சிறுகதை-நாவல் சிறுகதையானது பின் நாவலாகும்
பனிபொழியும் அதிகாலை நேரம்
உன் முகம் பார்க்க சூரியனும்
எட்டி எட்டிப் பார்க்கும்
உன் வீட்டு ஜன்னல் ஓரத்தில்...
நீ சோம்பல் முறிக்கும்
அழகை பார்த்து சூரியனும்
தலை சுற்றி தான்
மேகத்தினுள் புதைந்து போகும்...
சிரித்து கொண்டே கார்த்திக்கை பார்த்து போ படிக்க
மாட்டேன் என்று சிணுங்குகிறாள் சந்தியா. ஹே என்ன ரெண்டு வரி படிச்சுட்டு
அதுக்குள்ள வெட்கபடுற முழுசா படிடா என் செல்லம்ல என்று அவளின் கன்னத்தை
தட்டுகிறான் அவளும் படிக்க தொடங்குகிறாள் மனதுக்குள்ளேயே.
நீ போடும் கோலம் கூட
கலைந்து கலைந்து நீண்டு கொண்டே
போகும் இன்னும் கொஞ்ச நேரம்
நீ கோலமிட மாட்டாயா என்று ....
(அவள் படித்து உதிர்க்கும் உதடுகளின் சிரிப்பின் வெடிப்பை கார்த்திக் அளக்கின்றான் )
நீ போட்ட கோலம் கூட
உனக்கு நன்றி சொல்லி
சிரிக்கும் முடிவில்
நீ வைக்கும் பூவில் ...
உன் குளியல் அறை
கண்ணாடி உன்னை
பார்த்து பார்த்து
விரிசல் விடுவது
உனக்கு புரியவில்லை
போல நீயும்...
அதை மாற்றி கொண்டிருப்பதை
விடுத்து அதை தூக்கி விடு ....!
இந்த வரியை படித்து முடித்தவுடன் அவளால் நாணம் கொள்ள
முடியாமல் ச்சீ போடா என்னால படிக்க முடியலை என்று சிரித்து கொண்டே அவனை
அடிக்கிறாள் அவனும் அவளின் அன்பை ஏற்று கொண்டே அவளை மேல் படிக்க சொல்லுகிறான் , வெளியில் நடித்தாலும் அவளுக்கும் அடுத்து என்ன எழுதி உள்ளான் என்று படிக்க
ஆவல் தான் அதனால் தொடர்கிறாள்.
உன் அறையில்
உள்ள கண்ணாடியோ
நீ உடை மாற்றுவதை
பார்த்து பார்த்து விரிசல் விடுகிறது ...
உன் வீட்டில் இருக்கும்
கண்ணாடிகள் அனைத்தும்
பிறவி பலன் அடைகின்றது ....
( படித்து கொண்டே சிரித்து கொண்டே
நாக்கை கடித்து கொண்டே கார்த்தியை பார்வையாலே விழுங்கிவிட்டால் சந்தியா.)
நீ சாலையில் நடந்து
செல்லும் பொது
உன்னை ரசிக்க
ஒரு கூட்டம் என்றல்...
உன் நிழலை ரசிக்கவும்
ஒரு கூட்டம்
பின் தொடர்கின்றது ....
உன்னை தொட்டு செல்லும்
தென்றல் கூட மற்றவரை
தீண்டும் போது
அளவில்லா சூடுடன்
இருகின்றது ...
இவையனைத்தும் கடந்து
நீ பேருந்தில் ஏறினால்
அதுவரை மாநகர பேருந்து
கூட அழகு பேருந்தாகிறது....
நீ உன் கல்லூரியில்
இறங்கி செல்லும் போது
உன்னை பின்தொடரும்
கூட்டத்தில் ஒரு சலசலப்பு
நீ யாரை பார்த்தாய் என்று ...?
நீ உடை சரி செய்யும்
ஒவ்வருமுறையும்
மற்றவர்களும் அதை
மறந்து உன்னை போல்
செய்து பார்க்கிறார்களே ...அய்யகோ ?
இப்படி உன்னால்
பலர் பித்து பிடித்து அலைய
நீயோ ....!
எந்தஒரு
வியப்பும் இல்லாமல்
வருகிறாய் போகிறாயே...!
என் தேவதையே ....
படித்து முடித்தவுடன் என்னவென்று நினைப்பதற்குள்
கார்த்திக்கை இறுக்கி அனைத்து கொண்டால் சந்தியா. அவனும் கொஞ்சம் திமிறி தான் அவளை
அனைத்து கொண்டு இது தான் உனக்கு நான் தந்த பிறந்தநாள் பரிசு என்று கூறினான்.
எனக்கு நீ போதும்டா நீ மட்டும் போதும் என் லைப் நல்லா இருக்கும் என்று கூறும் போதே
ஆனந்த கண்ணீரோடு அதை துடைக்க அவன் மார்பில் புதைந்தாள் சந்தியா.
