக்கும் என்பின்னால் என்னை
ஆதரித்துக்கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் பொது
மக்களுடன்--கைகோப்பீர்கள் எனில் மேற்கொண்டு படிக்கவும்.முக்கியமாக எங்கள்
இயக்கத்திருக்கு ஆதரவு கொடுப்பீர்கள் எனில்.........
-----------------------------------------------------------------------------------------------------------------------------
2
நான் அவளை என் பதின் பருவத்தில்
சந்தித்திருக்க கூடாது.அவள் அருணா(ARUNA). நான்ஆரவன்.பேருக்கு தகுந்தால் போல்
அமைதியானவன்.அருணா-THE SUN. பத்தாம்
வகுப்பு முடித்து இருவரின் தந்தையின் மாறுதலினால் இருவரும் 11 வகுப்பில் ஒரே
பள்ளியில் சேர்ந்தோம். ஆங்கில அகர வரிசைப்படி இருவரும் வகுப்பில் அருகருகே
அமரவைக்கபட்டோம்.என் வாழ்நாள் லட்சியம்
இந்திய ராணுவத்தில் பொறுப்புள்ள அதிகாரியாக,இந்தியாவை தலைநிமிர வைக்கவேண்டும் என்பதே..அருணாவின் ஆசை என்னை
ஒத்து இருந்தாலும்—இந்தியாவிற்கு திட்டங்கள் வகுத்துகொடுத்து
உலக அளவில் இந்தியாவிற்கு பேர் வாங்கித்தரவேண்டும் என்பதே.
இருவரின் எண்ணங்கள் ஒத்து போனதாலும் படிப்பில் இருவருமே போட்டி போட்டுக்கொண்டு
படித்ததாலும், இயல்பாகவே எங்களுக்குள் மனதளவில் ஈர்ப்பு
வந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
3
”டேய் ஏண்டா?
எப்ப நாம சந்தித்தாலும்,நினைவுக்காக எதையாவது
எடுத்துக்கிட்டு போற?-இந்த இடத்தின் மண்,பூ,செடி,என் முடி,பொட்டு,நூல் இழை,--பைத்தியமாடா
நீ?”
“இல்லை.அருணா,நம் காதலை இனி இந்த உலகம்
அழிந்தாலும் எப்ப யார் வந்து அகழ்வாராயிச்சி பண்ணாலும்,நம்ம
சேகரிப்பு மட்டுமாவது அவங்களுக்கு காதலை புரியவைக்கட்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
4
அருநாவன்—இந்த பிறப்பு
நான் எடுத்திருக்க கூடாது.எங்கேயோ யாரோ என் மூதாதையர் செய்த தவறுக்கு இன்று நான்
பலிகடா.நான் மட்டுமா? என்னை போல் இந்தியாவில் பல லட்சம் பேர்,எனக்குள் எவ்வளவு கனவு?எவ்வளவு லட்சியம்?நான் எப்போதோ இறந்திருக்ககூடாதா?நான் மட்டுமா?
என்னைப்போல் உள்ளவர்கள் அனுதினமும் நினைக்கும் சொல்லாடல் இது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
5
ஆரவன்--இப்போது எல்லாம் அருணா என்னிடம்
சரியாக பேசுவதில்லை. நானாக போய் பேசினாலும் என்னை விட்டு விலகியே போகிறாள்.”ஏன் அருணா ஏன்?.இந்த
உலகமே உன்னை தவறாக நினைத்தாலும்,நான் உன்னை ஏதும்
நினைக்கமாட்டேன் அருணா.இந்த பிரபஞ்சம் உள்ள வரை நம் காதல் வாழும் அருணா.”
-----------------------------------------------------------------------------------------------------------------------------
6
அருநாவன்—என் லட்சியத்தில் நான் எங்குமே சமரசம் செய்து
கொள்ளவில்லை.கொள்ளவும் மாட்டேன்.இதோ இந்திய அரசின் அனைத்து வேலைவாய்ப்பு
தேர்வுகளில் நான் பங்கெடுத்துகொண்டிருக்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
7
அருணா—“டேய் ஆரா வேண்டாம்டா.என்னை
மறந்துடு.எனக்கு என் லட்சியம்தான் முக்கியம்.அதே போல் உனக்கு உன் லட்சியம்தான்
முக்கியம்.இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது.நீ விரைவில்
ராணுவத்தில் முக்கிய இடத்தில் செரபோகிறாய் என்று என் உள் மனது சொல்லுகிறது. நாம்
அதை நோக்கி பயணிப்போம்”..இனி நம் சந்திப்பு என்பது கனவிலும்
நடக்க வேண்டாம்.....
