ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 24 December 2013

போட்டிச் சிறுகதை-39

சிறுகதை-முகம்

கினாக்... கினாக்... கினாக்... 

snooze செய்து போன் அலாரம் அடுத்த ஐந்தாவது நிமிடத்திர்காக காத்திருந்தது!

என் மனமும் தான் ! செந்தில் , வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தில் SHIFT INCHARGE. சென்னையில் வேலைக்காக குடியேறிய பல லட்ச இளைஞர்களில் நானும் ஒருவன்.  
கினாக்... கினாக்... கினாக்... அலாரம் ஆப் செய்து என் காலை கடன்களை மாலையில் நிறைவேற்ற சென்றேன்.

"என்ன செந்தில் நைட் ஷிப்டா? பாக்கவே முடியல! " அடுத்த ரூம் நண்பனின் முகம் காண் விசாரிப்பு!

"என்ன பண்ண, மத்த ரெண்டுபேரும் புதுசா கல்யாணம் ஆனவங்க, மேனேஜர் கூப்பிட்டு ஒரு மாசத்துக்கு நைட் ஷிப்ட் பாருன்னு சொல்லிட்டார்" 
"அப்போ நீங்களும் கல்யாணம் பண்ணிட வேண்டியது தானே? "
"இங்க ஒரு ஷிப்ட்கே உயிர் போகுது! போய் நிம்மதியா சீரியல் பாத்துட்டு தூங்கு. எனக்கு ஷிப்ட்க்கு டைம்மாச்சு!"

படித்து முடித்தவுடன் நம் மீது பாயும் முதல் கேள்வி "என்ன தம்பி வேல கெடச்சிடுச்சா?"
வேலை கிடைத்தவுடன் 
 "எப்போ கல்யாணம்?"
இந்த இரு கேள்விகளுக்கும் பதறாத இளைஞர்களே இல்லை எனலாம்.

உடை மாற்றி வேலைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த தருணம்!
மாலை நேரம், நான் செல்ல வேண்டிய பேருந்து வந்துவிட்டது. 

மனிதாபி மானம், பொருமை என்று பல நல்ல குணங்களை தன் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கும் பெரியோர் இவை அனைத்தையும் மறந்த தருணம் தான் பேருந்தில் இடம் பிடிக்கும் தருணம்! ஆனால் இவைகளை கடைபிடித்து, படியில் பயணிக்கும் இளைஞர்களுக்கு மக்கள் கொடுக்கும் வாழ்த்து "இதெல்லாம் எங்க உருப்பட போகுது" இப்படி என்னுள் ஓடிய எண்ணங்களை கலைத்தது ஒரு குரல் "Excuse me" 

அந்த பெண்ணின் குரலோ, உருவமோ என்னை பாதிக்கவில்லை. ஆனால் அந்த முகம் என்னுள்  நினைவுட்டியதோ என் "தமிழ்ச்செல்வி".
இதில் "என் தமிழ்ச்செல்வி" என்று சொல்ல எனக்கு தகுதி உண்டா? இல்லை!!!


கல்லூரி காலங்களில் பேருந்து பயணத்தில் காணும் ஒரு சில முகங்களில் அவளும் ஒருத்தி. என்னுள் அவளுக்கு ஒரு இடம் உண்டு என்பதை உணர்ந்த நாள், அவளை காணாத அந்த நாள் தான். அவள் பெயரை தவிர வேறு ஏதும் அறியாத காரணம். நான் பிரஸ்ட் பெஞ்ச் ஸ்டூடெண்ட் என்பதால், பாடமா  பருவமா என்று என்னுள் நடந்த பல நாட்கள் பட்டிமன்றத்தில் வென்றது என்னவோ பாடம் தான். ஆனால் இழந்தது "தமிழ்ச்செல்வியை".


வழக்கமாக என் தூக்கத்தை மட்டும் கலைத்து வந்த என் மொபைல். இன்று, என் நினைவுகளை கலைத்தது. 

என் தாயின் அழைப்பு தான் அது.

"என்னப்ப வேலைல இருக்கியா?"
"இல்லம்மா இப்போ தான் போயிட்டு இருக்கேன், என்ன விஷயம்?"
"உனக்கு ஒரு பொண்ணு பாத்திருக்கோம், அருண் கிட்ட பொண்ணு போட்டோ மெயில் அனுப்ப சொல்லிருக்கேன். பாத்து புடிச்சிருக்கானு சொல்லு"

Description: https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjN1CXer91q4J6IyKwhWZZ2PGs_9O_j47L4M0a5nxyYAerFCF4fUpVAEX5T5rxWqDS8L4bq6OSu2mbJhhOvLqHdmHdTjCZvRt1yF8DC02PKwp06VIJrn9g5Vm5FjKkK5xWXALP0MBlsS6SdEo2LDYVU4cmPzQmaOw=s0-d-e1-ft
"இத்தனை நாளா பொண்ணு பாக்குறேன்னு தான் சொன்னீங்க! இப்போ பாத்து போட்டோவே அனுப்பிட்டீங்களா? இப்போ கல்யாணத்துக்கு என்னம்மா அவசரம்?"

"இன்னும் உனக்கு என்ன குழந்தைன்னு நெனப்பா? பொண்ணு புடிக்குதோ இல்லையோ உங்க அப்பாகிட்ட பேசிக்கோ"

வேலைக்கு சென்று ஈமெயில் செக் செய்தால்...
மறுமுறை  "தமிழ்ச்செல்வியின்" முகம் தான் நினைவூட்டியது!
ஆனால் இந்த முறை இது "என் தமிழ்ச்செல்வியின்" புகைப்படம் தான்!