கார்த்திக்கும் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை
சகஜநிலைக்கு கொண்டு வந்தான். அவளும் அவனிடம் சரி நான் கிளம்புறேன் வீட்டுக்கு
நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே கிளம்ப ஆயத்தமாகிறாள். கார்த்திக்கும்
சரி வா நானே ட்ராப் பண்றேன் வீட்ல மாமாவையும் அத்தையையும் பார்த்துட்டு வந்தது போல
இருக்கும் என்று கூற அவளும் அவனை சிரித்து கொண்டே வா போலாம் என்று அவன் வண்டியில்
ஏறியதும் இவளும் ஏறுகிறாள்.
****************************
கார்த்திக் தன்னுடைய காதலை எவ்வாறு நந்தினியிடம் தெரிவிப்பது என்று கடந்த ஆறு மாதகாலமாக தடுமாறி கொண்டே இருக்கின்றான்.அவளோ இவனை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை அது மட்டும் இல்லாமல் 11ஆம் வகுப்பு படிக்கையில் ஒரு பெண் காதலிக்க வேண்டும் என்று அவசியமும்
இல்லை பாவம் ஆண்கள் தான் இப்பொழுதெல்லாம் 8ஆம் வகுப்பிலேயே
காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அப்புறம் காதலுக்கு கண் இல்லை என்பது போல
வயசும் இல்லை தானே என்று பலதரப்பட்ட இரண்டாம் தர காதல் தமிழ்
சினிமாக்களை கண்டு இவனே இவனுக்குள் அவள் தன்னை காதலிக்க வேண்டும் என்று முடிவு
செய்தே தான் காதலிக்க தொடங்கினான் ஆறு மதங்களுக்கு முன்னே. கார்த்திக்கு இன்றும்
ஞாபகம் உள்ளது அவளை கண்ட முதல் நாள் ஜூலை 5 2004
அவனால் யுகம் தாண்டினாலும் அதை மறக்க முடியாது. அன்று இவன் மனதில்
ஊற்று எடுத்த வேகம் நாள் ஆக ஆக வீரியம் கொண்டு இவனை காதலில் மூழ்கவைத்தது.
ஒரு தலை காதல் ஆண்களுக்கு கடவுள் கொடுத்த வரம் , ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் அனுபவிக்க வேண்டியது. காதல் என்ற வார்த்தையின்
உண்மையான அர்த்தம் அன்பின் ப்ரியம் எல்லாமும் மொத்தமாக நம்மை ஆட்கொள்ளும் காலம்
அது. இன்பம் , துன்பம் , துக்கம் ,
வேதனை , பசி , தூக்கம்
என்று எதுவும் தெரியாமல் எந்தஒரு நிகழ்வையும் நம் காதலியை இணைத்தே பொருள் கொள்ள
தூண்டும் காலமது. கார்த்திக்கும் எப்பொழுதும் நந்தினி நினைவில் அவளுக்காக ஏங்கியும் அவளுக்காக காத்திருந்தும் அவளுக்காகவே பிறந்ததும் போலவே
உணர்ந்தான். இரண்டு மணிநேரம் நந்தினிக்காக காத்திருப்பான் அவள் டியூஷன் முடித்து வருவாள் சைக்கிளில் ஒரு நொடியில் இவனை கடந்து போய்விடுவாள்.இவனோ அந்த ஒரு நொடி ஏதோ ஒரு யுக வாழ்க்கை வாழ்ந்தது போல பூரிப்பு அடைவான்.
நந்தினி சைக்கிளில் முன்னே சென்று கொண்டு இருப்பாள்
இவனோ அவள் பின்னே அவளை தொடர்ந்து கொண்டே போவான் ஒரு சில நாட்களில் அது இவனுக்கு
சங்கோஜமாக இருக்க சிறிது நேரம் பின் தொடர்ந்து விட்டு சாடார் என்று வேகாமாக அவளை
முந்தி செல்லும் போது திரும்பி நந்தினி கண்களை பார்ப்பான் அவளும் பார்ப்பாள்
இவனிடம் காதல் கட்டுகடங்காமல் இருந்தது அவளிடம் இவனை பற்றிய எண்ணம் கீழ்தரமாகிக்
கொண்டே போனது.
இப்படி தனியாய் காதலில் வாழ்ந்து கொண்டு தன் 12ஆம் வகுப்பின் படிப்பை தாரைவார்த்து கொண்டு இருந்தான் கார்த்திக். அவளோ
இவனை பற்றி அவள் வீட்டில் சொல்லிவிட. அவள் வீட்டிலிருந்து பள்ளிக்கு
படையெடுத்தார்கள். வழக்கம் போல அன்றும் அவளுக்காக அவள் வகுப்பு வெளியே அவளை
தேடிக்கொண்டு இருந்தான் அவளோ தன் அம்மாவுடன் பள்ளிக்கு வெளியில் இருந்து உள்ளே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நண்பன் கூறியவுடன் பயத்தின் உச்சிக்கே சென்று விட்டான். இதுவரை அவளுடன் ஒரு
வார்த்தை பேசியது இல்லை அவளை பற்றி எங்கும் தவறாக பேசியது இல்லை அவளுக்காக
காத்துகொண்டு மட்டுமே இருப்பான் ஒரு நொடி பார்வைக்காக , சற்று அவளை மிதிவண்டியில் பின்
தொடர்வான் அதுவும் அவள் பெயர் கேட்டுவிடக்கூடாது என்று அதை விட்டு அவளை
முந்திசெல்லுவதை வைத்துகொண்டான்.