___________________________________________________________________________
8
ஆரவன்—என் பிறப்பின் அடையாளத்தை உண்டு பண்ணிவிட்டேன்.இனி
நானும் இந்திய அரசாங்கத்தின் வெளியில் சொல்ல முடியாத அங்கத்தில் முக்கிய
புள்ளி.ஆனால் அருணாதொடர்பில் என்னை விட்டு முற்றிலுமாக விலகிவிட்டாள்.எங்க போய்விட போகிறாள்.நான்
சொடக்கு போட்டு ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்துவிடமாட்டேனா?
எங்கெங்கும் அருணாவின் புகைப்படம்,சான்றிதழ்கள் அனைத்தும்
வைத்து தேடி விட்டேன். இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை—எப்படி
அவள் என்னிடம் இருந்து காணாமல் போனாள்..???
----------------------------------------------------------------------------------------------------------------------------
9
ஆரவன்--எங்க,எப்படி,இவர்கள்
ஒன்று திரண்டார்கள்?இந்தியா முழுவதும் இவர்களுக்கு ஆதரவு
கோஷம்.போதாதற்கு அனைத்து மீடியா ஆதரவு வேறு. இந்தியா முழுவதும் மிகபெரிய ஆதரவு
அலை-இவர்களுக்கு. இவர்களின் காரணகர்த்தா யார்? எப்படி
இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள்? இந்திய அரசு என்னை
விசாரணைக்காக நியமித்தது.! ((பல விசாரணைகளில் ரகசிய விருது பெற்றவன் அல்லவா))
ஆராய்ந்தேன்..மேலும் ஆராய்ந்தேன்....
என் வேலையை ராஜினாமா செய்தேன்.அவர்களுடன் கை கோர்த்தேன்.
இந்திய அரசியல் சட்டத்தையே பிரட்டிபோடும் நிகழ்வு அது.!!!
இப்போது இந்திய சட்டத்தின், அனைத்து சந்துபொந்துகளிலும்,
அரசியல்வாதிகள்,ஆண்மைவாதிகள், பெண்மைவாதிகள்--வாதத்தில் கண்ணில் விரலை விட்டு ஆட்ட,என்னாலும்---உச்ச நீதிமன்றம்—ஒரு முடிவுக்கு வரும் நிலையில்......
-----------------------------------------------------------------------------------------------------------------------------
10
அருநாவன்—-நாங்கள்
என்ன பாவம் செய்தோம்?.ஏன் நாங்கள்
குடிமுறை அரசு பணிகளில்(civil service) பங்கேற்ககூடாதா?
எங்களுக்கும் இரண்டாக இருக்க வேண்டியது அனைத்தும் இருக்கிறது.,.ஒன்னே ஒன்னாக இருக்கவேண்டியதும் அதே போல் இருக்கிறது....ஏன் எங்களுக்கு
முடிவு எடுக்க தெரியாதா?
நாங்களும் மனிதர்கள்தானே?
-----------------------------------------------------------------------------------------------------------------------------
11
ஆரவன்—நான் ஒன்றிணைந்த ஆதிக்க சக்தியால்,,இருட்டு அறைக்கு கொண்டு
செல்லப்பட்டேன். எத்தனை நாள் ஆச்சோ? இங்கு வந்து?
நினைவு திரும்பும் இந்நேரம்---இப்போது இந்த கதையின் முதல் பாரா.....
நான் ஆரவன்(ARAVAN).இன்னும் சிறிது நேரத்தில் என்னை கொன்று விடுவார்கள்.
கொல்லப்போவது நம் இந்திய அரசாங்கத்தின் ரகசிய துறை..யாரும் ஏன் எதற்கு என்று
கேள்வியே கேக்காத துறை.நம் இந்திய ஜனநாயகம் என்று உங்களுக்கு தெரிந்தவைவேறு. இந்த துறை வேறு. வெளியில் யாருக்குமே தெரியாத அரசாங்க துறை.இந்த ஆவணத்தை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள்--எனக்கும்
என்பின்னால் என்னை ஆதரித்துக்கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை
வைத்திருக்கும் பொது மக்களுடன்--கைகோப்பீர்கள் எனில் மேற்கொண்டு
படிக்கவும்.முக்கியமாக எங்கள் இயக்கத்திருக்கு ஆதரவு கொடுப்பீர்கள் எனில்.........
-----------------------------------------------------------------------------------------------------------------------------
12
அருநாவன்--எங்கே
போனான் ஆரவன்? —-(C/O—T.I.S.INDIA---) என் உயிரிலும் மேலான ஆரவன்?
அருணா+ஆரவன்=அருநாவன்???( Transgender)
(TRANSGENDER IMPROVEMENT SOCITY OF INDIA)
(TISI)