ஆனால் அவளோ இவனை பற்றி என்ன சொன்னாலோ பள்ளி தலைமை
ஆசிரியரிடம் இருந்து வந்தது அழைப்பு கார்த்திக்கு, சென்றவன் அவளின் அம்மா
காட்டிய ஆக்ரோஷத்தில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான் " டேய் உனக்குலாம்
வெட்கமாவே இல்லையா ஒரு படிக்கிற பொண்ண இப்படியா டார்ச்சர் பண்ணுவ , உன் தங்கச்சிய பாலோ பண்ண வேண்டியது தானே இத்யாதி இத்யாதி " என்ன
கூறுவது என்று தெரியாமல் விழித்தவன் பள்ளியில் அவனுக்கு என்று நல்ல பெயர் இருந்தது
அதனால் அவனின் வார்த்தைக்கும் செவி கொடுக்கப்பட்டது.
"'சார் என் ஊருக்கு போற வழி அது
தான் இவுங்க என்ன தப்பா நினைச்சிட்டு பேசுறாங்கா "
"பொய் சொல்றான் சார் இவன் தினமும்
என் பொண்ணு பின்னாடி தான் போவானா செருப்பாலயே அடிப்பேன் டா "
"சார் ப்ளீஸ் நம்புங்க என் மேல
எந்த தப்பும் இல்லை "
இதை அனைத்தையும் அவளும் கண்டு கொண்டு தான்
இருக்கின்றாள்.ஒரு முடிவாக இனி இது போல் நடக்காது என்று தலைமை ஆசிரியர்
அவர்களுக்கு உறுதி அளித்தார். அவர்களும் அதை ஏற்று அவனை முறைத்துவிட்டு எச்சரித்து
விட்டு சென்று விட்டனர். அவர்கள் சென்றபின் கார்த்திக்கின் அப்பாவை அழைத்துவருமாறு கூறுகின்றனர் அவனோ இடி விழுந்தவன் போல அப்படியே உறைந்து போனான். பின்
சுத்தாரித்து கொண்டு கெஞ்சி கூத்தாடி எங்க அப்பா இங்கே வந்தால் எனக்கு சாவை தவிர
வேறு ஒன்றும் இல்லை என்றே கதறினான். அதை கண்ட அவர்களும் ஒரு வாய்ப்பு தந்தனர்
அவனுக்கு.
அடுத்தநாள் பள்ளிக்கு வரும் பொழுது புது நோட்
வாங்கினான் அதில் அவன் முதல் பக்கத்தில் எழுதியது,
"நீ இல்லாமல்
என்னால் நினைத்து கூட
பார்க்க முடியவில்லை
அந்த அழகு கற்பனை
தேவதை எப்படி தான்
இருப்பாள் என்று ...?
விளைவுகள் என்ன என்ன
வரும் உன் அழகை ரசித்தால்
என்று தெரிந்து தான் என்
உறக்கத்தை துளைக்கின்றேன் ...!
அழகை ரசிக்க ஆரம்பித்தால்
கவிதை திருட தோன்றும்
கவிதை திருட தோன்றினால்
உன்னை ஒப்பிட தோன்றும்
உன்னை ஒப்பிட்டு பார்த்தல்
கவிதையை திருத்த தோன்றும்
கவிதையை திருத்தி பார்த்தல்
உன்னால் ஒரு கவிதை தோன்றும்
என்று உன்னாலே நானும் எழுதுகிறேன்"
"நித்தமும் நிதர்சனமும் நந்தினியே
"
*****************************
இன்னும் சரியாக இரண்டு மாதமே உள்ளது கார்த்திக்-சந்தியா திருமணத்திற்கு அதுவும் 2014 காதலர் தினம் அன்று. இந்நாளை இவர்களே மிகவும் விருப்பபட்டு தேர்வு
செய்தனர் நம்முடைய திருமணம் நடைபெறும் நாளில் உலகில் அன்பின் பரவசம் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓட வேண்டும் என்று நினைத்தே முகூர்த்த நாளும் வந்து அமைய இதையே பிடித்து விட்டனர். இருவீட்டாரின் சம்மதத்தோடு காதல் திருமணம் நடைபெற போகின்றது.
சந்தியா எப்பொழுதும் கார்த்திக்கை விட்டு
கொடுக்கமாட்டாள் அவன் தான் அவளுக்கு உலகம். இப்படி ஒரு காதலன் கிடைக்க மிகவும்
கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று அவளுக்கே அவள் மேல் ஒரு கர்வம் இருந்தது.
சந்தியா கார்த்திக்கை அழைக்க வேண்டும் என்று நினைத்தால், கார்த்திக் அவளை பார்க்க தான் வந்து கொண்டே இருப்பான் என்று இருவருக்கான எண்ணங்கள் ஒற்று போனதாலே, நல்ல காதல் திருமணம்
ஆக போகின்றது.
இதில் வேடிக்கை என்னவென்றால் கார்த்திக் தான் அவளை
துரத்தி துரத்தி காதலித்தான் அதுவும் ஆரம்ப காலத்தில் அவனை சந்தியா மிகவும் கஷ்டபடுத்தி
இருக்கிறாள். சந்தியாவின் கல்லூரி இருப்பது தஞ்சாவூர்-புதுகோட்டை சாலையில் ,கார்த்திக்கின் கல்லூரி இருப்பதோ திருச்சி -திண்டுக்கல் சாலையில் .ஆனால்
அவளின் மேல் உள்ள காதலினால் இவளை காண இரண்டு மாதம் ஒரு முறை சென்றுவிடுவான் ஆனால்
அவளை பார்போதோ இவனை கடக்கும் ஒரு நொடி. இப்படியாக அவளை நினைத்து நினைத்து
அவளுக்காகவே வாழ்ந்து வந்தான்.
இதில் இவனின் அனைத்து நண்பர்களும் இவனையும் இவனின்
காதலையும் மிகவும் மதித்து வந்தார்கள் அதிலும் சிலர் இவனை அவனின் காதல் கதை கேட்டு
இவனையும் பெருமிதம் கொள்ளவைப்பர். 6வருட ஒரு தலை காதல் இவன் கல்லூரி
முடித்தும் அவள் கல்லூரி முடித்தும். ஒரு தலையாக இருந்தவனுக்கு காலம் கனிந்து
வந்ததது சென்னையில் .
இவனும் சென்னையில் வேலை பார்த்துகொண்டு இருக்கும்
பொழுது அவள் கல்லூரி முடித்துவிட்டு அப்பொழுது தான் சென்னைக்கு வேலை தேடி
வருகிறாள். அவள் நேசிக்கவில்லை என்றாலும் அவளின் அனைத்து விஷயங்களையும் இவன் யார்
மூலமாகா தெரிந்து வைத்து கொண்டே இருந்தான். சென்னையில் சி.டி.எஸ் நேர்முகத்தேர்வு
எழுதி முடித்து விட்டு வெளியே வந்தவளுக்கு ஆச்சிரியம் கார்த்திக் நின்று கொண்டு
இருந்தது. இம்முறை ஒரு நொடி பார்வை நீண்டுகொண்டே போகின்றது அதுவும் சந்தியா
கார்த்திக்கை நோக்கி நடந்து வருகிறாள். இவன் நெஞ்சம் படபடப்பில் துடிக்கின்றது
கொள்ளுத்தும் வெயிலில் இவனுக்கு நடுங்குகிறது. அவள் நடந்து வர வர இவன் கண்ணை மூடி
ஒருமுறை யோசித்தான் இனியும் உள்ளுக்குள்ளே புதைத்து வைத்து இருக்க முடியாது,இப்பொழுதே முடிவு தெரிந்து தான் போகணும் என்று யோசித்து முடிப்பதற்குள்ளே
கேட்டது அவனுக்கு ,
"கார்த்திக்" ...
கண்களை திறகின்றான் கலங்கி கண்ணீர் வெளியில் வர ஆயத்தமாகின்றது.
"சென்னைக்கு நேத்து தான் வந்தேன்
வீட்டுக்கு போகணும் பயமா இருக்கு என் கூட துணைக்கு வரியா "
"எப்படி இருக்க சந்தியா"
"நீ எப்படி இருக்க ? எங்க வொர்க் பண்ற ? "
ஆட்டோவை மறித்து கொண்டு அதில் ஏறுகிறார்கள்
" வா போகலாம் வீடு எங்க வேளச்சேரி
தான"
" உனக்கு எப்படி தெரியும் "
"அதெல்லாம் தெரியும் நீ வா ,
சென்னைல தான் வொர்க் எல் & டி "
"நல்லா இருக்கேன் நீ எப்படி
இன்னும் அப்படியே இருக்க"
" எப்படி ??? "
" என்னைய பத்தி தெரிஞ்சிட்டே எங்க
போறேன் வரேன் என்ன பண்றேன்னு " (சிரித்துவிட்டாள்)
"என்னபன்னுனாலும் நீ தான் ஒன்னு
சொல்ல மாட்டேங்குற"
"கார்த்திக் நான் லவ் பண்ணிட்டு
இருக்கேன்"
" ...."
"எனக்கு வேலை கிடைச்சவுடன் அவன்ட
சொல்லபோறேன் வீட்ல கூட தெரியும் "
"......"
"வா வீட்டுக்குள்ள வா அம்மா
இருக்காங்க பார்த்துட்டு போ"
" இல்லை நீ பார்த்துக்க நான்
வரேன் "
"கார்த்திக் ஐ லவ் யு "
பற்களை கடித்துக்கொண்டு கண்கள் துடிக்கின்றது
அவனிற்கு திரும்பி அவளிடம்
"என்ன சந்தியா ?"
"ஐ லவ் யு டூ மச் " என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டால்.
அப்பொழுது அவனுக்கு தோன்றியதை அவன் டைரியில்
குறிப்பிட்டான் பின் வரும் எழுத்துகளால்,
"காதலை அவளும் உணர்ந்தால் என்னை
தன் உயிர் என்று நினைக்கிறாள் ....
அவளின்
அன்பை நேசித்தேன்...
சுவாசித்தேன்...
உணர்ந்தேன் ...
அனுபவித்தேன்...
நொடி பொழுது பல மணி பொழுதானது
அவள் இல்லாதபோது ....
பல மணி பொழுது நொடி பொழுதானது
அவளுடன் இருக்கும் பொழுது...
என் கவிதைகளை அவள் ரசிக்க
அவளை மிக மிக ரசித்தது என் கவிதைகள் ... "
************************************
எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் கார்த்திக் நந்தினியை
விடுவதாக இல்லை , தொடர்ந்து நேசித்தான் முன்னை விட மிகுதியாக. அவளை பின் தொடர்ந்தான் அவளுக்காக காத்துகொண்டு இருந்தான்
ஆனால் இம்முறை நந்தினியும் எதையும் கண்டுகொள்ளவில்லை மாறாக அவள் தோழிகள் அவளை
கிண்டல் செய்ய தொடங்கினர். கார்த்திக் அவளுக்காக காத்துகொண்டு இருக்கும் பொது அந்த
பெண்கள் கூட்டம் கடந்து செல்கையில் அத்தனை பெரும் நந்தினியை பார்த்து ஏதோ சொல்லி
சிரிக்க அவள் மட்டும் மௌனமாய் கடந்து செல்வாள். கார்த்திக் இதையும் ஒரு
முன்னேற்றமாக எடுத்து கொண்டே சென்றான்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு வேறு நெருங்கிக்கொண்டே
இருந்தது ,
"காதல்" திரைப்படம் வெளியான பொழுது அதை பார்த்துவிட்டு
மிகவும் உருகி போனான் வழக்கமான நம் தமிழ் கலாசார மாணவர்கள் போல அவனுள் இன்னும்
காதல் ஊறிப்போனது. அவளோ இவனை ஒரு தூசியாக கூட நினைக்காமல் கடந்து சென்று கொண்டே
இருந்தால். பள்ளியில் உள்ள பலருக்கு இந்த காதல் கதை தெரிய ஆரம்பித்தது. ஒரு
பெண்ணிடம் அவள் வீட்டில் சொல்லி இவனை பள்ளியில் எச்சரித்தும் மீண்டும் அவளை விடாமல் நேசிக்கும் அவன் யார் என்று பலர் தேடி வந்து
பார்பார்கள் கார்த்திக்கை ஆனால் அவனோ அவளின் நினைப்பில் தன்னை போல ஒருவன் பெண்ணை காதலிக்க முடியாது காதல் என்பது என்னிடம் வந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெருமிதத்தில் இருப்பன்.
ஒருமுறை நந்தினி பள்ளியில் நடைபெற்ற அறிவியல்
கண்காட்சியில் பங்கேற்று தான் வரைந்த படத்தை பின் கசக்கி தூக்கி எறிந்துவிட்டால்
(படுகேவலமாக இருந்தது என்று தோழிகள் கூறி இருப்பார்கள் போல) அதை கார்த்திக் எடுத்து தன்னுடைய இயற்பியல் ரெகார்ட் நோட்டிற்கு அட்டையாக போட்டுவிட்டான். அதை அவள் பார்க்க வேண்டும் என்றே தினமும் அதை எல்லோருக்கும் தெரிவது
போல எப்பொழுதும் எங்கும் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தான். அவள் டியூஷன்
7மணிக்கு முடியும் ஆனால் பள்ளி முடிவதோ மாலை நான்கு மணி வீட்டில் நெருக்கடி
ஏற்படுவதை தவிர்க்க இன்னுமொரு டியூஷன் சேர்ந்தான் ,ஏற்கனவே
கணக்கு , வேதியல் என்று இரண்டுக்கும் காலை நேரம் 6 டு 8 , இப்பொழுது இதற்க்கு மாலை 6 டு 7.எத்தனை டியூஷன் சென்றாலும் அங்கேயும் நந்தினி
நந்தினி நந்தினி தான்.
தேர்வு நாட்கள் வந்தது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு
நடைபெறுவதால் 11ஆம் வகுப்பு மதியம் தான் தொடங்கும். அந்த நாட்களில் கூட தேர்வு முடித்துவிட்டு அவள் வரும் வரை காத்திருந்து பார்த்த பின்பே செல்லுவான் ஆனால் இம்முறை டைரி மில்க் சாக்லேட் வைத்துகொண்டு காதலை தெரிவிக்க போகின்றேன் என்றே எல்லா தேர்வும் கடந்தது சாக்லேட் தினமும் கரைந்தது போனது. இறுதி தேர்வு முடிந்து அவளிடம் சென்றான் இம்முறை அவளும் இவனுக்காக காத்திருப்பது போல அவ்விடத்திலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டே இருந்தாள்.
பதற்றத்துடன் சென்றவன் இன்று சாக்லேட் கையில் இல்லை
வாங்க மறந்ததை நினைத்து கையை பிசைய அவள் எதேச்சையாக பார்த்துவிட்டாள்.
அருகில் சென்று நாந்தினி என்று அழைப்பது
அவனுக்குள்ளேயே கேட்டது அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை மீண்டும் ஒருமுறை
நந்தினி என்று அழைக்க
நந்தினி தன் செருப்பை ஒரு பார்வை பார்த்துவிட்டு
கிளம்பினாள்.
இவனின் கண்களில் கண்ணீர் நிறைந்தது அன்று அப்பொழுது
அவன் நினைத்ததை பின் ஒருநாளில் டைரியில் எழுதி வைத்துகொண்டான்,
"என் துயரம் நீ அறிய
என் உயிர் பிரிய வேண்டுமோ ???
"
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தது , அடித்து பிடித்து கார்த்திக் தேர்ச்சி பெற்றுவிட்டான் ஆனால் தான்
விரும்பும் படிப்பை படிக்க முடியவில்லை வீட்டில் இன்ஜினியரிங் தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறிவிட யோசித்தான்
"தன்னுடைய காதலுக்கு நந்தினியின் சம்மதம் மட்டுமே தேவை அவள் இறுதிவரை காதலிக்கவில்லை என்றாலும் கூட நன்கு பொறியியல் துறையில் படித்து சாதித்து பின் நம் வீட்டில் சொன்னால்
நிச்சயம் ஒற்றுகொள்வார்கள் ஏன் என்றால் அவளும் எங்கள் ஜாதி தான் அதனால்
எதிர்ப்பிற்கு காரணமே இருக்காது ஆக நான் நன்றாக படித்து முன்னேற வேண்டும் ஒரு
எஞ்சினியராக பொண்ணு கேட்டு போகலாம் " என்று நினைத்து படிக்க ஒற்றுகொண்டான்.
கார்த்திக் எடுத்த மதிப்பெண்ணிற்கு திருச்சியில் தான்
ஜே.ஜே கல்லூரியில் இடம் கிடைத்தது. முதல் முறை தன் சொந்தஊர் திருவையாறை விட்டு வெளியூரில் தங்கி படிக்க போகின்றான். தஞ்சாவூர் கல்லூரியில் தான் படிக்க ஆசை அப்பொழுது தான் தினமும் நந்தினியை பார்க்கலாம் அவளும் கண்டிப்பாக அக்களுரியில் தான் சேருவாள்
என்று நினைத்தவனுக்கு இது பேரதிர்ச்சி , இருந்தால் என்ன தான் எங்கே
இருந்தாலும் என் காதல் மாறபோவதில்லை என்று முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் அதுவரை வீட்டில் அடைபட்டு கட்டுபாடோடு இருந்தவனுக்கு அந்த சுதந்திரம் பரவசம் கொள்ளவைத்தது.
கல்லூரி வாழ்க்கை நான்கு வருடங்கள் கார்த்திக்கை
புரட்டிபோட்டது அவன் வாழ்க்கையை , அவ்வபோது ஊருக்கு செல்லும் போது
நந்தினியை எந்த நேரத்தில் காண முடியும் என்று தெளிவாக முடிவுசெய்துவிட்டே செல்வான்
அதுவும் ஒருநொடி பார்வைக்காக. நந்தினி பள்ளி முடித்து எந்த கல்லூரியில் சேருவாள்
என்று நினைத்தானோ அதே கல்லூரியில் தான் , தினமும் வீட்டில்
இருந்தே சென்று வந்துவிடலாம். அதில் இவனுக்கு அவ்வளவு சந்தோசம் ஏன்??? கல்லூரி விடுத்தி எப்படி இருக்கும் என்று தான் இவனுக்கு தெரிந்துவிட்டதே.
பார்த்தீகளா இங்கே பிறக்கின்றது இவனிடம் உள்ள ஆணாதிக்க திமிர். இப்பொழுது ஊருக்கு
வரும் பொழுது அவளை காணும் நேரம் ஒரு நொடியில் இருந்து சில மணித்துளிகள் ஆனது அவள்
கல்லூரி பேருந்து வரும் வரை. நந்தியும் இதை கவனிக்க தொடங்கினால் மாதம் மூன்று
நான்கு முறை அதில் அவன் வீடிற்கு கூட செல்ல மாட்டான் அவளை காண்பதற்காக மட்டுமே 65மைல்கள் வந்து செல்லுவான்.கல்லூரி நண்பர்கள் மற்றும் பள்ளி நண்பர்கள்
என்று அனைவரும் இவனின் 6வருட காதல் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிகொண்டனர். பல இரவுகள் நினைத்தவுடன் கண்ணீர் வருவதை உணர்ந்தான். காதல் இவன் நெஞ்சில் தெய்வமாக ஆனது.
அப்பொழுது நந்தினி முகநூளில் நிச்சயம் இருப்பால்
என்று தேடி பிடித்து நட்பு விண்ணப்பம் கொடுத்தான். அவன் தேடியது எல்லாம் விரிவாக
இங்கே கூற முடியவில்லை ஏற்கனவே நாவலாக வேண்டியது சிறுகதை ஆகிக்கொண்டு இருக்கின்றது
இதில் அதை விரிவாக எழுத முடியவில்லை. நந்தினி என்று தேடினால் குறைந்தது ஒரு 30 அல்ல நாற்பது நந்தினிகள் வரும் அதில் இவனுடைய நந்தினியை பிடித்தான்.
அன்றைய தினம் முதல் இவனின் பொழுதுபோக்கு பாதி நேரம் அவளின் பக்கத்தையே
பார்த்துகொண்டு இருப்பது எப்பொழுது தன்னை நட்பு வட்டத்தில் சேர்ப்பாள் என்றே
நினைத்து உருகினான்.பின் ஒரு முடிவாக அவளுக்கு தன்னுடைய மனதில் உள்ளதை
எழுதி(டைப்படித்து) உள்டப்பியில் அனுப்ப தொடங்கினான்.
Conversation started December 15, 2007
karthik
12/15, 1:31am
karthik
please read it....
ஹாய் நந்தினி ,
ரொம்ப கஷ்ட பட்டு உன்னை இதுல கண்டுபிடிச்சேன். நடப்பு விண்ணப்பம் தந்து இருக்கேன் ஆனா
நீ இன்னு அக்செப்ட் பண்ணலை.நீ என்ன எவ்ளோ வெறுத்தாலும் எனக்குள்ள இந்த 5 வருஷமா எந்த மாற்றமும் இல்லை உன்னை இன்னும் அதிகமா தான் நினைக்க தோணுது. உன்ன நினைச்சி எத்தனை நாள் நான் கலங்கி இருப்பேன்னு எனக்கு தான் தெரியும். எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை சத்தியமா
சொல்லுறேன் உன்னை தவிர எந்த பொன்னையும் நினைச்சி கூட பார்க்க தோணலை அப்போ 17 வயசுல என்ன நினைச்சி உன்ன காதலிக்க தொடங்கினேனோ இப்போ 21 வயசுல எந்த வித்தியாசமும் தெரியலை நான் உன் மேல வச்சிருக்குற அன்பு
மட்டும் என்னைக்கு மாற போறது இல்லை நந்தினி. உனக்காக தான் நான் இந்த படிப்பே
படிக்கிறேன் எந்த ஒரு சின்ன விஷயம் கூட தடங்களா இருக்க கூடாதுன்னு .இதை படிச்சி
திரும்ப என்ன வெறுத்தாலும் ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு எனக்கு எப்படி புரியவைப்பதுனு
தெரியலை. இதை சொல்லுறப்போ கூட கலங்குறேன்.என்ன புரிஞ்சிக்க ட்ரை பண்ணு நந்தினி. நமக்கான
லைப் காத்திருக்கிறது .
"உன்னை நினைத்து நினைத்து
என் நினைவற்று போகும் தருணம்
மிக அருகினில் தான் பெண்ணே ....! "
என்றும் உன் நினைவுடன்
கார்த்திக்
December 21, 2007
karthik
12/21, 3:05am
karthik
நந்தினி ப்ளீஸ் என்னை உன் நடப்பு வட்டத்துல
சேர்த்துக்கோ அந்த சந்தோசமாவுது கொடு. எதாச்சும் எண்ட பேச நினைச்சா ப்ளீஸ் இது தான் என் செல் நம்பர் காண்டக்ட் பண்ணு 9944229004
March 31, 2008
karthik
3/31, 11:27pm
karthik
நந்தினி how are u...
April 7, 2008
karthik
4/7, 11:53pm
karthik
hai நந்தினி how are u...my mail password
karthiknandhini and
my cell code nandhini and official mail password nandhini so anytime i am
remember u... i cant forget u...
April 13, 2008
karthik
4/13, 11:44pm
karthik
காதலின் வலிகள் வாழ்க்கையில் சுமைதான் மனதிற்கு அந்த வலி கூட சுகம்தான்.
May 10, 2008
karthik
5/10, 3:27am
karthik
i love u nandhini
9944229004 this is my anything tell to me pls call
this number am waiting till my life endddddddddddddd
May 25, 2008
karthik
5/25, 1:35am
karthik
hai nandhini thanks ur's update frist time in my
page thats your's chairman victory comment.... today my more and most important
day..... pls if u call to my number 9944229004 or karthiknandhi@live.com or karthiknandhi@gmail.com all mail passwords karthiknandhini
இப்படி உருகி உருகி நேசித்தவனின் கல்லூரி வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. அவனுடைய முழு தொகுப்பையும் இங்கே தெரிவிக்க
முடியவில்லை முன்னே கூறியது போல சிறுகதை என்பதால் பின் வரும் நாவலில் அனைத்தும்
வரும் இதோ அவனின் நான்கு வருட கல்லூரி எவ்வாறு கடந்தது என்பதற்கு அவனின் செமஸ்டர்
முடிவுகள்.
முதல் செம் - 5 அரியர்ஸ் எழுதிய 6 தேர்வுகளில்
இரண்டாம் செம் -7 அரியர்ஸ் எழுதிய 7+5=13
தேர்வுகளில்
மூன்றாம் செம் -11 அரியர்ஸ் எழுதிய 6+7=13
தேர்வுகளில்
நான்காம் செம் -14 அரியர்ஸ் எழுதிய 7+11=18
தேர்வுகளில்
ஐந்தாம் செம் - 18 அரியர்ஸ் எழுதிய 6+14=20
தேர்வுகளில்
ஆறாம் செம் -23 அரியர்ஸ் எழுதிய 7+18=25 தேர்வுகளில்
ஏழாம் செம் -15 அரியர்ஸ் எழுதிய 6+23=29 தேர்வுகளில்
எட்டாம் செம் -5 அரியர்ஸ் எழுதிய 3+15=18 தேர்வுகளில்
ஒன்பதாம் செம் -0 அரியர்ஸ் எழுதிய 5
தேர்வுகளில்
இப்படி இறுதிகட்டத்தில் தான் சுதாரித்து தன் இழக்கை
அடைந்தான், அதுவும் பட்டமளிப்பு விழாவின் போது கார்த்திக்கின் துறை மேலாளர் கட்டி
தழுவி பாராட்டியது என்றும் அவனால் மறக்க இயலாது. அதில் அவன் பெற்ற வெற்றி காதல்
காதல் காதல் அதற்காக மட்டுமே.இதோ கல்லூரி முடித்து தற்பொழுது சென்னைக்கு வேலைக்கு
வந்துவிட்டான். இங்கேயும் அவனின் நினைப்பு நிச்சயம் நந்தினி அடுத்த வருடம் கல்லூரி
முடித்து சென்னை தான் வருவாள் என்றே.
கார்த்திகை தீபம் அன்று இப்படி எழுதினான் நந்தினியை
நினைத்து
"அகல் விளக்கு கூட
அழகு விளக்காகும்
தேவதை நீ ஏற்றும் தீபத்தில்..."
****************************
"கார்த்திக் எங்க இருக்க ???"
"உன்கிட்ட தான் இருக்கேன் "
"டேய் விளையாடாத சீக்கிரம் வா
வீட்டுக்கு இன்விடேஷன் செலக்ட் பண்ண போகணும் "
"ஹே திரும்பி பாரு சந்தியா"
"ஹையோடா எப்போடா வந்த"
"இப்போதான் சரி சரி வா கிளம்பலாம்
அம்ம்மு"
"கொஞ்சுறத பாரு 2மினிட்ஸ்"
கார்த்திக்கும் சந்தியாவும் கிளம்பி வண்டியில் செல்ல
நினைக்கும் போது கார்த்திக் நடந்தே போகலாம் பக்கத்துலை தானே என்று இருவரும் நடந்தே
செல்லுகிறார்கள் கை கோர்த்து.
"சந்தியா உனக்கு ஒரு செம்ம
சஸ்பென்ஸ் இருக்கு"
"எனக்கு பிடிக்காதது கண்டிப்பா இருக்காது"
"ஹே எப்படி சொல்லுற ?"
"உனக்கு பிடிச்சது எனக்கு தான்
பிடிக்குமே"
"மொக்கை போடாத"
"ம்க்கும் ச்சீ போடா "
"நான் எழுதுறேன்னு சொன்னேன்ல ஒரு
நாவல்"
"ஆமா அதுக்குள்ள முடிச்சிட்டியா ???
"
"இல்லபா அதை ஒரு சிறுகதையா
சுருக்கிட்டேன் ஒரு போட்டிக்காக "
"ஓஹோ சரி அது என்ன கதை ப்ளீஸ்
சொல்லுடா"
"என்னோட லைப் தான் அந்த கதை"
"ஹை அப்போ நான் இருப்பேன்ல "
" நீ இன்னும் வரலை "
"நடிக்காத போடா சரி சரி நம்ம பேர்
என்ன வச்சிருக்க"
"கார்த்திக் - நந்தினி"
"நந்தினி நந்தினி நல்ல தான் இருக்குடா ஏன் சந்தியா பேர்
வைக்கல நீ மட்டும் உன் பேர வச்சிகிட்ட"
என்று செல்லமாக சண்டைபிடித்து கொண்டே சாலையில் காதல்
மழை பொழிந்தால் நந்தினி ச்ச சாரி சந்தியா.